Tuesday, 16 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.06.2026

1) தமிழக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

2) தமிழகத்தின் உண்மையான மொத்தக் கடன் சுமை 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) 17 ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

4) நீட் தேர்வு முடியும் வரை இந்தியாவில் பிரபல தகவல் தொடர்பு செயலியான டெலிகிராம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

5) தமிழகத்தில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Finance Minister Mariya Wilson released a white paper yesterday.

2) It has been reported that Tamil Nadu's actual total debt burden has risen to Rs. 13.18 lakh crore.

3) The first session of the 17th Tamil Nadu Legislative Assembly begins tomorrow (June 18) with the Governor's address.

4) Telegram, a popular messaging app in India, has been temporarily blocked until the NEET examination concludes.

5) An allocation of Rs. 15,032 crore has been made to further strengthen the power infrastructure in Tamil Nadu.

பல கோடி நியூரான்களும் ஒரு கப் தியானமும்!

பல கோடி நியூரான்களும் ஒரு கப் தியானமும்!

தியானம் – ஒரு மென்டல் ஓவர்ஹால்!

தியானம் என்றவுடன் ஏதோ இமயமலைக்குச் சென்று தாடி வளர்த்துக்கொண்டு அமர்வது என்று நினைக்க வேண்டாம் என்பதை நாம் முன்பே சொல்லி விட்டோம். தியானம் என்பது ஒரு ஸ்பிரிச்சுவல் தெரபி. இன்னும் புரியும்படிச் சொன்னால், உங்கள் மூளை என்கிற சூப்பர் கம்ப்யூட்டருக்குத் தரும் ஒரு குயிக் ரீபூட்.

தியானத்தை விளக்குவது கஷ்டம், ஆனால் அனுபவிப்பது சுலபம். ஒரே நேரத்தில் ஆழமான அமைதியையும், கூர்மையான விழிப்புணர்வையும் அடைவதுதான் இதன் சோர்ஸ் கோட்.

தியானம் செய்யச் சரியான வழி, தவறான வழி என்று எதுவுமே கிடையாது. உங்களுக்குப் பிடித்த ஒரு பிம்பம், ஒரு சத்தம் அல்லது உங்கள் மூச்சு என இதில் எதாவது ஒன்றில் கவனத்தைக் குவியுங்கள்.

இடையில் உங்கள் கவனம் சிதறி வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்குமோ? என்று மூளை தாவினால், பரவாயில்லை. மெல்ல அதைக் காதைப் பிடித்து மீண்டும் நீங்கள் செலுத்தும் கவனத்தின் மீது உட்கார வையுங்கள். அவ்வளவுதான் விசயம்!

தியானம் செய்தால் ஞானம் கிடைக்கும், மன அமைதி வரும் என்று நினைத்து உட்காராதீர்கள். அப்படி நினைத்தால், அமைதி வந்து விட்டதா? இன்னும் வரவில்லையா? ஞானம் கிடைத்து விட்டதா? எப்போது கிடைக்கும்? என்று மனம் ஓடிக் கொண்டிருக்கும். தியானம் பண்ணும்போது நீங்கள் உலகத்துக்கே உருப்படாத ஓர் ஆளாக, சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

மூச்சைக் கவனிக்கும் போது, அடடா நான் மூச்சு விடுகிற லட்சணமே சரியில்லையோ, இடது மூக்கில் காற்று கம்மியாக வருகிறதோ, வலது மூக்கில் எல்லாம் அவுட்டோ என்று பிஹெச்டி அளவுக்குப் போய் விடக் கூடாது. உடல் எதையும் ஒழுங்காகத்தான் செய்யும் என்று நம்பிக்கை வையுங்கள். நீங்கள் வெறுமனே மூச்சைக் கவனியுங்கள். அது அப்படி இப்படி என எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம்.

தியானத்தில் உட்கார்ந்த உடனே, நாளைக்கு காலையில் என்ன குழம்பு வைக்கலாம்? அவன் அன்றைக்கு ஏன் அப்படி சொன்னான்? என்பன போன்ற உலகமகா சிந்தனைகள் எல்லாம் வரும். எண்ணங்களை அடக்க நினைப்பது ஓடுகின்ற ரயிலை கையை நீட்டி நிறுத்துவது போன்றது.

வருகின்ற எண்ணங்களை அப்படியே வேடிக்கை பாருங்கள். ஓஹோ. இப்போது நமக்கு இந்த மொக்கையான எண்ணம் வருகிறதா? என்று மனதை ஒரு மூன்றாவது மனிதர் போல வேடிக்கை பாருங்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள்.

நாம் ஏற்கனவே சொன்னபடி தியானம் செய்வதற்கு இமயமலைக்கு போக வேண்டாம், அமேசானில் ஸ்பெஷலாகப் பாயும் வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு சோபா, இல்லையென்றால் கட்டில் ஏன், கம்ப்யூட்டர் சேர் கூட அல்லது தரை கூட ஓகேதான். ஆனால், உட்கார்ந்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விழுந்து, அப்புறம் அது நித்ரா தியானம் ஆகி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்ய உட்காரும் போது மொபைலைச் சைலண்ட்டில் போடுவது போதாது. அதை அடுத்த அறையில் வைத்து விடுவது நலம். இல்லையென்றால், எந்தக் குரூப்பில் யார் மெசேஜ் போட்டிருப்பார்கள் என்பதற்கான இதயத் துடிப்பு உங்கள் ஆன்மாவை விட வேகமாகத் துடிக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தியானம் என்பது மூளையை ஆப் செய்வது இல்லை. மூளை பண்ணுகின்றற அலப்பறைகளை எல்லாம் பார்த்தபடி நீ நடத்து ராஜா என்று சும்மா உட்கார்ந்து பார்க்கிறதுதான். தினமும் ஒரு 10 நிமிஷம் இப்படி சும்மா இருக்கப் பழகுங்கள். அதுவே பெரிய தியானம்தான்!

