Showing posts with label Education News Today. Show all posts
Showing posts with label Education News Today. Show all posts

Wednesday, 17 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.06.2026

1) இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

2) இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 863 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

3) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

4) ஜி7 உச்சிநாட்டில் பங்கேற்ற பிரதமர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

5) ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.

Education & GK News

1) The Tamil Nadu Legislative Assembly session begins today with the Governor's address.

2) India's total exports have risen to an all-time high of $863 billion.

3) The World Bank has projected India's economic growth rate to be 6.6% for the current fiscal year.

4) While participating in the G7 summit, the Prime Minister held discussions with US President Donald Trump and British Prime Minister Keir Starmer.

5) After concluding the G7 summit, Prime Minister Narendra Modi arrived in Paris, the capital of France.

Sunday, 1 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.02.2026)

இன்று உலக ஈரநில நாள் மற்றும் மூட்டுவாதம் விழிப்புணர்வு தினம்.

1) மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்தார்.

2) மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

3) மத்திய பட்ஜெட்டில் 7 அதிவேக ரயில்கள் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4) பட்ஜெட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிப்டி 500 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலும் சரிவைச் சந்தித்தன.

5) சென்னை, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஓமந்தூரார் சிலை நிறுவப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6) இனிவரும் நாட்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1814 இல் கொல்கத்தா அருங்காட்சியகம் நிறுவப்பட்ட தினம் இன்று.

2) 1915 இல் குஷ்வந்த் சிங் பிறந்த தினம் இன்று.

3) சுதந்திர இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் அமிர்த் கவுர் 1889 இல் பிறந்த தினம் இன்று.

4) நவீன தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீவ் 1907 இல் மறைந்த தினம் இன்று.

5) 1970 இல் பெட்ரண்ட் ரஸல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Wetlands Day and Arthritis Awareness Day.

1) Union Minister Nirmala Sitharaman presented the Union Budget for the ninth time yesterday.

2) No changes were made to the personal income tax limits in the Union Budget.

3) The Union Budget announced the operation of 7 high-speed trains.

4) Following the budget, the stock markets experienced a sharp decline. The Nifty fell by more than 500 points, and the Sensex by more than 1500 points.

5) Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced that a statue of Omandurar will be erected on the Chennai Medical College campus.

6) The Meteorological Department has stated that there is a possibility of increasing temperatures in the coming days.

On this day in history…

1) Today is the day the Kolkata Museum was established in 1814.

2) Today is the birthday of Khushwant Singh, born in 1915.

3) Today is the birthday of Amrit Kaur, the first woman minister of independent India, born in 1889.

4) Today is the death anniversary of Mendeleev, who created the modern periodic table, who passed away in 1907.

5) Today is the death anniversary of Bertrand Russell, who passed away in 1970.

Wednesday, 17 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

1) தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.

2) 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்குப் பதிலாக வளர்ந்த பாரத ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

3) பிரதமருக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

4) பயன்படாத 71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

5) தென்மாவட்டத்துக்குச் செல்லும் தொடர்வண்டிகளின் வேகத்தை அதிகப்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.




Education & GK News

1) The draft electoral roll will be released tomorrow in Tamil Nadu.

2) The Developed India Rural Employment and Livelihood Guarantee Bill was introduced in Parliament, replacing the 100-day employment scheme.

3) The Prime Minister was awarded Ethiopia's highest honour.

4) A bill to repeal 71 obsolete laws was passed in Parliament.

5) It has been decided to increase the speed of trains travelling to the southern districts.

Tuesday, 18 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.11.2025)

1) இன்று கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் இயற்கை வேளாண்மை மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்.

2) 9 கோடி பி.எம்.கிசான் திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான 21 ஆம் தவணைத் தொகையையும் பிரதமர் விடுவிக்க உள்ளார்.

3) விரைவில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோஷல் தெரிவித்துள்ளார்.

4) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையம் ஏற்றுக் கொண்டது.

5) செயற்கை நுண்ணறிவு சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

6) அக்டோபர் மாதத்தில் மின்சார மகிழ்வுந்துகளின் விற்பனை 57 சதவீதம் உயர்ந்துள்ளது.

7) கடந்த மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.




Education & GK News

1) Prime Minister Narendra Modi will inaugurate the Organic Farming Conference at Kodisia Complex, Coimbatore today.

2) The Prime Minister is also going to release the 21st installment of Rs 9 crore to farmers under the PM Kisan scheme.

3) Union Minister Piyush Ghoshal has said that the trade agreement between India and the US will be finalized soon.

4) US President Donald Trump's Gaza peace plan has been accepted by the United Nations Security Council.

5) Sundar Pichai has said that one should not blindly believe what artificial intelligence says.

