கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.10.2025)
1) முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கூட
நுழைவுச் சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2) 165 கோடியில் கட்டப்பட்ட சிஜடி நகர் மற்றும் தி நகரை இணைக்கும்
உயர்மட்ட மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3) தங்கத்தின் விலை சவரனுக்கு 87000 ஐக் கடந்தது. விரைவில்
ஒரு லட்சத்தைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4) ஆயுத பூஜையை முன்னிட்டுப் பூக்களின் விலை உயர்ந்தது.
5) அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எழுப்பும் கருவி
கட்டாயம் ஆகிறது.
6) எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட
விபத்தில் சிக்கி 9 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
7) இன்று வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8) இதுவரை இந்தியாவில் வழக்கத்தை விட 8 சதவீதம் கூடுதலாக மழை
பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Education & GK News
1) The hall ticket for recruitment exam for the post of
Post Graduate Teacher can be downloaded from the website from today.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the
high-level flyover connecting CIT Nagar and T Nagar, built at a cost of 165
crores.
3) The price of gold has crossed 87000 per sovereign. It
is expected to cross one lakh soon.
4) The price of flowers has increased in view of the
Ayudha Puja.
5) Artificial sound devices are mandatory in all
electric vehicles.
6) 9 workers from the northern states died in an
accident during the construction work of the Ennore Thermal Power Plant.
7) The Meteorological Department has said that a storm
signal is likely to form in the Bay of Bengal today.
8) The India Meteorological Department has said that so
far India has received 8 percent more rain than usual.