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது என்பதை நாம் எத்தனையோ முறை சொல்லி விட்டோம். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்குத் தேவைப்படும் போதெல்லாம் இப்படி ஒரு ரீபூட் கொடுப்பது ஆரோக்கியம். அதை தியானம் அழகாகச் செய்து கொடுக்கும்.

எனக்குத் தியானம் வராது சார், என்று சொல்லாதீர்கள். உங்கள் மூச்சை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்கும் அந்த நொடியே நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இன்று இரவு படுக்கும்போது, ஓர் ஐந்து நிமிடம் எதையும் யோசிக்காமல் உங்கள் மூச்சை மட்டும் கவனித்துப் பாருங்களேன். அந்த ஓர் அமைதி வரும் பாருங்கள். அதுதான் நீங்கள் தேடும் நிம்மதி அல்லது அமைதி. அப்புறம், நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!

*****

Monday, 15 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.06.2026

1) தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

2) ஈரான் அமெரிக்க அமைதி ஒப்பந்தம் சூன் 19 இல் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

3) அரசு முறை பயணமாக ஸ்லோவாக்கிய சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை இந்திய சரக்குக் கப்பல் திஷா பாதுகாப்பாகக் கடந்தது.

5) கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை 4500 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

Education & General Knowledge News – 16.06.2026

1) Tamil Nadu Chief Minister Vijay has announced that the breakfast scheme currently implemented in Tamil Nadu government schools will be extended up to the eighth standard.

2) US President Donald Trump has announced that the Iran-US peace agreement is set to be signed on June 19.

3) Indian Prime Minister Narendra Modi received an enthusiastic welcome upon his arrival in Slovakia for an official visit.

4) The Indian cargo ship 'Disha' safely navigated through the Strait of Hormuz.

5) The price of gold has risen by more than Rs. 4,500 over the past four days.

******

வாழ்க்கைக்கான ரெப்ரெஷ் பட்டன்!

வாழ்க்கைக்கான ரெப்ரெஷ் பட்டன்!

வாழ்க்கை ஒரு ஹேங் ஆகிப் போன கம்ப்யூட்டர் போல இருக்கிறது பலருக்கு. அதற்கு ஒரு நல்ல ரெப்ரெஷ் பட்டன் இல்லையா என்றால், அதுதான் தூக்கம்.

ஒரு நல்ல தூக்கம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்பை இரண்டு மடங்காக்குகிறது.

பெட்ஷீட்டுக்குள் நுழைந்தும் தூக்கம் வரவில்லையா?

மல்லுக்கட்டாதீர்கள்.

தூக்கத்தைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தால், அதுவே ஒரு நெகட்டிவ் அசோசியேஷன் ஆகிவிடும்.

ஏன் தூக்கம் வரவில்லை? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக அலசுவோம்.

படுக்கையில் விழுந்ததும் போனை எடுத்து நோண்டுவது நம்மூர் தேசிய வியாதியாகிவிட்டது. பாதித் தூக்கத்தில் ஒரு கண் மூடியிருக்கும் நிலையிலும் லைக் போடுபவர்கள் இங்கே அதிகம். ஆனால், இந்த சின்னத் திரை உங்கள் மூளைக்குள் என்ன மாதிரியான ரசாயனக் கலவரத்தை உண்டாக்குகிறது தெரியுமா?

நம் மூளை ஒரு பழைய காலத்து கடிகாரம். சூரிய வெளிச்சத்தில் இருக்கும் ப்ளூ லைட் கண்ணில் பட்டால், மூளை மெலடோனின் என்கிற தூக்க ஹார்மோனை நிறுத்திவிட்டு, டேய் எழுந்துரு, விடிஞ்சிருச்சு! என்று அலாரம் அடிக்கும். இப்போது உங்கள் போன் திரையும் அதே ப்ளூ லைட்டை வீசுகிறது. விளைவு? உங்கள் பாடி கிளாக் குழம்பிப்போய், தூக்கம் வராமல் தவிக்கிறது.

பகலில் ஒரு வேலையில் மூழ்கிப் போவது நல்லது. ஆனால், இரவில் இன்னும் ஒரே ஒரு ரீல், இன்னும் ஒரே ஒரு லெவல் கேம், என்று ஆரம்பித்தால், மூளைக்குள் டோபமைன் எகிறும். இதற்குப் பெயர்தான் புளோ ஸ்டேட். இது ஒரு ஸ்வீட் பாய்சன். படுக்கையில் லைட்டை அணைக்க விடாமல் உங்களை ஆன்லைனில் வைத்திருக்கும் கில்லர் இது!

ஒருவழியாக போனை வைத்துவிட்டுத் தூங்கினாலும், பக்கத்தில் இருக்கும் போன் அதிர்ந்தாலோ அல்லது ஒரு மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்தாலோ உங்கள் தூக்கத்தின் சைக்கிள் உடைகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் கடைசி நிலைக்குப் போகும் முன் நீங்கள் விழித்தால், சிஸ்டம் மீண்டும் ரீபூட் ஆகி முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். காலையில் எழும்போது டயர்டாக இருப்பதற்கு இதுவே காரணம். ஸோ, போனை அவுட் ஆப் ஏரியாவுக்குள் தள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஸ்க்ரோலிங் கிடையாது. போன் என்பது ஒரு கருவிதான், அதுவே உங்கள் எஜமானன் ஆகிவிடக் கூடாது.

தூக்கம் வரலை சார், என்று சொல்லிக்கொண்டே போன் பார்ப்பது, நெருப்பு சுடுது என்று சொல்லிக்கொண்டே கையை நெருப்பில் வைப்பதற்குச் சமம்.

இரவு படுக்கைக்குப் போகும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே போனை ஆப் செய்யுங்கள். அல்லது, போனைத் தூரத்தில் வையுங்கள். உங்கள் கண்கள் நாளை காலை உங்களை நன்றியோடு பார்க்கும்.

இதற்கு மேலும் தூக்கம் வரவில்லை என்றால் மெல்ல எழுந்து வேறு அறைக்குச் செல்லுங்கள். ஏதாவது ரிலாக்ஸான காரியம் செய்யுங்கள். நிஜமாகவே கண்கள் சொருகும்போது மட்டும் பெட்டுக்குத் திரும்புங்கள். பெட் என்றால் தூக்கம் மட்டும்தான் என்கிற ஒரு கண்டிஷனிங்கை மூளைக்குக் கொடுங்கள்.

