Friday, 15 May 2026

சிரிப்பு யோகா – மூளைக்குள் ஒரு கச்சேரி!

சிரிப்பு யோகா – மூளைக்குள் ஒரு கச்சேரி!

ஒரு பூங்காவில் எல்லாரும் வட்டமா நின்றார்கள். எல்லாரும் சிரிப்போம் என்றார்கள். முதலில் ஜோக் சொன்னார்கள். பிறகு மொக்கை ஜோக் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் ஜோக் தீர்ந்துபோய்விட்டது. அப்போதுதான் அந்த ஐடியா உதித்தது. ஜோக் எதற்கு? காரணமே இல்லாமல் சிரித்தால் என்ன?

அப்படித்தான் பிறந்தது ஹாஸ்ய யோகா. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளப்புகள் கொல்லென்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.

நமது உடம்பிற்கும் மூளைக்கும் ஒரு சின்ன பலவீனம் இருக்கிறது. நாம் ஒரு நகைச்சுவையைப் பார்த்து சிரிக்கிறோமா அல்லது சும்மா ஆக்டிங் கொடுத்துச் சிரிக்கிறோமா என்று அதற்குத் தெரியாது. இரண்டுக்குமே அது ஒரே மாதிரியான பலன்களைத்தான் தரும்.

சிரிக்கும்போது எண்டார்பின் மற்றும் டோபமைன் போன்ற பீல் குட் கெமிக்கல்கள் ரத்தத்தில் கலக்கின்றன.

ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோல் லெவல் டக்கென்று குறைகிறது.

ஆழமான மூச்சுப் பயிற்சி பிளஸ் சிரிப்பு - இதுதான் இதற்கான பார்முலா.

உங்கள் நாளை எப்படி ஆரம்பிக்கிறீர்கள் என்பதுதான் அந்த நாள் எப்படிப் போகும் என்பதைத் தீர்மானிக்கிறது.

காலையில் இரண்டு நிமிடம் வெயிலில் நின்றால் மூளைக்கு ஹேப்பி சிக்னல் போகும்.

தினமும் காலையில் ஒரு நோட்டில், இன்று எனக்குக் கிடைத்த மூன்று நல்ல விஷயங்கள் என்று எழுதிப் பாருங்கள். இது உங்கள் மூளையின் நியூரல் பாத்வேஸை இது ரீவொயர் செய்யும். குழந்தையின் சிரிப்பு, நல்ல காபி என இப்படிச் சின்ன விஷயங்களாகக் கூட இருக்கலாம்.

இது எப்படி வேலை செய்கிறது என்கிறீர்களா?

சிரிப்பு கிளப்பில் என்ன செய்வார்கள்? ஒரு வட்டத்தில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிப்பார்கள்.

முதலில் இது ஒரு போலி சிரிப்பாகத் தெரிந்தாலும், பக்கத்தில் இருப்பவர் சிரிப்பதைப் பார்க்கும்போது அது தானாகவே தொற்றிக்கொள்ளும். கடைசியில் அது நிஜமான சிரிப்பாக மாறிவிடும்.

ஆய்வுகளின்படி, சிரிப்பு யோகா ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தூக்கமின்மையைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் தனிமை மற்றும் மரண பயத்தை விரட்ட இது ஒரு சிறந்த டானிக்.

சிரிப்பதற்கு நமக்கு ஒரு காரணம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதுதான் தப்பு. சிரிப்பதே ஒரு காரணம்தான், சந்தோஷமாக இருப்பதற்கு! நாளைக் காலையில் கண்ணாடியைப் பார்த்து ஒரு ஹா ஹா போடுங்கள்.

பைசா செலவில்லாமல் சிரிப்பதில் ஒரு மகத்துவம் அதன் மூலம் பலனுள்ள மருத்துவம் கிடைக்கிறது என்றால், அதை ஏன் விட வேண்டும்.

சிரிக்கத் தொடங்குங்கள். கவலைகளை எரிக்கத் தொடங்குங்கள்.

*****

No comments:

Post a Comment