Showing posts with label slow learner material. Show all posts
Showing posts with label slow learner material. Show all posts

Tuesday, 11 April 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான இணைமொழிகள்

தமிழ் மெல்ல கற்போருக்கான இணைமொழிகள்

இணைமொழிகள் என்பன பொதுவாக இரண்டு, சில இடங்களில் அதற்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வரும் சொல்லமைப்பாகும். பேசும் போதும் எழுதும் போதும் இணைமொழிகள் அழகையும் நயத்தையும் வெளிப்படுத்துவன.

இணைமொழிகளை அறிமுகப்படுத்திக் கற்பிப்பது தமிழ் மெல்ல கற்போருக்கான சுவாரசியமான வாசிப்பு பயிற்சியாகவும் எழுத்துப் பயிற்சியாகவும் அமையும்.

இதோ மெல்ல கற்போருக்கான பயன்தரும் இணைமொழிகளைக் காண்போம்.

அக்கம் பக்கம்

அல்லும் பகலும்

அருமை பெருமை

அரை குறை

அண்டை அயலார்

அந்தியும் சந்தியும்

அறமும் மறமும்

அன்பும் அருளும்

அன்றும் இன்றும்

அடி முடி

ஆடல் பாடல்

ஆடிப்பாடி

ஆடையணி

ஆதியந்தம்

ஆய்ந்து ஓய்ந்து

ஆற அமர

ஆறித்தேறி

ஆக்கமும் கேடும்

இண்டு இடுக்கு

இன்ப துன்பம்

இங்கும் அங்கும்

இன்னார் இனியார்

இசகு பிசகு

ஈடும் எடுப்பும்

ஈவு இரக்கம்

உடல் பொருள் ஆவி

உண்டும் உடுத்தும்

உப்பு சப்பு

உருண்டு திரண்டு

உருவும் திருவும்

உற்றாரும் உறவினரும்

உற்றோரும் மற்றோரும்

எலும்பும் தோலும்

ஏழை பாழை

ஏற்றத் தாழ்வு

ஏட்டிக்குப் போட்டி

ஏற்ற இறக்கம்

ஒட்டியும் ஒட்டாமல்

ஒப்பும் உயர்வும்

ஒட்டி உலர்ந்து

கண்டும் கேட்டும்

கண்ட துண்டம்

கண்ணீரும் கம்பலையும்

கரடு முரடு

கல்வியும் கேள்வியும்

கள்ளம் கபடம்

கனவும் நனவும்

காடு மலை

கையும் களவும்

குறுக்கும் மறுக்கும்

கூனும் குறளும்

கொள்வினை கொடுப்பினை

கன்னங்கரிய

சட்ட திட்டம்

சதுக்கமும் சந்தியும்

சின்னா பின்னம்

சீரும் சிறப்பும்

சுக துக்கம்

சுற்றும் முற்றும்

சூதுவாது

திட்ட வட்டம்

துணி மணிகள்

தோட்டம் துரவு

நகை நட்டு

நடை உடை

நயத்தாலும் பயத்தாலும்

நரை திரை

நல்லது கெட்டது

நாயும் பேயும்

நாளும் கிழமையும்

நொங்கும் நுரையும்

நொண்டி சண்டி

நோய் நொடி

பட்டி தொட்டி

பண்டிதரும் பாமரரும்

பத்துப் பன்னிரண்டு

பயிர் பச்சை

பழக்க வழக்கம்

மந்திர தந்திரம்

மிச்சம் மீதி

முட்டி மோதி

வந்தவன் போனவன்

வம்பு தும்பு

வாடி வதங்கி

வீரனும் சூரனும்

*****

Wednesday, 21 December 2022

மெல்ல கற்போருக்கான கணிதக் கையேடு

மெல்ல கற்போருக்கான கணிதக் கையேடு

சேலம் மாவட்டக் கல்வித் துறை தயாரித்துள்ள மெல்ல கற்போருக்கான கணிதக் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday, 20 December 2022

மெல்ல கற்போருக்கான ஆங்கிலக் கையேடு

மெல்ல கற்போருக்கான ஆங்கிலக் கையேடு

சேலம் மாவட்டக் கல்வித் துறை தயாரித்துள்ள மெல்ல கற்போருக்கான ஆங்கிலக் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Dowload

*****

Monday, 19 December 2022

மெல்ல கற்போருக்கான தமிழ் கையேடு

மெல்ல கற்போருக்கான தமிழ் கையேடு

சேலம் மாவட்டக் கல்வித் துறை தயாரித்துள்ள மெல்ல கற்போருக்கான தமிழ் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****