தூக்கத்திற்கு ஒரு வெல்கம் அட்ரஸ் கொடுக்க சில ஐடியாக்கள் உள்ளன.

ஒரு சின்ன லைட் ஸ்நாக்ஸ்.

சுடுதண்ணீர் குளியல்.

நாளைய வேலையைப் பட்டியலிடுவது. இதனால் மூளை அப்பாடா, இதெல்லாம் பேப்பரில் இருக்கிறது, நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை என்று ரிலாக்ஸ் ஆகும்.

ஒரு ஐந்து நிமிடம் தியானம் அல்லது ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயம். புத்தகம் படித்தால் ஸ்ட்ரெஸ் லெவல் குறைகிறதாம். அல்சைமர் வராமலும் இது தடுக்கிறதாம்.

கொஞ்சம் பொடி நடை கூட உதவும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது என்பதை நாம் முன்பே அறிந்ததுதான். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்கு அதிக லோடு கொடுக்காதீர்கள். புதிய பழக்கங்களை உருவாக்கப் பொறுமை தேவை.

இன்று இரவு படுக்கும்போது, ஒரு ஐந்து நிமிடம் நாளைய வேலைகளை ஒரு டைரியில் எழுதி வைத்துவிட்டுப் படுங்கள். உங்கள் மூளையில் இருக்கும் ரேம் காலியாகி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவிடும். நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!

*****

Sunday, 14 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.06.2026

1) நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2) 100 சதவீதம் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்த மத்திய அமைச்சகம் அனுமதித்துள்ளது.

3) பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

4) வங்கக் கடலில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. நேற்றிலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.

5) இந்தியா புத்தாக்கங்களின் தேசமாக திகழ்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.

6) மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை இந்திய அணி வென்றது.

Education & General Knowledge Updates – 15.06.2026

1) The hall ticket for the NEET re-examination has been released online.

2) The Union Ministry has granted permission to use 100% ethanol as fuel.

3) Prime Minister Narendra Modi has embarked on an official visit to France and Slovakia.

4) The fishing ban period in the Bay of Bengal has ended; fishermen resumed fishing operations yesterday.

5) French President Emmanuel Macron has praised India as a nation of innovation.

6) The Indian team won the Women's T20 World Cup cricket tournament.

*****

டூர் அன்ட் டிராவல் – டிக்கெட் டூ பீஸ்!

டூர் அன்ட் டிராவல் – டிக்கெட் டூ பீஸ்!

உலகம் இப்போது ஒரு இரைச்சல் பெட்டி. டெக்னாலஜி டார்ச்சர், டைம் பிரஷர் என இதிலிருந்து தப்பிக்கத்தான் நாம் லீவு போட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்புகிறோம். ஆனால், அங்கே ஒரு வேடிக்கை நடக்கும். நம்முடைய டைட் ஷெட்யூல் வொர்க்  லிஸ்ட்டையும், கவலையையும் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு வந்தாலும், அவை ஏதோ ஒரு ரகசிய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு நம்முடனேயே வந்துவிடும்.

ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து ஆபீஸ் மெயில் பார்ப்பது சுற்றுலா அல்ல. அந்தந்த ஊரின் காற்றை, மணத்தை, சுவையை அந்தந்த நொடியில் அனுபவிப்பதுதான் மைண்ட்புல் டிராவல்.

நம்மவர்கள் ஊருக்குக் கிளம்பும்போதே ஒரு பெர்பெக்ட் பிளான் வைத்திருப்பார்கள். மேகமில்லாத வானம், டிராபிக் இல்லாத ரோடு, சமர்த்தான குழந்தைகள் என இப்படி ஒரு கற்பனை.

உண்மை அப்படி இருக்காது. திடீரென்று மழை பெய்யும். பார்க்க வேண்டும் என்று பிளான் செய்து வைத்திருந்த மியூசியம் மூடியிருக்கும்.

ஐயோ, பிளான் சொதப்பிடுச்சே, என்று கவலைப்படாமல், ஒரு குடையை எடுத்துக் கொண்டு மழையை ரசியுங்கள். டிராவல் பிளானில் இல்லாத ஒரு சந்தைக் கடையைப் பார்த்தால் உள்ளே நுழைந்து வேடிக்கை பாருங்கள். எதிர்பார்ப்பைக் குறைத்தால் ஏமாற்றம் இருக்காது.

கிடைத்த மூன்று நாட்களில் அந்த ஊரின் எல்லா இடத்தையும் பார்த்தே தீரவேண்டும் என்று ஒரு வெறியோடு அலையக் கூடாது. காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை ஓட்டம் என்றால் அது சுற்றுலா அல்ல, ஒரு மராத்தான் ஓட்டம்.

உங்கள் டிராவல் பிளான் லிஸ்ட்டை இரண்டாகப் பிரியுங்கள். அதாவது, கட்டாயம் பார்க்க வேண்டியவை மற்றும் நேரம் இருந்தால் பார்க்கலாம் என இரண்டாக.

கட்டாயம் பார்க்க வேண்டியதை மட்டும் பிளான் செய்யுங்கள். மற்றதை உங்கள் அன்றைய எனர்ஜி லெவலுக்கு விட்டுவிடுங்கள். சும்மா ஓரிடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் ஓர் அலாதி இன்பம்தான்.

சுற்றுலா போவது என்பது போனில் ரீல்ஸ் போடுவதற்காக அல்ல. அவுட் ஆப் ஆபீஸ் மெசேஜைப் போட்டுவிட்டு, நோட்டிபிகேஷனை ஆப் செய்யுங்கள்.

போட்டோ எடுங்கள், தப்பில்லை. ஆனால் அது உங்கள் நினைவுகளுக்காக இருக்கட்டும், சோஷியல் மீடியா கன்டென்ட்டுக்கானதாக இருக்கக் கூடாது. அந்த லேண்ட்ஸ்கேப்பை உங்கள் கண்கள் முதலில் கேமரா இல்லாமல் பார்க்கட்டும்.

