Friday, 3 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.10.2025)

1) நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது.

2) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செலுத்தப்படும் காசோலைகளுக்கு அடுத்த 1 மணி நேரத்தில் பணம் வழங்க புதிய காசோலை முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3) கரூரில் த .வெ.க தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழுவை அஸ்ரா கார்க் தலைமையில் உயர்நீதி மன்றம் அமைத்தது.

4) கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விண்ணப்பித்திருந்த முன்பிணை கோரிக்கையை உயர்நீதி மன்றம் நிராகரித்தது.

5) அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கும் வரை எந்த ஒரு கட்சிக்கும் சாலை உலா பிராச்சாரத்துக்கு அனுமதி கிடையாது என உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

6) கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் ஜனவரி 2026 இல் திறக்கப்பட உள்ளது.

7) அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப் புலி, கூம்புத்தலை மஹ்சீர் மீன் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு கோடி மதிப்பீட்டில் பாதுகாப்புத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

8) நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.


Education & GK News

1) The scheme of disbursing cheques within one hour across the country will be implemented in banks from today.

2) A new cheque system has been arranged to disburse cheques drawn between 10 am and 4 pm within the next 1 hour.

3) The High Court has constituted a special investigation team headed by Asra Garg regarding the incident in which 41 people died at a campaign rally held by TVK leader Vijay in Karur.

4) The High Court has rejected the anticipatory bail application filed by the TVK  executives in connection with the Karur incident.

5) The High Court has said that no party will be allowed to conduct roadshows until the government formulates guidelines.

6) An open-air museum in Keezhadi is to be opened in January 2026.

7) The Tamil Nadu government has announced a conservation plan worth Rs 1 crore to protect the endangered lion-tailed macaque, Chennai hedgehog, striped hyena and hump-headed mahseer fish.

8) A National Crime Records Bureau report has said that one farmer commits suicide every hour in the country.

No comments:

Post a Comment