Thursday, 31 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.08.2025)

1) தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) சிறுவர்கள் யூடியூப் பயன்படுத்துவதை ஆஸ்திரேலியா தடை செய்துள்ளது.

3) 10 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வருகை தந்தார். 5 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

4) திறன்பேசிகளின் (ஸ்மார்ட்போன்) விற்பனை இந்தியாவில் 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

5) இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் 667 புலிகள் இறந்துள்ளன. மகாராஷ்டி மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இறந்துள்ளன.

6) தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் வெப்பநிலை கடந்தது.

7) இந்தியா வரிவிதிப்பின் ராஜாவாகத் திகழ்வதாகவும் விரைவில் இந்தியப் பொருளாதாரம் சவக்குழிக்குள் சென்று விடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has said that the enrollment in Tamil Nadu government schools has crossed 4 lakh.

2) Australia has banned children from using YouTube.

3) After a 10-day rest, Chief Minister M.K. Stalin visited the Secretariat today. He launched 5 projects.

4) Smartphone sales have grown by 8 percent in India.

5) 667 tigers have died in India in five years. The highest number of tigers have died in the state of Maharashtra.

6) The temperature is gradually increasing in Tamil Nadu. In some places, the temperature has crossed 100 degrees Fahrenheit.

7) US President Donald Trump has strongly criticized India for being the king of taxation and that the Indian economy will soon go into the grave.

Wednesday, 30 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (31.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (31.07.2025)

1) அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2) பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியாகும்.

3) ரஷ்யா, ஜப்பான் நாடுகளை 13 அடி உயரம் வரை எழுந்த சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது. சுனாமிக்குக் காரணமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவானது.

4) பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 இல் தமிழகம் வருகிறார்.

5) விவசாயிகளுக்கான பி.எம். கிசான் உதவித்தொகை ஆகஸ்ட் 2 இல் விடுவிக்கப்படுகிறது.

6) இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிறைநிறுத்தப்பட்டது.

7) இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது நாளையிலிருந்து அமலுக்கு வரும்.

Education & GK News

1) Times magazine has reported that India has the second best universities after the US.

2) The time table for the 10th, 11th and 12th class public exams will be released in October.

3) A powerful tsunami that rose up to 13 feet high hit Russia and Japan. The earthquake that caused the tsunami was recorded as 8.7 on the Richter scale.

4) Prime Minister Narendra Modi will visit Tamil Nadu on August 26.

5) PM Kisan subsidy for farmers will be released on August 2.

6) The Nisar satellite jointly developed by ISRO and NASA was successfully launched into space.

7) US President Donald Trump announced a 25 percent tariff on India. This will come into effect from tomorrow.

Tuesday, 29 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.07.2025)

1) இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீடு எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

2) ஆபரேஷன் மகாதேவ் மூலமாக பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

3) சென்னை மாநகரில் மகளிர் மட்டும் மற்றும் மாணவர்கள் மட்டும் செல்லும் சிறப்புப் பேருந்துகளை சென்னை மாநகராட்சி விரைவில் இயக்க உள்ளது.

4) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 1.25 லட்சம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

5) காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6) பிரளய் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

7) நிகழாண்டில் 183 தொழில்நுட்ப கோளாறுகள் விமானங்களில் கண்டறியப்பட்டுச் சரி செய்யப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Education & GK News

1) The central government has clarified that there was no interference by US President Donald Trump in the India-Pakistan ceasefire.

2) The Indian Army has killed the terrorists involved in the Bagalham attack through Operation Mahadev.

3) The Chennai Corporation will soon operate special buses for women only and students only in Chennai.

4) The Cauvery water entering Hogenakkal has increased to 1.25 lakh cubic feet.

5) A flood warning has been issued for people along the banks of the Cauvery.

6) India has successfully tested the Pralay missile.

7) The central government has clarified that 183 technical faults were detected and fixed in aircraft this year.

Monday, 28 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.07.2025)

1) மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகங்களில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடப்பகுதி இடம் பெற உள்ளது.

2) நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது.

3) அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

4) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் இடம் பெற்ற இளையராஜாவின் இசை நிகழ்வுக்குப் பிரதமர் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

5) இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழனுக்குச் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

6) தமிழகத்தில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

7) டிசம்பரில் ஆளில்லாத விண்கலமும், 2027 இல் மனிதரையும் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ உள்ளதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

8) கர்நாடக அணைகள் நிரம்பியதால் காவிரியில் ஒரு லட்சம் கன அடி நீரை வெளியேற்றி வருகிறது கர்நாடகம்.

9) கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

10) டிசிஎஸ் நிறுவனம் 12000 பணியாளர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

11) ஜார்ஜியாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா சாதனையாளர் பட்டம் வென்றார்.