6) Sales of electric vehicles have increased by 57 percent in October.

7) India's coal imports have increased by 14 percent in the last few months.

Wednesday, 12 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.11.2025)

1) இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தமிழகத்திலிருந்து 155 பேர் தேர்வாகியுள்ளனர். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 136 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2) பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

3) தமிழகத்தில் இதுவரை 5 கோடி வாக்காளர் திருத்தப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

4) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விகிதம் குறைக்கப்பட்டதால் அக்டோபர் மாத சில்லரைப் பணவீக்கம் இந்தியாவில் குறைந்தது.

5) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியான பாரசூட் சோதனை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

6) தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.



Education & GK News

1) 155 candidates from Tamil Nadu have been selected in the Indian Civil Services Mains Examination. It is noteworthy that last year this number was 136.

2) The votes cast in the Bihar Assembly elections will be counted tomorrow.

3) 5 crore voter correction forms have been distributed in Tamil Nadu so far.

4) Retail inflation in India in October decreased due to the reduction in the Goods and Services Tax rate.

5) The parachute test, which is part of ISRO's Gaganyaan project to send humans to space, was successfully tested.

6) There is a possibility of rain in Tamil Nadu for 5 days from today.

Sunday, 9 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.11.2025 (திங்கள்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.11.2025 (திங்கள்)

1) நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 இல் தொடங்குகிறது.

2) பீகாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

3) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசு முறைப் பயணமாக அங்கோலா நாட்டிற்குச் சென்றுள்ளார்.

4) தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் தேர்வை 1.96 லட்சம் பேர் எழுதினர்.

5) இந்தியாவிலிருந்து 15 லட்சம் டன் சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.


Education & General Knowledge News – 10.11.2025 (Monday)

1) The winter session of Parliament begins on December 1.

2) The second phase of assembly elections in Bihar will be held tomorrow.

3) President Draupadi Murmu has visited Angola on a state visit.

4) 1.96 lakh people wrote the second-level police examination across Tamil Nadu.

5) The Central Government has allowed the export of 15 lakh tonnes of sugar from India to foreign countries.

Tuesday, 28 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2025 (புதன்)

1) மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் கரையைக் கடந்தது.

2) மோந்தா புயலால் ஆந்திராவில் 1.76 லட்சம் ஹெக்டர் நெற்பயிர்கள் சேதமாயின.

3) ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டாவது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

4) தமிழக விவசாயிகளிடையே சிறுநீரகச் செயலிழப்பு அதிகரித்து வருவதாக லான்செட் இதழ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

5) தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாகச் செயற்கை மழைக்கான சோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

6) இந்திய தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 123 கோடியாக ஆகியது.







Education & General Knowledge News – 29.10.2025 (Wednesday)

1) Cyclone Mondha made landfall near Kakinada in Andhra Pradesh between Machilipatnam and Kalingapatnam at around 7.30 pm last night.

2) Cyclone Mondha damaged 1.76 lakh hectares of paddy crops in Andhra Pradesh.

3) The Central Government has constituted the Eighth Pay Commission headed by retired Supreme Court Justice Ranjana Prakash Desai.

4) A Lancet study has revealed that kidney failure is increasing among Tamil Nadu farmers.

5) Trials of artificial rain are being conducted in Delhi in an attempt to reduce rising air pollution.

6) The number of Indian telecom subscribers has reached 123 crore.

Monday, 27 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.10.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.10.2025 (செவ்வாய்)

1) நவம்பர் 4 முதல் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.

2) வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கிறது.

3) இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

4) குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தருகிறார்.

5) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் மட்டைப்பந்து போட்டியில் காயமடைந்த இந்திய அணியின் துணைத் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Education & General Knowledge News – 28.10.2025 (Tuesday)

1) Intensive voter registration work will begin in 12 states including Tamil Nadu and Puducherry from November 4.

2) Cyclone Mondha, which has formed in the Bay of Bengal, is expected to make landfall near Kakinada in Andhra Pradesh this evening or night.

3) Schools in Chennai and Tiruvallur districts have been declared holiday today due to heavy rains.

4) Vice President C.P. Radhakrishnan is visiting Tamil Nadu today.

5) Indian team vice-captain Shreyas Iyer, who was injured in an ODI in Australia, has been admitted to the intensive care unit.

Sunday, 19 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

1) வங்கக் கடலில் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

2) தமிழகத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) பெருமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4) கத்தாரில் நடந்த பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

5) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

6) பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய துறைகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

7) வைகை அணை வேகமாக நிரம்பியதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

9) வெள்ளப் பெருக்கின் காரணமாகக் குற்றால அருவியில் குளிக்க நான்காவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10) உலக அளவில் தரமான சேவையை வழங்குவதில் சென்னை மெட்ரோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

11) வரி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 54 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கண்காணிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தெரிவித்துள்ளார்.

