தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகள்
தமிழில் உள்ள சொற்களை ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள்,
மூவெழுத்துச் சொற்கள், நான்கெழுத்துச் சொற்கள் என்று எழுத்துகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக்
கொண்டு வகை பிரிக்கலாம்.
இவற்றுள் ஓரெழுத்துச் சொற்கள் தனித்துவமானவை. சொல்லை மொழி என்று
குறிப்பிடும் மரபு இருப்பதால் ஓரெழுத்துச் சொற்களை ஓரெழுத்து ஒருமொழிகள் எனவும் குறிப்பிடலாம்.
தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் இருப்பதாக நன்னூல் ஆசிரியர்
பவணந்தியார் குறிப்பிடுகிறார். 
“உயிர் மவில் ஆறும் தநபவில்
ஐந்தும்
கசவில் நாலும் யவ்வில்
ஒன்றும்
ஆகும் நெடில் நொது ஆம்குறில்
இரண்டோடு
ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ்
சிறப்பின.”
                                                                        (நன்னூல், எழுத்ததிகாரம்,
நூற்பா, 129)
என்பது நன்னூலார் குறிப்பிடும் நூற்பா ஆகும். இந்நூற்பாவின்படி,
| 
   உயிர் எழுத்துகளில்   | 
  
   6  | 
 
| 
   மகர வரிசை எழுத்துகளில்   | 
  
   6  | 
 
| 
   தகர வரிசை எழுத்துகளில்   | 
  
   5  | 
 
| 
   நகர வரிசை எழுத்துகளில்   | 
  
   5  | 
 
| 
   பகர வரிசை எழுத்துகளில்   | 
  
   5  | 
 
| 
   ககர வரிசை எழுத்துகளில்   | 
  
   4  | 
 
| 
   சகர வரிசை எழுத்துகளில்   | 
  
   4  | 
 
| 
   வகர வரிசை எழுத்துகளில்   | 
  
   4  | 
 
| 
   யகர வரிசை எழுத்துகளில்   | 
  
   1  | 
 
| 
   குறில்களில்   | 
  
   2  | 
 
| 
   ஆக
  மொத்தம்  | 
  
   42  | 
 
ஆக மேற்படி அட்டவணையின்படி 42 எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகள்
ஆகும். 
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 இல் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து
ஒருமொழிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இனி அந்த 42 ஓரெழுத்து ஒருமொழிகளையும் மேற்படி அட்டவணையின்படி
எவையெனக் காண்போம்.
| 
   உயிர் எழுத்துகளில்  | 
  