12) 35 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டரில் நடைபெற்ற மட்டைப்பந்து போட்டியில் சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டுல்கர் அங்கு சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Education & GK News

1) A section on Operation Sindoor is to be included in the Central Board of Secondary Education textbooks.

2) More than half of the children in 63 districts across the country are malnourished.

3) Chief Minister M.K. Stalin returned home normaly after completing treatment at Apollo Hospital.

4) The Prime Minister stood up and applauded Ilayaraja's musical performance at a function held in Gangaikonda Cholapuram.

5) Prime Minister Narendra Modi has announced that statues will be erected for Rajarajan and Rajendra Chola.

6) 12,208 fair price shops in Tamil Nadu have been given ISO quality certificates.

7) ISRO is planning to send an unmanned spacecraft in December and a human into space by 2027, its chairman Narayanan has said.

8) Karnataka is releasing one lakh cubic feet of water into the Cauvery as Karnataka's dams are full.

9) Heavy rains in Kerala are filling the dams there rapidly.

10) TCS has laid off 12,000 employees.

11) Indian player Divya won the championship in a chess tournament held in Georgia.

12) After 35 years, Shubman Gill, Jadeja and Washington Sundar have scored centuries in a cricket match held in Manchester. It is noteworthy that Tendulkar scored a century there 35 years ago.

Sunday, 27 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.07.2025)

1) தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளதாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க கல்வி நிறுவனங்களில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) நம்பகமான உலகத் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபம் டொனால்ட் டிரம்புக்கு எட்டாம் இடம் கிடைத்துள்ளது.

4) கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நாணயத்தைப் பிரதமர் வெளியிட்டார்.

5) உத்திரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் மானசா தேவி கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

6) இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு 2 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

7) மாலத்தீவுக்கு 4850 கோடி கடன் உதவி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

8) இந்நிதியாண்டின் காலாண்டில் இந்திய வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

Education & GK News

1) Deputy Chief Minister Udhayanidhi Stalin has proudly stated that Tamil Nadu is the only state where there is no dropout rate in primary education.

2) The Supreme Court has ordered that psychological counselors should be appointed in educational institutions to prevent student suicides.

3) Indian Prime Minister Narendra Modi has topped the list of trusted world leaders. US President Donald Trump has got the eighth position.

4) The Prime Minister released a Rajendra Chola coin at the Aadi Thiruvadhirai ceremony in Gangaikonda Cholapuram.

5) 6 people have died in a stampede at the Manasa Devi temple in Haridwar, Uttarakhand.

6) A free trade agreement has been signed between India and Britain. This is likely to provide trade opportunities worth Rs 2 lakh crore to India.

7) India has decided to provide a line of credit of Rs 4850 crore to the Maldives.

8) Indian vehicle exports have increased by 22 percent in the first quarter of this fiscal.

Saturday, 26 July 2025

கலியுக கர்ணன்களே ‘எஸ்க்ரோ’ கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!

கலியுக கர்ணன்களே ‘எஸ்க்ரோ’ கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவி செய்வதற்காக இணையவழியில் பண பரிவர்த்தனை (ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பும் போது) செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

திடீரென அவசரத் தேவை எனும் போதோ, ஒரு பொருளை இணைய வழியில் வாங்கித் தருமாறு வேண்டும் போதோ நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் இது ஒரு சிறிய உதவிதானே என்று இணைய வழியில் பண பரிவர்த்தனை (ஆன்லைன் டிரான்சாக்ஸன்) மூலமாகப் பலரும் உதவி வருகின்றனர்.

‘ரொம்ப அவசரம்’ என நண்பரோ, உறவினரோ பணம் கேட்கும் போது, கொண்டு போய் கொடுக்கக் கூட நேரமும் அவகாசமும் இல்லாத போது என்ன செய்வது? பலரும் ஜிபே மூலமாகப் பணத்தை நொடியில் அனுப்பி விடுகின்றனர்.

“எனக்கு இணைய வழியில் (ஆன்லைனில்) ஒரு பொருளை வாங்கத் தெரியாது. ஆகவே அந்தப் பொருளை இணைய வழியில் எனக்காக நீ பணம் செலுத்தி வாங்கித் தந்து விடு. நான் உன்னிடம் பணமாகத் தந்து விடுகிறேன்.” என நண்பர்களோ, உறவினர்களோ சொல்லும் போது, இந்த உதவியைக் கூட செய்யா விட்டால் எப்படி என்று ஜிபே மூலமாகவோ வங்கிச் செயலி மூலமாகவோ செய்து விடுகின்றனர்.

“தற்போது என் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. பத்தாயிரம் பணம் போட்டு விடு. நாளை சம்பளம் வந்து விடும். உடனே நான் உன் கணக்கில் போட்டு விடுகிறேன்.” என்று நெருங்கியவர்கள் கேட்கும் போது உடனே காரியத்தில் பலர் இறங்கி விடுகின்றனர்.

