வாக்காளர் எண்ணின் பாகம் எண், வரிசை எண் அறிய…
வாக்காளர் அடையாள
அட்டையின் எண்ணைக் கொண்டு பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய கீழே உள்ள இணையதள இணைப்பைச்
சொடுக்கவும்.
*****
வாக்காளர் எண்ணின் பாகம் எண், வரிசை எண் அறிய…
வாக்காளர் அடையாள
அட்டையின் எண்ணைக் கொண்டு பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய கீழே உள்ள இணையதள இணைப்பைச்
சொடுக்கவும்.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.10.2025)
1) பழங்குடியின மாணவர்கள்
பள்ளி செல்ல புதிய வாகனங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி
வைத்தார்.
2) தமிழக அரசின் பொதுத்துறை
ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படுவதாகத்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
3) ஆனைமலை, கோழிக்கமுத்தியில்
யானைப் பாகன்களுக்கான பிரத்யேக கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4) நவம்பர் 6 மற்றும்
11 ஆகிய தினங்களில் இரு கட்டங்களாகப் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5) உச்சநீதி மன்ற
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசித் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்துக்குப்
பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
6) ஜெய்பூர் அரசு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
7) தங்கம் விலை சவரனுக்கு
89000 ரூபாயை எட்டியது.
Education & General Knowledge News (07.10.2025)
1) Tamil Nadu
Chief Minister M.K. Stalin flagged off new vehicles for tribal students to go
to school.
2) The Tamil
Nadu government has announced a 20 percent bonus for public sector employees of
the Tamil Nadu government on the occasion of Diwali.
3) Chief
Minister M.K. Stalin inaugurated a special village for elephant herders in
Anaimalai, Kozhikamuthi.
4) Bihar
assembly election dates have been announced in two phases on November 6 and 11.
5) Prime
Minister Narendra Modi has condemned the incident of an attempt to attack
Supreme Court Chief Justice P.R. Kawai by throwing a shoe.
6) 6 people died
in a fire accident at a Jaipur government hospital.
7) Gold prices
reached Rs 89,000 per sovereign.
General Elections To TNLA 2026 – Particulars Form
General Elections To TNLA 2026 – Particulars Form வடிவத்தைக் கீழே காண்க.
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.10.2025)
1) மக்களுக்கு இடையூறுகள்
இன்றி மழைக்கால ஆயத்தப் பணிகளை முடிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2) நாளை முதல் மெரினாவில்
சீரமைக்கப்பட்ட நீச்சல் குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.
3) மேற்கு வங்கத்தில்
ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர்.
4) நேபாளத்தில் கனமழை,
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
5) வெள்ளியின் தொழிற்சாலை
பயன்பாடு அதிகரித்து வருவதால் தொடர்ந்து வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.
6) தமிழகத்தில் அக்டோபர்
9 வரை பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Education & General Knowledge News (06.10.2025)
1) Tamil Nadu Chief Minister M.K.
Stalin has ordered to complete the monsoon preparations without any hindrance
to the people.
2) The renovated swimming pool at
Marina will be open to the public from tomorrow.
3) 23 people have died in a landslide
in West Bengal.
4) 52 people have died in heavy
rains, floods and landslides in Nepal.
5) The price of silver is
continuously increasing due to increasing industrial use of silver.
6) The Meteorological Department has
said that there is a possibility of heavy rain in Tamil Nadu till October 9.
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.10.2025)
1) முதல்வர் திறனறித் தேர்வுக்கான கையேட்டைப் பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
2) நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் (ஐடிஐ) தற்சார்பு
இந்தியாவின் பயிற்சியகங்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள உரிமை கோரப்படாத
1.84 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை உரிய ஆவணங்களை அளித்துச் சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக்
கொள்ளும் ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி
வைத்தார்.
4) மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
5) பீகாரில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த அம்மாநில அரசியில்
கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
6) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘அக்சர்’ எனும் ரோந்து கப்பல்
நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
7) பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் அக்டோபர் 8 அன்று அரசு
முறைப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.
8) ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தயாகச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
9) இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.
10) அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்குப் பிறக்கும்
குழந்தைகளுக்குப் பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ரத்து
செய்ய முடியாது என அமெரிக்காவின் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து
முடிவு செய்வது எனவும், ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த
உரிமையை வழங்குகிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Education & GK News
1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi
released the module for the Chief Minister's Aptitude Test.
2) Prime Minister Narendra Modi has said that the
industrial training institutes (ITIs) in the country are the training centers
of a self-reliant India.
3) Finance Minister Nirmala Sitharaman launched the
'Your Money, Your Rights' scheme, under which the concerned parties will get
access to unclaimed funds worth Rs 1.84 lakh crore in banks and financial
institutions by providing the necessary documents.
4) Water inflow to Mettur Dam has increased.
5) The Bihar state's parties have requested the Election
Commission to hold elections in a single phase in Bihar.
6) The indigenously manufactured patrol ship 'Axar' was
dedicated to the country.
7) British Prime Minister Keir Starmer is to visit India
on October 8 on a state visit.
8) Sane Dayakachi has been elected as the first woman
Prime Minister of Japan.
9) Hamas has accepted US President Donald Trump's plan
to end the Israel-Hamas war.
10) A US federal appeals court has ruled that the Trump
administration cannot overturn the birthright citizenship of children born to
temporary residents in the United States. The court said that citizenship is
determined based on the actions of a child's parents, and the mere fact that a
person was born in the United States confers that right.
உங்களுடன் பத்துக்குப் பத்து! - 10
1) தற்கால
ஐன்ஸ்டீன் எனப்படுபவர் யார்?
2) சீனாவில்
சிவன் கோயிலைக் கட்டிய அரசரின் பெயர் என்ன?
3) பிழையன்று
என்று ஏற்றுக் கொள்ளப்படுவது இலக்கணத்தில் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
4) நானோ
டெக்னாலஜி என்பதன் தமிழாக்கம் என்ன?
5) ராகுல்ஜியின்
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலைத் தமிழில் முதலில் மொழி பெயர்த்தவர் யார்?
6) நீதி
வெண்பா என்ற நூலின் ஆசிரியர் யார்?
7) பரஞ்சோதி
முனிவர் பிறந்த ஊர் எது?
8)
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது.” என்ற குறளைப் பொருள் கொள்ளும் முறை யாது?
9) விசாரணைக்
கமிஷன் எனும் சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினத்தை எழுதியவர் யார்?
10)
பேராயக் கட்சி எனப்படும் கட்சி எது?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
உங்களுடன் பத்துக்குப் பத்து – 10 – விடைகள்!
1) ஸ்டீபன்
ஹாக்கிங்
2) குப்லாய்கான்
3) வழுவமைதி
4) மீநுண்
தொழில்நுட்பம்
5) கண.
முத்தையா
6) செய்குத்
தம்பிப் பாவலர்
7) வேதாரண்யம்
8) நிரல்
நிறை பொருள்கோள்
9) சா.
கந்தசாமி
10)
காங்கிரஸ் கட்சி
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.10.2025)
1) நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும்
திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது.
2) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செலுத்தப்படும் காசோலைகளுக்கு
அடுத்த 1 மணி நேரத்தில் பணம் வழங்க புதிய காசோலை முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3) கரூரில் த .வெ.க தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில்
41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழுவை அஸ்ரா கார்க் தலைமையில்
உயர்நீதி மன்றம் அமைத்தது.
4) கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
விண்ணப்பித்திருந்த முன்பிணை கோரிக்கையை உயர்நீதி மன்றம் நிராகரித்தது.
5) அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கும் வரை எந்த ஒரு
கட்சிக்கும் சாலை உலா பிராச்சாரத்துக்கு அனுமதி கிடையாது என உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
6) கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் ஜனவரி 2026 இல் திறக்கப்பட
உள்ளது.
7) அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி,
வரிக்கழுதைப் புலி, கூம்புத்தலை மஹ்சீர் மீன் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு கோடி மதிப்பீட்டில்
பாதுகாப்புத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
8) நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து
கொள்வதாக தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.
Education & GK News
1) The scheme of disbursing cheques within one hour
across the country will be implemented in banks from today.
2) A new cheque system has been arranged to disburse
cheques drawn between 10 am and 4 pm within the next 1 hour.
3) The High Court has constituted a special
investigation team headed by Asra Garg regarding the incident in which 41
people died at a campaign rally held by TVK leader Vijay in Karur.