   6  | 
  
   ஆ  | 
  
   ஈ  | 
  
   ஊ  | 
  
   ஏ  | 
  
   ஐ  | 
  
   ஓ  | 
 
| 
   மகர வரிசை எழுத்துகளில்  | 
  
   6  | 
  
   மா  | 
  
   மீ  | 
  
   மூ  | 
  
   மே  | 
  
   மை  | 
  
   மோ  | 
 
| 
   தகர வரிசை எழுத்துகளில்  | 
  
   5  | 
  
   தா  | 
  
   தீ  | 
  
   தூ  | 
  
   தே  | 
  
   தை  | 
  
   | 
 
| 
   நகர வரிசை எழுத்துகளில்  | 
  
   5  | 
  
   நா  | 
  
   நீ  | 
  
   நே  | 
  
   நை  | 
  
   நோ  | 
  
   | 
 
| 
   பகர வரிசை எழுத்துகளில்  | 
  
   5  | 
  
   பா  | 
  
   பூ  | 
  
   பே  | 
  
   பை  | 
  
   போ  | 
  
   | 
 
| 
   ககர வரிசை எழுத்துகளில்  | 
  
   4  | 
  
   கா  | 
  
   கூ  | 
  
   கை  | 
  
   கோ  | 
  
   | 
  
   | 
 
| 
   சகர வரிசை எழுத்துகளில்  | 
  
   4  | 
  
   சா  | 
  
   சீ  | 
  
   சே  | 
  
   சோ  | 
  
   | 
  
   | 
 
| 
   வகர வரிசை எழுத்துகளில்  | 
  
   4  | 
  
   வா  | 
  
   வே  | 
  
   வை  | 
  
   வௌ  | 
  
   | 
  
   | 
 
| 
   யகர வரிசை எழுத்துகளில்  | 
  
   1  | 
  
   யா  | 
  
   | 
  
   | 
  
   | 
  
   | 
  
   | 
 
| 
   குறில்களில்  | 
  
   2  | 
  
   நொ  | 
  
   து  | 
  
   | 
  
   | 
  
   | 
  
   | 
 
இனி அந்த 42 ஓரெழுத்து ஒருமொழிகளின் பொருளையும் அதே வரிசையில்
பார்ப்போம்.
| 
   ஆ  | 
  
   பசு  | 
 
| 
   ஈ  | 
  
   கொடு, பறக்கும் பூச்சி  | 
 
| 
   ஊ  | 
  
   தசை, இறைச்சி  | 
 
| 
   ஏ  | 
  
   அம்பு  | 
 
| 
   ஐ  | 
  
   ஐந்து, அழகு, தலைவன், வியப்பு  | 
 
| 
   ஓ  | 
  
   வினா, மதகுப்பலகை  | 
 
| 
   மா  | 
  
   மாமரம், பெரிய, விலங்கு  | 
 
| 
   மீ  | 
  
   ஆகாயம், மேலே, உயரம்  | 
 
| 
   மூ  | 
  
   மூப்பு  | 
 
| 
   மூ  | 
  
   மூன்று  | 
 
| 
   மே  | 
  
   மேன்மை, மேல்  | 
 
| 
   மை  | 
  
   அஞ்சனம், கண்மை, இருள்  | 
 
| 
   தா  | 
  
   கொடு, கேட்பது  | 
 
| 
   தீ  | 
  
   நெருப்பு  | 
 
| 
   தூ  | 
  
   வெண்மை, தூய்மை  | 
 
| 
   தே  | 
  
   நாயகன், தெய்வம்  | 
 
| 
   தை  | 
  
   மாதம்  | 
 
| 
   நா  | 
  
   நாக்கு  | 
 
| 
   நீ  | 
  
   நின்னை  | 
 
| 
   நே  | 
  
   அன்பு, நேயம்  | 
 
| 
   நை  | 
  
   வருந்து, நைதல்  | 
 
| 
   நோ  | 
  
   நோவு, வருத்தம்  | 
 
| 
   பா  | 
  
   பாட்டு, நிழல், அழகு  | 
 
| 
   பூ  | 
  
   மலர்  | 
 
| 
   பே  | 
  
   மேகம், நுரை, அழகு  | 
 
| 
   பை  | 
  
   பாம்புப் படம், பசுமை, உறை  | 
 
| 
   போ  | 
  
   செல்  | 
 
| 
   கா  | 
  
   சோலை, காத்தல்  | 
 
| 
   கூ  | 
  
   பூமி, கூவுதல்  | 
 
| 
   கை  | 
  
   கரம்  | 
 
| 
   கோ  | 
  
   அரசன், தலைவன், இறைவன்  | 
 
| 
   சா  | 
  
   பேய், சாதல்  | 
 
| 
   சீ  | 
  
   இகழ்ச்சி, திருமகள்  | 
 
| 
   சே  | 
  
   எருது, அழிஞ்சில் மரம்  | 
 
| 
   சோ  | 
  
   மதில்  | 
 
| 
   வா  | 
  
   அழைத்தல்  | 
 
| 
   வே  | 
  
   வைதல்  | 
 
| 
   வை  | 
  
   வைக்கோல், கூர்மை, வைத்தல்  | 
 
| 
   வௌ  | 
  
   கௌவுதல், கொள்ளை அடித்தல்  | 
 
| 
   யா  | 
  
   யாவை  | 
 
| 
   நொ  | 
  
   நொண்டி, துன்பம்  | 
 
| 
   து  | 
  
   உண், பிரிவு,  உணவு, பறவை இறகு  | 
 
*****

No comments:
Post a Comment