“கையில் பணமாக உள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இல்லை. ஆகவே இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, உன் வங்கிக் கணக்கிலிருந்து என் வங்கிக் கணக்குக்குப் பணம் போட்டு விடு.” என்று கேட்பவர்களிடம் என்ன செய்வது என்று இணையவழிப் பணபரிமாற்றம் செய்து விடுபவர்களும் இருக்கின்றனர்.

“எனக்கு இந்த ஜிபே பண்ணும் போது எண்களைத் தவறாகப் போட்டு மாற்றி செய்து விடுகிறேன். ஆகவே இந்த எண்ணுக்கு நீ பண்ணி விடு. உன்னுடைய எண் என் தொடர்பில் இருப்பதால் அதைப் பயன்படுத்தி நான் சரியாக அனுப்பி விடுகிறேன்.” எனக் கேட்கும் போது ஐயோ பாவம் என்று உதவி செய்ய இறங்கி விடுபவர்களும் உண்டு.

இச்சிறு உதவி மூலம் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால், இப்பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரிக் கண்காணிப்பில் வருகின்றன.

உங்கள் கணக்கிலிருந்து அதிக அளவு தொகையைச் செலுத்துவதும் அல்லது உங்கள் கணக்கிற்கு அதிக அளவு பணம் வருவதும் தன்னிச்சையாகவே வருமான வரிக் கண்காணிப்பில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் மூலமாகப் போய் சேர்ந்து விடும். இதற்கு வருமான வரித் துறையிலிருந்து விளக்கம் கேட்டால் உரிய விளக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

மற்றவர்களுக்காக உதவப் போய், நீங்கள் செலுத்திய பணத்திற்காக, உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வரும் போது அது உங்கள் வருமானமாகக் கருதப்படும் என்பதால் மற்றவர் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் பணம் குறித்து நீங்கள் ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொள்ள வேண்டும். இது போன்ற ஒப்பந்தங்கள் எழுதியிருந்தால்தான் நீங்கள் வருமான வரித் துறை விசாரணைகளுக்கு உரிய விளக்கங்கள் வழங்க முடியும்.

இதைத் தவிர்க்கவும், உங்கள் உதவி செய்யும் மனப்பான்மைக்குப் பங்கம் நேரிடாமல் இருக்கவும் நீங்கள் வங்கியில் எஸ்க்ரோ கணக்கைத் (Escrow Account) துவங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வருமான வரித்துறையின் கண்காணிப்பிலிருந்து விடுபடலாம்.

இக்கணக்கில் உங்கள் இருப்பு எப்போதும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இந்தக் கணக்கிலிருந்து நீங்கள் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமானால்,  யாருக்குப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமோ அவருக்கும் எஸ்க்ரோ கணக்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

ஆகவே, எஸ்க்ரோ கணக்கைத் துவங்கிக் கொள்ளுங்கள். கலியுக கர்ணனாகிக் கலக்குங்கள்!

*****

Thursday, 24 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.07.2025)

1) 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

2) அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பித்தல் நேற்றிலிருந்து தொடங்கியது.

4) முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. அவர் இரண்டு நாட்களில் நலமுடன் வீடு திரும்புவார்.

5) தமிழகத்தில் தென்காசி, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, நெல்லை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6) தமிழகத்தின் குளிர்ந்த வானிலை காரணமாக 1000 மெகா வாட் மின்தேவை குறைந்தது.

7) மக்களவையில் தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

8) இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீட்டு விற்பனை 32 சதவீதம் சரிந்தது.

9) பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனிலிருந்து இன்று மாலத்தீவு வருகிறார். நாளை அங்கிருந்து தமிழகம் வருகிறார்.

10) தொடர்ச்சியாக 25 ஆவது முறையாக இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) Deputy Chief Minister Udhayanidhi Stalin issued the appointment order for 2457 secondary teachers yesterday.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the enrollment in government primary schools has increased to 3.94 lakh.

3) Online application for admission to traditional medical courses such as Siddha, Ayurveda, Unani and Homeopathy has started from yesterday.

4) Chief Minister M.K. Stalin underwent an angiogram at Apollo Hospital. He will return home normaly in two days.

5) Heavy rain warning has been issued for six districts in Tamil Nadu including Tenkasi, Theni, Nilgiris, Kanyakumari, Coimbatore and Nellai.

6) Power demand decreased by 1000 megawatts due to cold weather in Tamil Nadu.

7) National Sports Administration Bill was introduced in the Lok Sabha.

8) House sales fell by 32 percent in seven major cities of India.

9) Prime Minister Narendra Modi is arriving in the Maldives from Britain today. From there, he will return to Tamil Nadu tomorrow.

10) US President Donald Trump has said that he has stopped the India-Pakistan war for the 25th time in a row.