குரூப் 2 &
2A மாதிரி வினா விடை – 46
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
குரூப் 2 &
2A மாதிரி வினா விடை – 46
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
பத்தாம் வகுப்பு,
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2027
2027 ஆம் ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ள பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணையைக் கீழே காண்க.
*****
குரூப் 2 &
2A மாதிரி வினா விடை – 45
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.10.2026
1) பத்தாம்
வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையைப் பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
2) அனைத்து
மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு 8.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
3) தமிழகத்தில்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. சென்னை, டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில்
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4) 45
நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர்ப்பாசனம் இன்றோடு
நிறுத்தப்படுகிறது.
5) தமிழகத்தில்
ஒரே ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் 6000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் எனப் பேரிடர்
அமைப்பு எச்சரித்துள்ளது.
6) பீகாரில்
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 14 குழந்தைகள் பலியாகினர்.
Education & GK News
1) School Education Minister Rajmohan released the
public examination schedule for Class 10 and Class 12.
2) The Tamil Nadu government has allocated Rs. 8.45
crore to conduct book fairs across all districts.
3) The Northeast Monsoon has commenced in Tamil Nadu;
heavy rainfall is likely in 19 districts, including Chennai and the Delta
districts.
4) Irrigation water releases from Mettur Dam are being
stopped today, following the completion of the 45-day period.
5) The disaster management authority has warned that a
single natural disaster in Tamil Nadu could result in losses amounting to Rs. 6,000
crore.
6) Fourteen children lost their lives in an accident
where a boat capsized in the Ganges River in Bihar.
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.10.2026
1) பள்ளிகளில்
வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ராஜ்மோகன் என அறிவித்துள்ளார்.
2) கிருஷ்ணா
நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துத் தமிழக
முதல்வர் ச. ஜோசப் விஜய் பேச்சு வார்த்தை நடத்தினார்.
3) தமிழகத்தைச்
சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
4) சென்னை
உயர்நீதி மன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசு தலைவர் திரௌபதி
முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை
68 ஆக உயர்கிறது.
5) வியாபாரிகளுக்கான
யுபிஐ பரிவர்த்தனை கட்டண நடைமுறை தீபாவளி பண்டிகைக் காலம் முடியும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
Education & GK News
1) School Education Minister Rajmohan has announced that
physical education classes will be mandatory in schools five days a week.
2) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay met Andhra
Pradesh Chief Minister Chandrababu Naidu to hold discussions regarding the
sharing of Krishna river water.
3) Union Minister of State L. Murugan, hailing from
Tamil Nadu, has resigned from his post.
4) President Droupadi Murmu has issued an order
appointing two new judges to the Madras High Court, bringing the total number
of judges there to 68.
5) It has been announced that the implementation of UPI
transaction charges for merchants has been deferred until the end of the Diwali
festival season.
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 44
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
காலத்தின் அருமையும் பெருமையும்
ஒரு
வருடத்தின் சுமையை
தேர்வில்
தோற்றுப் போன
மாணவரின் புலம்பல்களில் கேட்கலாம்.
ஒரு
மாதத்தின் தவிப்பை
குறைபிரசவக் குழந்தையைக்
கண்டு
கண்ணீரோடு
நிற்கும்
தாயின்
மூச்சிரைப்பில் காணலாம்.
ஒரு
வாரத்தின் அருமையை
கடைசி நேர பரபரப்போடு
கொண்டு வரும்
வார
இதழின் ஆசிரியரிடம்
கேட்டுத்
தெரிந்து கொள்ளலாம்.
ஒரு
நாளின் பெருமையை
நாள் முழுவதும் உழைத்து
மாலையில்
கைநிறையும் கூலியில் பரவசமாகும்
தொழிலாளியின்
முகத்தில் பார்க்கலாம்.
ஒரு
மணி நேரத்தின் அருமையை
மருத்துவமனை
வாசலில் நின்றுவிட்ட
ஆம்புலன்ஸ்
ஒலியின்
வேதனையில் உணரலாம்.
ஒரு
நிமிடத்தின் இழப்பை
கண்ணெதிரே
நகர்ந்துவிட்ட
தொடர்வண்டியை ஏக்கத்தோடு
பார்க்கும்
பயணியின்
பெருமூச்சிலிருந்து அறியலாம்.
ஒரு
நொடியின் மதிப்பை
மரணத்தின்
விளிம்பிலிருந்து
சட்டென்று ஒரு நொடியில்
தப்பித்த
ஒருவரின் படபடக்கும்
இதயத்தில் கேட்கலாம்.
ஒரு
மில்லி நொடியின் சரித்திரத்தை
ஒலிம்பிக்
போட்டியில்
தங்கத்தைத்
தவறவிட்டு,
வெள்ளியோடு
நின்று புன்னகைக்கும்
வீரனின்
ஈரமான கண்களில் நோக்கலாம்.
காலம்
எப்போதும் யாருக்காகவும் நிற்பதில்லை;
காலத்தைக் கண் போன்று
மதிப்பவர்கள் தோற்பதுமில்லை.
*****