Thursday, 16 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

1) அரசுப் பள்ளிகளில் பயிலும் வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்களுக்கு 5.94 கோடி மதிப்பில் காப்பீடு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2) சித்த மருத்துவ பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநரின் கருத்துகளை நிராகரித்துச் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) மூலம் நிரப்ப சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது.

5) வடகிழக்குப் பருவ மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கித் தமிழகத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.

6) அக்டோபர் 18 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்னோட்டப் பயிற்சி நவம்பர் 10 இல் தொடங்குகிறது.




Education & General Knowledge News (17.10.2025)

1) Insurance policies worth Rs 5.94 crore have been provided to students studying in government schools who have lost their earning parents.

2) A unanimous resolution was passed in the Assembly rejecting the Governor's comments on the Siddha Medical University issue.

3) A bill has been introduced in the Assembly to fill non-teaching posts in universities through the Tamil Nadu Public Service Commission (TNPSC).

4) The northeast monsoon began in Tamil Nadu yesterday.

5) Five women died in Tamil Nadu due to lightning strikes during the northeast monsoon.

6) The Meteorological Department has said that a cyclone is likely to form in the Bay of Bengal on October 18 and 24.

7) The preview exercise for the census will begin on November 10.

No comments:

Post a Comment