குரூப்பாகப் போகும்போது எல்லாரும் பார்க்கிற இடத்தைப் பார்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எல்லாரும் பாருக்குப் போகிறார்கள், உங்களுக்குப் பிடிக்கவில்லையா? போகாதீர்கள். ரூமில் உட்கார்ந்து ஒரு நாவல் படிக்கப் பிடிக்குமா? அதையே செய்யுங்கள்.

நீங்கள் வந்தது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க, கூட்டத்தில் ஒருவராகக் கஷ்டப்பட அல்ல. உங்கள் நேரத்தை உங்களுக்காகச் செலவழியுங்கள்.

போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு, அந்த ஊரின் சத்தங்களைக் கேளுங்கள். புது உணவின் சுவையை நிதானமாக அனுபவியுங்கள்.

லோக்கல் ஆட்கள் பேசினால் காது கொடுத்துக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். வியூ பாயிண்டில் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ராவாக நில்லுங்கள். இரவு தூங்கும் முன் அன்றைய தினத்தின் பிடித்தமான ஒரு விஷயத்தை டைரியில் குறியுங்கள். இது உங்கள் பயணத்தை இன்னும் ரிச் ஆக்கும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத சர்டிபிகேட் தேடல் கிடையாது. பயணம் என்பது புதிய இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, நம்மை நாமே புதிய கோணத்தில் பார்ப்பது.

எங்க போயிட்டு வந்தீங்க? என்று கேட்டால், எல்லா இடத்தையும் கவர் பண்ணிட்டோம், என்று சொல்லாதீர்கள். அந்த ஊர் மழை வாசனை இன்னும் என் மூக்கிலேயே இருக்கு, என்று சொல்லுங்கள். அதுதான் சக்சஸ்புல் பயணம்!

அடுத்த முறை டூர் போகும்போது, ஓர் அரை மணி நேரம் எதையுமே பார்க்காமல், எதையும் படம் பிடிக்காமல், அந்த ஊரின் ஒரு பெஞ்ச்சில் சும்மா உட்கார்ந்து பாருங்களேன். அந்த ஊரின் ஆன்மா உங்களோடு பேசும். உங்கள் மைண்ட்புல் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Saturday, 13 June 2026

நோ சொல்லுங்கள், பிழைத்துக் கொள்ளுங்கள்!

நோ சொல்லுங்கள், பிழைத்துக் கொள்ளுங்கள்!

குழந்தை முதலில் கற்கிற வார்த்தை அம்மா அல்ல, இல்லை என்பதுதான். ஆனால் வளர வளர, அந்த இரண்டு எழுத்து வார்த்தையைச் சொல்ல நமக்கு நாக்கு குழறுகிறது. அலுவலகத்தில் கூடுதல் வேலை, பிடிக்காத பார்ட்டி அழைப்பு, கடன் கேட்கும் நண்பன் என எல்லாவற்றிற்கும் யெஸ் சொல்லிவிட்டு, பிறகு தனியாக அமர்ந்து ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் யெஸ் என்பவர்கள் பாஸ்ட் லிவ்வர்களாகத்தான் இருப்பார்கள். எதற்கெல்லாம் நோ சொல்ல வேண்டும் என்று அறிந்தவர்கள்தான் ஸ்லோ லிவ்வர்களாக மாற முடியும்.

யெஸ், நோ என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்ததானே. நோ என்பது பயன்படுத்தக் கூடாத வார்த்தையில்லை. தேவையான போதும் அவசியமான போதும் பயன்படுத்த வேண்டிய அத்திவாசியமான வார்த்தை அது.

உளவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், யாருக்கெல்லாம் நோ சொல்லத் தெரியவில்லையோ, அவர்களுக்கு ஸ்ட்ரெஸ், பர்ன் அவுட் மற்றும் டிப்ரஷன் வர வாய்ப்பு அதிகம் என்கிறது.

நோ என்பது ஒரு நெகட்டிவ் வார்த்தை அல்ல; அது உங்கள் செல்ப் கேர்க்கான ஒரு பாசிட்டிவ் ஸ்டேட்மென்ட். நானும் ஒரு மனுஷன், எனக்கும் எல்லைகள் உண்டு என்கிற பிரகடனம் அது!

பழங்காலத்தில் மனிதன் கூட்டமாக வாழ்ந்தான். கூட்டத்தை விட்டு ஒதுக்கப்பட்டால் சாவு நிச்சயம். அந்த சர்வைவல் புத்திதான் இப்போதும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. மறுத்தால் நம்மை ஒதுக்கிவிடுவார்களோ? என்கிற பயம். ஆனால் இப்போது இது வாழ்வா சாவா போராட்டமல்ல; உங்கள் சாய்ஸ். மற்றவர்களுக்கு ஆக்சிஜன் மாஸ்க் மாட்டும் முன், உங்களுக்கு மாட்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் உயிருடன் இருந்து மற்றவர்களுக்கு உதவ முடியும்.

நோ சொல்வது முரட்டுத்தனமானது அல்ல. அதை இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றினால் அது பொருத்தமாக ஆகி விடும். உதாரணத்துக்குச் சில பார்ப்போம்.

வியாழக்கிழமை பிஸி, வெள்ளிக்கிழமை வேணுமானால் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? இது ஒரு மென்மையான மறுப்பு. இது ஒரு ஜென்டில் நோ.

எங்கிட்டே தனிப்பட்ட முறையில் கேட்டதுக்கு தேங்க்ஸ், ஆனால் இந்த புராஜெக்ட்டைச் சிவாததான் பார்த்துக்கிறார். ஸோ அவர்தான் இதுல முடிவு செய்யணும். இது தெளிவாக, நேராக நின்று சொல்வது. இது ஒரு அஸர்டிவ் நோ.

சாரி, எனக்கு இதில் விருப்பமில்லை. இப்படிச் சொல்லி விட்டால் மேட்டர் முடிந்தது. நீங்கள் எல்லோருக்கும் நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு ஸ்ட்ராங்கான நோ.

