இருவேறு பொருளாதார வர்க்கத்திலிருந்து கல்வி கற்கும் இரு வேறு மாணவர்களின் உளவியலைப் பேசும் குறும்படம்!
Friday, 1 December 2017
கைநாட்டு - குறும்படம்
இருவேறு பொருளாதார வர்க்கத்திலிருந்து கல்வி கற்கும் இரு வேறு மாணவர்களின் உளவியலைப் பேசும் குறும்படம்!
Friday, 3 November 2017
saami sathiyamaa! - Short film
Saami Sathiyamaa! - a short film created using shcool children in 2014 for preventing alcoholism which is amature one.
Thursday, 19 October 2017
En Kuppai En Kadamai
En Kuppai En Kadamai - A Short Film for Clean India Project - Won First Prize in District Level Tiruvarur
Wednesday, 18 October 2017
Saturday, 14 October 2017
Dengu Awareness
This is a Dengu Awarness notice in Tamil. You can print in A4 Sheet and get 2 copies to give.
https://drive.google.com/open?id=0B-nUMtVLQUCZdm1XcndVY2pybnc
Tuesday, 5 September 2017
Friday, 1 September 2017
Friday, 25 August 2017
M.A. Tamil II yr. 2.5. Ilakkiya Thiranayviyal
Alagappa University
M.A. Tamil 2nd Year
2.5. Ilakkiya Thiranayviyal
M.A. Tamil II yr. 2.4. Sitrilakkiyangal
Alagappa University
M.A. Tamil 2nd Year
2.4. Sitrilakkiyangal
Thursday, 24 August 2017
M.A. Tamil II yr. 2.3. Kappiyangal
Alagappa University
M.A. Tamil 2nd Year
2.3. Kappiyangal
https://drive.google.com/open?id=0B-nUMtVLQUCZQ3cyb3N4VS0zQjQTuesday, 22 August 2017
M.A. Tamil II yr. 2.2. Sanga Ilakiyangal
Alagappa University
M.A. Tamil 2nd Year
2.2. Sanga Ilakkiyangal
Monday, 21 August 2017
M.A. Tamil II yr. 2.1. Tolkappiyam - Porulathikaram
Alagappa University
M.A. Tamil 2nd Year
2.1. Tolkappiyam - Porulathikaram
Saturday, 5 August 2017
V.O.C. - A Thirukural Researcher
வ.உ.சி. - திருக்குறள் ஆய்வாளர்
வ.உ.சிதம்பரம் (பிள்ளை)
அவர்களை சுதந்திரப் போராட்ட வீரராக நாடறியும். திலகரின் வழியில் நின்ற வீரர். அவர்
சிறந்த தமிழறிஞரும் கூட. சிறந்த பேச்சாளர்.
வ.உ.சி.க்கு இரட்டை
ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு இப்படிச் சொல்கிறது, 'சிதம்பரம் பிள்ளையின்
பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும்.
புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.'
திருக்குறளுக்கு அவர்
எழுதிய உரை கவனிக்கத்தக்கது. அவருக்கு பரிமேலழகர் உரையில் ஈடுபாடில்லை. மணக்குடவரின்
உரையே வ.வ.சி.யை கவர்கிறது. மணக்குடவர் உரையைத் தேடி முதலில் பதிப்பத்தவரும் அவரே.
திருக்குறளுக்கு முதல் உரை செய்தவராக மணக்குடவர் குறிப்பிடப்படுகிறார்.
ஜேம்ஸ் ஆலனின் தன்முன்னேற்ற
நூல்கள் நான்கையிம் வ.உ.சி. மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூல் அக்காலத்தே கல்லூரிப்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றிருக்கிறது. மகாகவி பாரதி அவர்களும்,
'இது மொழிபெயர்ப்பு என்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில்
சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம்' என்கிறார். மொழியாக்க நூல்களிலும்
அவரது திருக்குறளின் வீச்சும், தாக்கமும் வியப்பிற்குரியது.
