கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.08.2025)
1) அனைத்துக் கோணத்திலும் பள்ளியைக் கண்காணிக்க வேண்டும் என்று
தலைமையாசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
2) இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பருவமழைக்கு வாய்ப்பு
உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3) மின்சார மகிழ்வுந்து (கார்) தொழிற்சாலையைத் திறந்து வைக்கவும்
முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார்.
4) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது
‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளாராக ‘வாத்தி’
படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5) துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வேட்புமனு வரும் 7
ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது.
6) பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் நாளை இந்தியா
வருகிறார்.
7) இத்தாலியைச் சேர்ந்த வாகன நிறுவனமான இவெகோவை இந்தியாவின்
டாடா வாகன நிறுவனம் கைப்பற்றியது.
8) நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் அவசர நிலை திரும்பப்
பெறப்பட்டுள்ளது.
9) பேராசிரியர் மற்றும் கல்வியாளர் வசந்ததேவி மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 87.
10) திரைப்பட நகைச்சுவை நடிகர் மதன்பாப் உடல்நலக் குறைவால்
காலமானார். அவருக்கு வயது 71.
11) நூடுல்ஸ், மென்ரொட்டி (பிரட்) சாப்பிடுவதால் நுரையீரல்
புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 41 சதவீதம் அதிகமாக உள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
12) சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.
Education & GK News
1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has
advised headmasters to monitor schools from all angles.
2) The Meteorological Department has said that there is
a possibility of more monsoon rains than usual this year.
3) Chief Minister M.K. Stalin is coming to Thoothukudi
today to inaugurate an electric car factory and participate in an investor
conference.
4) The National Award for Best Tamil Film for 2023 has
been given to the film ‘Parking’. G.V. Prakash Kumar, who composed music for
the film ‘Vaaththi’, has been selected as the best music composer.
5) The nomination for the election for the Vice
President will begin on the 7th. The election will be held on September 9.
6) Philippine President Ferdinand Marcos is coming to
India tomorrow.
7) Italian automobile company Iveco was acquired by
India’s Tata Motors.
8) The state of emergency has been lifted in Myanmar
after four and a half years.
9) Professor and educationist Vasantha Devi passed away
due to heart attack. She was 87 years old.
10) Film comedian Madanbab passed away due to health
problems. She was 71 years old.
11) American medical experts have said that the risk of
lung cancer is 41 percent higher due to eating noodles and bread.
12) 44 people died in the floods that occurred in China.
No comments:
Post a Comment