போதுவாக நோ சொல்லும் போது, ஏன் வர முடியாது என்பதற்குப் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்காதீர்கள். அது உங்களை பலவீனமாகக் காட்டும். இல்லை, என்னால் முடியாது, என்று சொல்லிவிட்டு ஒரு சின்ன மௌனத்தை விடுங்கள். அந்த மௌனத்தை அவர்களே நிரப்பிக்கொள்வார்கள்.

பயிற்சியே சிறந்த பயிற்சியாளர் என்பது போல இதற்கும் பயிற்சி தேவை. கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பாருங்கள். டெலிமார்க்கெட்டிங் கால்கள் வரும்போது நோ சொல்லிப் பழக ஆரம்பியுங்கள்.

நீங்கள் மறுத்த பிறகும் அவர்கள் வற்புறுத்தினால், அதே பதிலைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். புரிஞ்சுக்கோங்க, என்னால் வர முடியாது. ஐ அம் சாரி என்று சொல்லுங்கள். இதில் அதற்கு மேல் ஜஸ்டிபிகேஷன் தேவையில்லை.

மிகவும் வெற்றிகரமான மனிதர்கள் தங்களுக்கு ஒத்துவராத கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் நோதான் சொல்வார்கள் என்கிறார்கள்.

உறவுகளிலும் சரி, வேலையிலும் சரி, நீங்கள் எல்லா இடத்திலும் யெஸ் மனிதனாக இருந்தால், கடைசியில் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் போய்விடும்.

இன்று பிடிக்காத ஒரு விஷயத்திற்கு தைரியமாக நோ சொல்லிப் பாருங்களேன். அந்தச் சமயத்தில் உங்கள் மனதிற்குள் பிறக்கும் ஒரு சுதந்திர உணர்வு இருக்கிறதே. அதுதான் நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு!

*****

Friday, 12 June 2026

மெல்ல மெல்ல ஒரு வாழ்வியல் கையேடு!

மெல்ல மெல்ல ஒரு வாழ்வியல் கையேடு!

ஸ்லோ லிவ்விங் என்று நாம் இதுவரை பார்த்ததைத் தொகுத்தால், நீங்கள் வாழ்க்கையில் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

நம் காலை அலாரம் அடித்ததும் ஸ்னூஸ் பட்டனைத் தட்டிவிட்டு, தாமதமாக எழுந்து, கையில் கிடைத்ததை வாயில் திணித்துக் கொண்டு ஓடுவதாகவும், முடிவே இல்லாத வோர்க் லிஸ்ட்டுடன் மல்லுக்கட்டிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்து மொபைலை நோண்டியபடி ஒரு தூக்கமில்லா இரவைக் கழிப்பதாகவும் இருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு ரன்னிங் ரேஸ் அல்ல, நீங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் நிதானமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர்தான் ஸ்லோ லிவிங்.

ஒரே நேரத்தில் நான்கு வேலைகளைச் செய்வதால் நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள். உண்மையில், உங்கள் மூளை ஒரு டாஸ்க்கிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்போது அதன் திறன் குறைகிறது. போன் பேசிக்கொண்டே மெயில் தட்டாதீர்கள். போன் வந்தால் வேலையை நிறுத்திவிட்டுப் பேசுங்கள்.

ஒரு வேலையில் முழு மூச்சாக இறங்கும்போது மூளை ஒருவித தனித்த நிலைக்குச் செல்லும். அதுதான் உங்கள் உற்பத்தித் திறனையும், படைப்பாற்றலையும் எகிற வைக்கும்.

கம்ப்யூட்டரில் அல்லது மொபைலில் ஒரு ரிமைண்டர் செட் செய்யுங்கள். ஒரு நிமிடம். வெறும் ஒரு நிமிடம் மட்டும் அமைதியாக இருங்கள். இதை ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று முறையேனும் செய்து பாருங்கள். அதிகபட்சம் பத்து முறைகளுக்கு மேல் கூட போகலாம். உங்களின் எனர்ஜி ரீசார்ஜ் மெத்தெட் இது.

பதற்றமான பரபரப்பான நேரங்களில் ஐந்து முறை ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள். இது உங்கள் உடலின் ரிலாக்ஸேஷன் ரெஸ்பான்ஸைத் தட்டி எழுப்பும்.

அவ்வப்போது எழுந்து கைகளை நீட்டி நிமிருங்கள். தசைகளில் தேங்கியிருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை அது ரிலீஸ் செய்யும். அவசரம் அவசரமாக எடுக்கும் முடிவுகள் எப்போதுமே ரேஷனல் ஆக இருப்பதில்லை. ஸோ, அவசரத்துக்கு ஒரு குட்பை, நிதானத்துக்கு ஒரு வெல்கம் போர்டை எப்போதும் உங்கள் மனக்கண் முன் வைத்திருங்கள்.

ஒவ்வொரு முறை நீங்கள் வேலையை நிறுத்திவிட்டு மெயிலைச் செக் செய்யும்போதும், உங்கள் மூளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப 64 வினாடிகள் ஆகிறதாம். இது ஓர் ஆய்வு முடிவு. ஒரு வாரத்தில் எத்தனை மணிநேரம் இப்படி வேஸ்ட் ஆகிறது என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.

மற்றுமொரு ஆய்வு முடிவின்படி, அடிக்கடி டிஸ்ட்ராக்சன் ஆகும் ஊழியர்களின் ஐக்யூ  லெவல், கஞ்சா புகைப்பவர்களை விடவும் மோசமாகக் குறைகிறதாம்!

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று வேறு ஏதாவது ஞாபகம் வந்தால், அதை ஒரு பேப்பரில் குறித்து வைத்துவிட்டு உங்கள் வேலையைத் தொடருங்கள். சைட் ட்ராக் ஆகாதீர்கள்.

எதையும் ஒரு திறந்த மனதுடன் அணுகுங்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற அகந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு, ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் உலகைப் பாருங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத கியூ கிடையாது. நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உணவைச் சுவைப்பது, நிம்மதியாகத் தூங்குவது, இயற்கையோடு கனெக்ட் ஆவது போன்றவைதான் வாழ்க்கையின் சோர்ஸ் கோட்.