4) The High Court has rejected the anticipatory bail
application filed by the TVK executives
in connection with the Karur incident.
5) The High Court has said that no party will be allowed
to conduct roadshows until the government formulates guidelines.
6) An open-air museum in Keezhadi is to be opened in
January 2026.
7) The Tamil Nadu government has announced a
conservation plan worth Rs 1 crore to protect the endangered lion-tailed
macaque, Chennai hedgehog, striped hyena and hump-headed mahseer fish.
8) A National Crime Records Bureau report has said that
one farmer commits suicide every hour in the country.
உங்களுடன் பத்துக்குப் பத்து! - 9
1) வற்றல்
– இலக்கணக்குறிப்பு தருக.
2) தமிழ்
புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
3) வெண்பாவிற்
புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான் எனப் புலவர்களைப் புகழ்ந்தவர் யார்?
4) மகபுகுவஞ்சி
என்ற நூலை எழுதியவர் யார்?
5) முதல்
தமிழ்க் கணினியின் பெயர் என்ன?
6)
“வளி மிகின் வலி இல்லை” என்றவர் யார்?
7) தொங்கான்
என்ற சொல் எதைக் குறிப்பது?
8)
“விருந்தும் அன்றி விளைவன யாவை” என்றவர் யார்?
9) விதை
நெல்லை அரித்து வந்து விருந்தோம்பியவர் யார்?
10)
கரிசல் தங்கம் எனப்படுவது எது?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
உங்களுடன் பத்துக்குப் பத்து – 9 – விடைகள்!
1) தொழிலாகுபெயர்
2) ந.
பிச்சமூர்த்தி
3) பலபட்டைச்
சொக்கநாதப் புலவர்
4) பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
5) திருவள்ளுவர்
6) ஐயூர்
முடவனார்
7) கப்பல்
8) கம்பர்
9) இளையான்குடி
மாறன் நாயனார்
10)
கம்பு
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.10.2025)
1) மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான
கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்துக்குத் தமிழகத்தில் தடை விதிகப்பட்டுள்ளது.
2) சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில்
மத்திய பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும், உத்தர பிரதேசம் மூன்றாமிடத்திலும்
உள்ளன.
3) நெல் கொள்முதலில் விவசாயிகளின் நலனை உறுதிபடுத்துமாறு அதிகாரிகளுக்குத்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4) வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை
என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5) 500 பில்லியன் டாலர் மதிப்போடு உலகின் பணக்காரர் பட்டியலில்
எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
Education & GK News
1) The cough medicine Goldtrip, which has killed 6
children in Madhya Pradesh, has been banned in Tamil Nadu.
2) Madhya Pradesh is at the top of the list of states
with the highest number of crimes against children, followed by Maharashtra and
Uttar Pradesh.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered
officials to ensure the welfare of farmers in paddy procurement.
4) The Reserve Bank of India has said that there is no
change in the interest rates for banks.
5) Elon Musk is at the top of the list of the richest
people in the world with a net worth of $ 500 billion.
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.10.2025)
1) மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி குடியரசுத்
தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மலர் தூவி மரியாதை
செய்தார்.
2) நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட
8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3) வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மையம் வலு பெற்றுள்ளதால்
எண்ணூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல்எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
4) இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய
தேதிகளில் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.
5) இந்திய பணக்காரர்களின் பட்டியலில் அம்பானி முதலிடத்தையும்,
அதானி இரண்டாமிடத்தையும், ரோஷிணி நாடார் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
6) செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.89 லட்சம்
கோடியாக உள்ளது.
7) தனக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
Education & GK News
1) On the occasion of Mahatma Gandhi's 157th birth
anniversary, President Draupadi Murmu paid floral tributes at Rajghat, the
memorial of Mahatma Gandhi.
2) A heavy rain warning has been issued for 8 districts
including Chengalpattu, Tiruvannamalai and Kanchipuram tomorrow.
3) Cyclone Warning Cage No. 1 has been hoisted at Ennore
Port as the depression in the Bay of Bengal has strengthened.
4) Russian President Vladimir Putin is scheduled to
visit India on December 5 and 6 on an official visit.