12) பெற்றோர்களைக் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

13) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக 70 லட்சம் அமெரிக்கர்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.




Education & GK News

1) A new low-pressure area is forming in the Bay of Bengal on the 21st October.

2) A heavy rain warning has been issued for Tamil Nadu.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that Tamil Nadu is ready to face heavy rains.

4) A ceasefire agreement was reached between Pakistan and Afghanistan during talks held in Qatar.

5) Primary health centers have been kept ready in view of the Diwali festival.

6) The Electricity Board has ensured uninterrupted power supply to essential sectors as a precautionary measure against the monsoon.

7) A flood warning has been issued after the Vaigai dam was filled rapidly.

8) Cauvery water entering Hogenakkal has increased to 9500 cubic feet.

9) Bathing in the Kutralam Falls has been banned for the fourth day due to flooding.

10) Chennai Metro has ranked first in providing quality service globally.

11) Finance Minister Nirmala Sitharaman has announced that the Goods and Services Tax (GST) on 54 items will be monitored following tax reforms.

12) Telangana Chief Minister Revanth Reddy has announced that the salaries of government employees who do not take care of their parents will be deducted.

13) Seven million Americans are taking to the streets to protest against the authoritarian actions of US President Donald Trump.

Thursday, 16 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

1) அரசுப் பள்ளிகளில் பயிலும் வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்களுக்கு 5.94 கோடி மதிப்பில் காப்பீடு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2) சித்த மருத்துவ பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநரின் கருத்துகளை நிராகரித்துச் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) மூலம் நிரப்ப சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது.

5) வடகிழக்குப் பருவ மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கித் தமிழகத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.

6) அக்டோபர் 18 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்னோட்டப் பயிற்சி நவம்பர் 10 இல் தொடங்குகிறது.




Education & General Knowledge News (17.10.2025)

1) Insurance policies worth Rs 5.94 crore have been provided to students studying in government schools who have lost their earning parents.

2) A unanimous resolution was passed in the Assembly rejecting the Governor's comments on the Siddha Medical University issue.

3) A bill has been introduced in the Assembly to fill non-teaching posts in universities through the Tamil Nadu Public Service Commission (TNPSC).

4) The northeast monsoon began in Tamil Nadu yesterday.

5) Five women died in Tamil Nadu due to lightning strikes during the northeast monsoon.

6) The Meteorological Department has said that a cyclone is likely to form in the Bay of Bengal on October 18 and 24.

7) The preview exercise for the census will begin on November 10.

Wednesday, 15 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

1) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நவம்பர் மாதத்துக்கான அரிசியை இந்த மாதமே நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கொளத்தூரில் அதி நவீன துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

4) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

5) பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரும் நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6) பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.






Education & General Knowledge News (16.10.2025)

1) The Tamil Nadu government has announced that rice for the month of November can be purchased at fair price shops this month itself in view of the northeast monsoon.

2) A holiday has been declared for schools only in Tirunelveli, Thoothukudi and Tenkasi districts due to heavy rains.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a modern sub power station in Kolathur.

4) Anti-corruption department officials conducted raids in government offices across Tamil Nadu yesterday.

5) US President Donald Trump has warned that countries joining the BRICS group will be subject to heavy taxes.

6) There is renewed tension on the Pakistan-Afghanistan border.

Tuesday, 14 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.10.2025)

இன்று ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 95 ஆவது பிறந்த நாள்.

1) தீபாவளிப் பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம் என மாசுகட்டுப்பாட்டு வாரியும் அறிவித்துள்ளது.

2) கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்குச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

3) 1.33 லட்சம்  கோடியில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க கூகுளுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

4) உலக அரங்கில் இந்தியா வளரும் சக்தியாக உள்ளதாகப் பிரிட்டன் பிரதமல் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

5) தரமற்ற இருமல் மருந்துகள் எச்சரிக்கையோடு இருக்கும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Education & General Knowledge News (15.10.2025)

Today is the 95th birth anniversary of Missile Man Abdul Kalam.

1) The Pollution Control Board has also announced that crackers can be burst from 6 am to 7 am and from 7 pm to 8 pm during the Diwali festival.

2) Condolences were expressed in the Legislative Assembly session for the deaths in the Karur stampede incident.

3) The Andhra Pradesh government has signed an agreement with Google to set up an artificial intelligence center at a cost of Rs 1.33 lakh crore.

4) British Prime Minister Keir Starmer has said that India is a growing power on the global stage.

5) The World Health Organization has advised countries around the world to be wary of substandard cough medicines.