பேசும்போது மற்றவர் பேசுவதைக் குறுக்கிடாமல் முழுமையாகக் கேளுங்கள். ஆக்டிவ் லிசனிங் என்பது ஒரு பெரிய கலை. அது உங்கள் உறவுகளைச் சீரமைக்கும்.

இவை எல்லாம் நாம் முன்பே பார்த்தவைதான். முன்பே பார்த்தவற்றை ஏன் மீண்டும் இங்கே தொகுக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் என்னதான் நிதானத்தைப் பற்றிப் பேசினாலும், நினைத்துக் கொண்டிருந்தாலும் அதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு அவசரமும் பரபரப்பும் நமக்குப் பழக்கமாக இருக்கிறது. ஆகவே, இப்படி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் போதுதான் நிதானம் பழக்கமாகும்.

நாம் அடிக்கடி சொல்வதுதான். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பாருங்கள்.

இன்று காலையோ, மாலையோ உங்கள் போனை ஒரு அரை மணி நேரம் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பாருங்கள். உலகம் மெதுவாக இயங்குவதைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம்.

உங்கள் ஸ்லோ லிவிங் பயணம் தினசரி அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Thursday, 11 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.06.2026

1) டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்களுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

2) தமிழக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு விரைவாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

3) அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

4) தமிழகத்தில் ஜூன் 15 முதல் லாரி வாடகைக் கட்டணம் 25% உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5) இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கிக் கணித்துள்ளது.

Education & GK News

1) Speaking at the NITI Aayog meeting in Delhi, Prime Minister Narendra Modi emphasized that strong cooperation among states is essential for the country's development.

2) Tamil Nadu Chief Minister Vijay requested the speedy release of funds for infrastructure projects in the state during the NITI Aayog meeting.

3) An appointment system is set to be implemented in government hospitals to reduce patient waiting times.

4) It has been announced that lorry freight charges in Tamil Nadu will be increased by 25% starting June 15.

5) The Reserve Bank has projected the country's Gross Domestic Product (GDP) to be 6.9 percent for the current fiscal year.

ஒர்க் ப்ரம் பீஸ்!

ஒர்க் ப்ரம் பீஸ்!

நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த வேலை என்கிற வஸ்துவில்தான் கழிக்கிறோம். வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஆயுளின் பெரும் பங்கு ஆபீஸ் டேபிளிலேயோ, ஒர்க் ப்ளேஸ்லிலேயோ தேய்ந்து போகிறது.

ஆனால், அந்தச் சூழல், அது ஒர்க் ப்ரம் வீடோ அல்லது ஆபீஸோ உங்கள் மனநிலையைத் தீர்மானிக்கும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்சம் மைண்ட்புல் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால், உங்கள் ஒர்க் ஸ்பேஸை ஒரு அமைதிக் கூடமாக மாற்றலாம்.

முதலில் உங்கள் சீட்டில் அமருங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலோடு ஒரு சாட் செய்யுங்கள்.

முதுகு வலிக்கிறதா? மணிக்கட்டு டேபிளில் இடித்து மரத்துப் போகிறதா? டேபிளுக்கு அடியில் பழைய பைல் பாக்ஸ்களை அடுக்கி வைத்து, ஒவ்வொரு முறை காலை நீட்டும்போதும் அவை உங்கள் முட்டியில் இடிக்கிறதா?

இவை சின்ன விஷயங்கள் போலத் தோன்றும். ஆனால், இவை ஒவ்வொன்றும் உங்கள் மூளையின் பேக்கிரவுண்ட் மெமரியை உறிஞ்சும் மெல்லிய வைரஸ்கள்!

இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். சும்மா இல்லை, ஒரு துப்பறியும் நிபுணர் போலப் பாருங்கள்.

உங்கள் கீபோர்டு இடுக்குகளில் எவ்வளவு தூசி படிந்திருக்கிறது? ஸ்கிரீனில் எத்தனை விரல் ரேகைகள்?

உங்களைச் சுற்றி உங்களுக்குப் பிடித்த, உத்வேகம் தரும் பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? அல்லது வெறும் ஸ்டேப்ளர் பின்களும், பழைய டீ கப்புகளும்தான் மிச்சமா?

ஜன்னல் அழுக்காக இருக்கிறதா?

ஒரு டேபிள் லேம்ப் இருந்தால் வெளிச்சம் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்குமா?

கவனித்தால்தான் குறைகள் தெரியும்.

இவற்றையெல்லாம் கொஞ்சம் சரி செய்யுங்கள். சின்ன சின்ன மாற்றங்கள், பெரிய பெரிய முன்னேற்றங்கள்.

வாசனை என்பது மூளையின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு ஷார்ட்கட்.

ஒரு மூலிகை தேநீர் போட்டு அதன் வாசனையை ரசித்தபடி வேலையைத் தொடங்குங்கள். அந்த மணம் உங்கள் நரம்புகளைத் தட்டி எழுப்பும்.

ஆபீஸ் டெஸ்க் என்பது வெறும் மரம் அல்ல; அது உங்கள் போர்க்களம். அந்தப் போர்க்களத்தில் அமைதி நிலவினால்தான் உங்கள் அவுட்புட் பெர்பெக்ட் ஆக வரும்.

எல்லாம் சரியாத்தான் இருக்கு சார், என்று சொல்லாதீர்கள். ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால் தான் உங்கள் முதுகு சொல்லும் ரகசியம் உங்களுக்குப் புரியும்.

இன்று மாலை உங்கள் டேபிளுக்கு அடியில் இருக்கும் அந்தப் பழைய பெட்டிகளை அப்புறப்படுத்துங்கள். உங்கள் கால்களைச் சுதந்திரமாக நீட்டுங்கள்.

அந்தச் சின்ன இடைவெளி உங்கள் மனதிலும் ஒரு பெரிய ரிலாக்ஸை உருவாக்கும்.

