Saturday, 4 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.10.2025)

1) முதல்வர் திறனறித் தேர்வுக்கான கையேட்டைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

2) நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் (ஐடிஐ) தற்சார்பு இந்தியாவின் பயிற்சியகங்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள உரிமை கோரப்படாத 1.84 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை உரிய ஆவணங்களை அளித்துச் சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளும் ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

4) மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

5) பீகாரில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த அம்மாநில அரசியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

6) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘அக்சர்’ எனும் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

7) பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் அக்டோபர் 8 அன்று அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.

8) ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தயாகச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

9) இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

10) அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது என அமெரிக்காவின் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வது எனவும், ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi released the module for the Chief Minister's Aptitude Test.

2) Prime Minister Narendra Modi has said that the industrial training institutes (ITIs) in the country are the training centers of a self-reliant India.

3) Finance Minister Nirmala Sitharaman launched the 'Your Money, Your Rights' scheme, under which the concerned parties will get access to unclaimed funds worth Rs 1.84 lakh crore in banks and financial institutions by providing the necessary documents.

4) Water inflow to Mettur Dam has increased.

5) The Bihar state's parties have requested the Election Commission to hold elections in a single phase in Bihar.

6) The indigenously manufactured patrol ship 'Axar' was dedicated to the country.

7) British Prime Minister Keir Starmer is to visit India on October 8 on a state visit.

8) Sane Dayakachi has been elected as the first woman Prime Minister of Japan.

9) Hamas has accepted US President Donald Trump's plan to end the Israel-Hamas war.

10) A US federal appeals court has ruled that the Trump administration cannot overturn the birthright citizenship of children born to temporary residents in the United States. The court said that citizenship is determined based on the actions of a child's parents, and the mere fact that a person was born in the United States confers that right.

No comments:

Post a Comment