Sunday, 19 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

1) வங்கக் கடலில் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

2) தமிழகத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) பெருமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4) கத்தாரில் நடந்த பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

5) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

6) பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய துறைகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

7) வைகை அணை வேகமாக நிரம்பியதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

9) வெள்ளப் பெருக்கின் காரணமாகக் குற்றால அருவியில் குளிக்க நான்காவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10) உலக அளவில் தரமான சேவையை வழங்குவதில் சென்னை மெட்ரோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

11) வரி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 54 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கண்காணிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தெரிவித்துள்ளார்.

12) பெற்றோர்களைக் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

13) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக 70 லட்சம் அமெரிக்கர்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.




Education & GK News

1) A new low-pressure area is forming in the Bay of Bengal on the 21st October.

2) A heavy rain warning has been issued for Tamil Nadu.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that Tamil Nadu is ready to face heavy rains.

4) A ceasefire agreement was reached between Pakistan and Afghanistan during talks held in Qatar.

5) Primary health centers have been kept ready in view of the Diwali festival.

6) The Electricity Board has ensured uninterrupted power supply to essential sectors as a precautionary measure against the monsoon.

7) A flood warning has been issued after the Vaigai dam was filled rapidly.

8) Cauvery water entering Hogenakkal has increased to 9500 cubic feet.

9) Bathing in the Kutralam Falls has been banned for the fourth day due to flooding.

10) Chennai Metro has ranked first in providing quality service globally.

11) Finance Minister Nirmala Sitharaman has announced that the Goods and Services Tax (GST) on 54 items will be monitored following tax reforms.

12) Telangana Chief Minister Revanth Reddy has announced that the salaries of government employees who do not take care of their parents will be deducted.

13) Seven million Americans are taking to the streets to protest against the authoritarian actions of US President Donald Trump.

No comments:

Post a Comment