உங்கள் கண் எதிரே உங்களை இன்ஷ்பிரேஷன் செய்யும் படங்கள் இருக்கட்டும்.

உங்கள் பீஸ்புல் ஒர்க் ஸ்பேஸ் அங்கிருந்து தொடங்கட்டும்!

****

Wednesday, 10 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.06.2026

1) இந்திய வரலாற்றில் 4,398 இந்தியப் பிரதமராகப் பதவி வகித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

2) மறைந்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

3) தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார்.

4) தமிழகத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என தமிழக அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

5) குஜராத்தில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மெட்டா கைகோர்த்துள்ளது.

6) ஈரானை கடுமையாக தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

7) கனடாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has set a new historical record by serving as India's Prime Minister for 4,398 days.

2) The mortal remains of the late 'Iyakkunar Imayam' Bharathiraja are being laid to rest today with full state honors.

3) Tamil Nadu Chief Minister Vijay has traveled to Delhi for a three-day visit.

4) The Tamil Nadu government has issued a strict order prohibiting the sale of alcohol to individuals under the age of 21.

5) Meta has partnered with Reliance to establish a massive artificial intelligence data center in Gujarat.

6) US President Donald Trump has warned that Iran will face a severe attack.

7) The Canadian government has imposed a sweeping ban on the use of social media by individuals under the age of 16.

லவ் யுவர்செல்ப் – ஒரு யுரேகா மொமெண்ட்!

லவ் யுவர்செல்ப் – ஒரு யுரேகா மொமெண்ட்!

உங்களை உங்களுக்குப் பிடிக்கிறதா?

என்ன சார் கேள்வி இது, எனக்காகத்தானே நான் மூச்சு விடுறேன்? என்று கேட்கலாம்.

ஆனால், பலரது மூளை ஒரு விசித்திரமான அல்காரிதத்தில் ஓடுகிறது.

நான் பத்து கிலோ எடை குறைத்த பிறகுதான் எனக்கு என்னைப் பிடிக்கும், பேங்க் பேலன்ஸ் ஆறு இலக்கத்தைத் தொட்டால்தான் நான் சக்சஸ் என நினைப்பேன் என்று நிபந்தனைகள் போட்டுக்கொண்டே இருக்கிறோம். அவை நிறைவேறுவதன் அடிப்படையில்தான் என்னை எனக்குப் பிடிக்கும் என்கின்ற பிடிவாதத்தோடு வாழ்கிறோம்.

உண்மை என்னவென்றால், செல்ப் லவ் என்பது ஓர் இலக்கல்ல; அது ஒரு மென்பொருள் அப்டேட். இப்போதே, இங்கே, இருக்கும் நிலையிலேயே உங்களை ஏற்றுக்கொள்வதுதான் அதன் சோர்ஸ் கோட்.

உங்களை உங்களுக்குப் பிடிக்க என்ன செய்வது?

உங்கள் நேரம், உங்கள் உழைப்பு, உங்கள் உணர்வுகள் என இவை எல்லாவற்றிற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. உங்களை மதிக்காத, உங்கள் எனர்ஜியை உறிஞ்சும் எமோஷனல் வேம்பயர்களைத் தள்ளி வையுங்கள். இந்த விசயத்தில் தூரம் என்பது சில சமயம் ஆரோக்கியமானது.

நோ என்று சொல்வது ஒரு கலை. மற்றவர்களுக்கு உங்கள் தேவைகளைத் தெளிவாகச் சொல்வது தப்பில்லை. எல்லைக் கோடுகளை வரைவது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் உங்கள் மன அமைதிக்கு அதுவே பாதுகாப்பு வேலி. லிமிட்டோடு இருப்பது அன்லிமிடெட் திருப்தியை வாரி வழங்கும்.

உங்களைப் பாராட்டி வந்த மெசேஜ்கள், மெயில்கள், கடிதங்கள் என இதையெல்லாம் ஒரு போல்டரில் போட்டு வையுங்கள். எப்போதாவது நாம் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றும் ரப்பிஷ் மொமென்ட்களில் அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எவ்வளவு ஆஸம் என்பது உங்களுக்கே புரியும்.

ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுங்கள். வாழ்க்கையில் நீங்கள் நன்றியோடு இருக்கும் மூன்று விஷயங்களை எழுதுங்கள். அப்புறம் இன்னும் ஒரு மூன்று. இது ஒரு பழைய டெக்னிக்தான், ஆனால் மூளையின் நெகட்டிவ் பயாஸை உடைக்க இதுவே சிறந்த சுத்தியல்.

நமக்கு நாமே மிகப்பெரிய விமர்சகர். கண்ணாடி முன்னால் நின்று, ஏன் இப்படி இருக்கே? என்று கேட்பதற்குப் பதில், ஒரு நல்ல நண்பனிடம் பேசுவது போலப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தும் சியர்லீடராக மாறுங்கள். நெகட்டிவ் சிந்தனைச் சுழலில் சிக்காதீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பரிசு. இந்த டிரஸை ஒரு விசேஷத்துக்குப் போட்டுக்கலாம், இந்த ஸ்கெட்ச் புக்கை அப்புறம் பயன்படுத்தலாம் என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். அந்த டிரஸைப் போடுங்கள், ருசியான உணவை சமைத்துச் சாப்பிடுங்கள். இன்றுதான் மிகச்சிறந்த விசேஷம்!

சந்தோஷம் என்பது ரொம்பவே வல்னரபிள். இவ்வளவு சந்தோஷமா இருக்கோமே, ஏதும் ஆகிடுமோ? என்கிற பயம் வரும். அந்தப் பயத்தை விரட்ட கிராட்டிட்யூட் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்களை நேசிப்பது என்பது ஏதோ சுயநலம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு அடிப்படைத் தேவை. உங்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களால் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்?

நாளை முதல் நான் மாறப்போகிறேன் என்பது ஒரு சடங்கு. இன்று எனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பது ஒரு சாதனை.