5) Ambani tops the list of India's richest people, Adani
second, and Roshni Nadar third.
6) The Goods and Services Tax collection for September
is Rs 1.89 lakh crore.
7) US President Donald Trump has insisted that he should
be awarded the Nobel Peace Prize.
உங்களுடன் பத்துக்குப் பத்து! - 8
1) இந்திய
விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
2) இளைய
கலாம் எனப் போற்றப்படுபவர் யார்?
3)
2014 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
4) இந்தியாவின்
முதல் பொது நூலகம் எது?
5) கரும்பலகை
யுத்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
6) செப்புத்
திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய ஆட்சிக் காலம்?
7) பைஞ்சுதை
என்பது என்ன?
8) பெரியார்
கேட்டுக் கொண்டதற்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை வகுத்தவர் யார்?
9) இந்திய
தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) நிறுவியவர் யார்?
10)
தமிழின் முதல் விருத்தக் காப்பியம் எது?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
உங்களுடன் பத்துக்குப் பத்து – 8 – விடைகள்!
1) விக்ரம்
சாராபாய்
2) மயில்சாமி
அண்ணாதுரை
3) கைலாஷ்
சத்தியார்த்தி
4) திருவனந்தபுரம்
நூலகம்
5) மலாலா
6) சோழர்
காலம்
7) சிமெண்ட்
8) புலவர்
குழந்தை
9) மோகன்
சிங்
10)
சீவக சிந்தாமணி
*****
உங்களுடன் பத்துக்குப் பத்து! - 7
1) அம்பேத்கருடன்
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத் தலைவர் யார்?
2) திராவிடம்
என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
3)
“தமிழ் வடமொழியின் மகளன்று” என்று சொன்னவர் யார்?
4)
“இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என உரைக்கும் நூல் எது?
5) வாயில்
இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?
6)
‘மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
7) இந்திய
நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
8) “உணவெனப்
படுவது நிலத்தொடு நீரே” என்றவர் யார்?
9) தண்டலை
ஆசான், நன்னூல் புலவர் எனப் போற்றப்படுபவர் யார்?
10)
தானியங்கிப் பணம் எடுக்கும் கருவியை (ஏடிஎம்) உருவாக்கியவர் யார்?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
உங்களுடன் பத்துக்குப் பத்து – 7 – விடைகள்!
1) இரட்டைமலை
சீனிவாசன்
2) குமரிலபட்டர்
3) கால்டுவெல்
4) பிங்கல
நிகண்டு
5) தூது
6) மணவை
முஸ்தபா
7) ஆர்தர்
காட்டன்
8) குடபுலவியனார்
9) சீத்தலைச்
சாத்தனார்
10)
ஜான் ஷெப்பர்டு பாரன்
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.10.2025)
1) முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கூட
நுழைவுச் சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2) 165 கோடியில் கட்டப்பட்ட சிஜடி நகர் மற்றும் தி நகரை இணைக்கும்
உயர்மட்ட மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3) தங்கத்தின் விலை சவரனுக்கு 87000 ஐக் கடந்தது. விரைவில்
ஒரு லட்சத்தைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4) ஆயுத பூஜையை முன்னிட்டுப் பூக்களின் விலை உயர்ந்தது.
5) அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எழுப்பும் கருவி
கட்டாயம் ஆகிறது.
6) எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட
விபத்தில் சிக்கி 9 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
7) இன்று வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8) இதுவரை இந்தியாவில் வழக்கத்தை விட 8 சதவீதம் கூடுதலாக மழை
பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Education & GK News
1) The hall ticket for recruitment exam for the post of
Post Graduate Teacher can be downloaded from the website from today.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the
high-level flyover connecting CIT Nagar and T Nagar, built at a cost of 165
crores.
3) The price of gold has crossed 87000 per sovereign. It
is expected to cross one lakh soon.
4) The price of flowers has increased in view of the
Ayudha Puja.
5) Artificial sound devices are mandatory in all
electric vehicles.
6) 9 workers from the northern states died in an
accident during the construction work of the Ennore Thermal Power Plant.
7) The Meteorological Department has said that a storm
signal is likely to form in the Bay of Bengal today.
8) The India Meteorological Department has said that so
far India has received 8 percent more rain than usual.