திருக்குறளுக்கு உரை
கண்ட வகையிலும், திருக்குறள் மணக்குடவர் உரையைப் பதிப்பித்த வகையிலும், திருக்குறளை
ஆய்ந்து மெய்யறம் என்று நூலை எழுதிய வகையிலும் வ.உ.சி. அவர்கள் திருக்குறள் ஆர்வலராகவும்,
திருக்குறள் ஆய்வாளராகவும் கொள்ளத்தக்கவர்.
- பா.விஜயராமன்
*****
Saturday, 24 June 2017
Grandfa is always Grandfa
தாத்தா தாத்தாதான்!
"உப்போ அறிவுரையோ வேண்டப்படாமல்
கொட்டி விடாதீர்கள்!" என்ற பொன்மொழி குறித்து எனக்குத் தெரிந்த சுமார் 90 வயது
நிரம்பிய தாத்தாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.
"நிசந்தானப்பா! அறிவுரங்கறது (அறிவுரை
என்பது) வெளக்கெண்ண, வேப்பெண்ண (விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்) மாதிரி. கொடுக்குறவனுக்கு
குஷாலத்தான் இருக்கும். குடிக்கிறவனுக்கு மெர்சலா இருக்கும்!" என்றார்.
எளிமையாகப் பொருள் விளங்கும் பொன்மொழிக்கு,
அதை விட எளிமையான ஓர் உரை விளக்கத்தை இதற்கு முன் நான் கேட்டதில்லை.
தாத்தா தாத்தாதான்.
*****
Sunday, 5 March 2017
Sunday, 29 January 2017
குழந்தை மையக் கற்றல்
குழந்தை மையக் கற்றல்
குழந்தை மையக் கற்றல் என்பது குழந்தைகள்
விரும்பும் செயல்பாடுகளை வடிவமைப்பது என்பது மட்டுமல்லாது, குழந்தைகளுக்குப் புரிந்த,
அவர்கள் அறிந்த சொற்களோடு பாடக்கருத்துகளை கலந்துக் கற்பிப்பதும் ஆகும்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளமங்கலத்தில்
வாழ்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய துரை அவர்கள் இம்முறையில் கைதேர்ந்தவர்.
அப்போது மூன்றாம் வகுப்பில் சேர வந்த
மாணவர் ஒருவனை அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் நாலிரண்டு எத்தனைக் கேட்க அந்த மாணவன் தடுமாறியிருக்கிறான்.
தலைமையாசிரியராக இருந்த துரை குறுக்கிட்டு
ஓர் ஏர்க் கலப்பைக்கு ரெண்டு மாடுகள் வீதம், நான்கு ஏர்க் கலப்பைக்கு எத்தனை மாடுகள்?
என்று கேட்க, அம்மாணவன் எட்டு மாடுகள் என்று சரியாக விடை சொல்லியதாக அவரைப் பற்றிய
செய்தி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
விவசாயப் பின்னணியிலிருந்து வரும் மாணவனுக்கு
அவன் அறிந்த வேளாண் அனுபவத்தோடு இணைத்துக் கற்பித்தால், கசப்பான கணக்கும் கற்கண்டாகும்
என்பதை அவர் அன்றே அறிந்திருந்த பாங்கு, இன்று எண்ணிப் பார்க்கையில் வியப்பைத் தருகிறது.
மாணவர்கள் அறியாத செய்தி என்று எதுவுமில்லை.
அவர்களுக்குப் புரியாத செய்தி என்ற ஒன்று இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அதையும் அவர்கள் அறிந்த மொழிநடையில், அவர்களுடைய அனுபவத்தின் மூலம் இணைத்துக் கற்பித்தால்,
செயல்பாடுகளே கூட தேவையில்லாமல் மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்கு இந்நிகழ்வு
ஒரு நல்ல சான்று அல்லவா!
*****
Friday, 6 January 2017
Subscribe to:
Posts (Atom)