இன்று மாலை கண்ணாடியைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகை செய்யுங்கள். பரவாயில்லை, நீ ஒரு நல்ல ஆள்தான் என்று உங்களிடமே சொல்லிக்கொள்ளுங்கள். அந்த ஒரு நொடி உங்கள் மூளையின் டோபமைன் அளவை எகிற வைக்கும். உங்கள் செல்ப் லவ் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

லெட்ஸ் ஸ்டார்ட் யுவர் யுரேகா மொமெண்ட்!

*****

Tuesday, 9 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.06.2026

1) சிங்கப்பெண் அதிரடிப் படையைத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

2) தமிழக முதல்வர் இன்றுஅரசு முறைப் பயணமாக டில்லி செல்கிறார்.

3) நீட் மறுதேர்வு தவறில்லாமல் நடத்தப்படும் என தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

4) அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது.

5) நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay inaugurated the 'Singappenn' special task force.

2) The Tamil Nadu Chief Minister is traveling to Delhi today on an official visit.

3) Dharmendra Pradhan has stated that the NEET re-examination will be conducted without any errors.

4) A US court struck down the hike in H-1B visa fees implemented by US President Trump.

5) Chief Minister Vijay praised Tamil Nadu player Praggnanandhaa for his historic victory in the Norway Chess tournament and awarded him an incentive of Rs.50 lakh.

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ஏதோ ஸ்கூல் பீஸ் கட்டுவதோ, லஞ்ச் பாக்ஸ் பேக் செய்வதோ அல்ல. அது ஒரு சக மனிதரின் சுயமரியாதை எனும் மென்பொருளை உருவாக்குவதற்குச் சமம்.

சைக்காலஜிஸ்ட்டுகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் குழந்தையிடம் சரியாக கம்யூனிகேட் செய்யாவிட்டால், அவர்கள் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். அதாவது, அவர்களுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு, உங்களை உள்ளே விடமாட்டார்கள். அப்புறம் அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது.

அந்தச் சின்னஞ்சிறு மூளைகளுடன் எப்படி ஒரு ஹெல்தி ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்வது?

உங்கள் நெருங்கிய நண்பர் ஒரு கதை சொல்லும்போது பாதியிலேயே தடுத்துவிட்டு, இரு, வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்கு என்று போனைப் பார்ப்பீர்களா? மாட்டீர்கள்தானே. அதே மரியாதையை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். நீங்கள் அடிக்கடி குறுக்கிட்டால், நான் சொல்வது அப்பாவிற்கு முக்கியமில்லை, என்கிற மெசேஜ் அவர்கள் அடிமனதில் பதிவாகிவிடும். அவர்களுக்குச் செவி கொடுப்பதுதான் ஹெல்தி ரிலேஷன்ஷிப்பிற்கான முதல் படி.

முக்கியமான விஷயங்களை நாலு பேருக்கு முன்னால் வைத்துப் பேசாதீர்கள். மற்றவர்கள் முன்னால் அவர்களைச் சங்கடப்படுத்துவது, எதிர்காலத்தில் உங்கள் மேல் ஒரு தீராத பகையையும், வெறுப்பையும்  உண்டாக்கும். எதற்கும் ஒரு தனிமை தேவை. அவர்களின் உணர்வுகளை மதிப்பது இரண்டாவது படி.

சின்னக் குழந்தைகளிடம் பேசும்போது, கோபுரம் போல உயர்ந்து நின்று பேசாதீர்கள். அவர்களின் உயரத்திற்கு இறங்கி வந்து, கண்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி  வைத்துப் பேசுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தருவதுதான் மூன்றாவது படி.

குழந்தைகள் எதையாவது சொல்லும்போது, ம்... அப்புறம்?, இது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே, இன்னும் கொஞ்சம் சொல்லேன் போன்ற டோர் ஓப்பனர் வாசகங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொனி உண்மையாக இருக்க வேண்டும். ஓப்பனா பேசு என்று சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது டிவியைப் பார்த்தால் இது ஒர்க்அவுட் ஆகாது! அவர்களைச் சுவாரசியப்படுத்துவது நான்காவது படி.

பயங்கரக் கோபமாக இருக்கும்போது எமர்ஜென்சி இல்லை என்றால், உடனே ரியாக்ட் செய்யாதீர்கள். கொஞ்சம் நிதானமாக, ஆப்ஜெக்டிவ் ஆகப் பேசுங்கள். மிக முக்கியமாக, குழந்தைகளை லேபிள் செய்யாதீர்கள். அதாவது, தவறு, நீ ஒரு முட்டாள் குழந்தை என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். கோபம் உண்டாகும் சூழலிலும் அவர்களை மதித்து எதிர்மறையாக ரியாக்ட் செய்யாமல் இருப்பது ஐந்தாவது படி.

குழந்தைகள் செய்த செயல் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அந்த குழந்தைகள் தவறானவர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே உங்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்கிற நம்பிக்கையில் இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடனான ஹெல்தி ரிலேஷன்ஷிப்பின் ரகசியம். அதற்கு மேற்படி ஐந்து படிகளும் உங்களுக்கு உதவும்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு லேபரட்டரி சோதனை போன்றது. அங்கே அன்பும், புரிதலும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நான் உன் அப்பா, நான் சொல்றதக் கேளு, என்கிற பழைய காலத்து அல்காரிதம் இப்போது எடுபடாது.

நவீன யுகத்தில் குழந்தைகளுக்குத் தேவைப்படுவது ஒரு அத்தாரிட்டி அல்ல; ஒரு மெண்டார். அவர்களை ஒரு தனி மனிதனாக மதிக்கக் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் அவர்கள் ஒரு அற்புதமான மனிதராக மலர்வார்கள்.

இன்று மாலை உங்கள் குழந்தை பள்ளி முடிந்து வரும்போது, செல்போனைத் தள்ளி வைத்துவிட்டு, அவர்கள் உயரத்திற்கு இறங்கி உட்கார்ந்து, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன ஸ்பெஷல்? என்று கேட்டுப் பாருங்களேன். அந்த ஒரு நொடியிலேயே உங்கள் இருவருக்கும் இடையிலான பெரிய சுவரைத் தகர்த்தெறியலாம்.

*****