Showing posts with label Who loses out on gift vouchers?. Show all posts
Showing posts with label Who loses out on gift vouchers?. Show all posts

Friday, 20 June 2025

பரிசுச் சீட்டுகளால் யாருக்கு நட்டம்?

பரிசுச் சீட்டுகளால் யாருக்கு நட்டம்?

இன்று பரிசுச் சீட்டுகள் (கிப்ட் வவுச்சர்கள்) வழங்காத வணிக நிறுவனங்கள் கிடையாது. இதனால் அந்நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படாதா?

நிச்சயமாக ஏற்படாது. வாடிக்கையாளர்களுக்குத்தான் ஏற்படும். எப்படி என்கிறீர்களா?

நீங்கள் 100 ரூபாய் பொருட்கள் வாங்கியதற்கு ஒரு பரிசுச் சீட்டைப் (கிப்ட் வவுச்சரை) பெறுவீர்கள். அதைப் பயன்படுத்த நீங்கள் 1000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை சீட்டில் (வவுச்சரில்) சேர்த்திருப்பார்கள்.

சரியென்று நீங்கள் 1000 ரூபாய்க்குப் பொருள் வாங்கும் போது அதற்கும் ஒரு பரிசுசீட்டைப் (கிப்ட் வவுச்சரை) பெறுவீர்கள். அதைப் பயன்படுத்த நீங்கள் 10,000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை அச்சீட்டில் (வவுச்சரில்) சேர்த்திருப்பார்கள்.

சரியென்று நீங்கள் 10,000 ரூபாய்க்குப் பொருள் வாங்கும் போது அதற்கும் ஒரு பரிசுச் சீட்டைப் (கிப்ட் வவுச்சரை) பெறுவீர்கள். அதைப் பயன்படுத்த நீங்கள் 1,00,000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை அச்சீட்டில் (வவுச்சரில்) சேர்த்திருப்பார்கள்.

சரியென்று நீங்கள் 1,00,000 ரூபாய்க்குப் பொருள் வாங்கும் போது அதற்கும் ஒரு பரிசுச் சீட்டைப் (கிப்ட் வவுச்சரை) பெறுவீர்கள். அதைப் பயன்படுத்த நீங்கள் 10,00,000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை அச்சீட்டில் (வவுச்சரில்) சேர்த்திருப்பார்கள்.

இது எப்படி உங்களை நட்டப்படுத்தும் என்பதை கடன் அட்டை (கிரெடிட் கார்ட்), மாதாந்திர தவணைத் தொகை (இஎம்ஐ) உட்பட சகலவித தவணைகளையும் கட்ட முடியாமல் அல்லாடும் போதுதான் உங்களுக்குப் புரிய வரும்.

இப்போது சொல்லுங்கள் பரிசுச் சீட்டுகள் (கிப்ட் வவுச்சர்கள்) வாங்குவதால் யாருக்கு நட்டம் ஏற்படும் என்று?

*****