Thursday, 14 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.08.2025)

1) இன்று 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார்.

2) சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார்.

3) சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசுப் பள்ளிகளின் தூதராக நியமிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

4) செப்டம்பர் 3 இல் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

5) சுதந்திர தின விழாவையொட்டி 1.20 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

6) செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் அரசின் நெல் கொள்முதல் பணிகள் துவங்க உள்ளன.

7) தெருநாய்கள் விவகார வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

8) சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் எண்ம அறிவிப்பு பலகை (டிஜிட்டல் போர்டு) இம்மாத இறுதிக்குள் நிறுவப்பட உள்ளது.

9) வரத்துக் குறைவால் தக்காளி விலை ஒரு கிலோ நூறு ரூபாயை எட்டியது.

10) பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ முறைகள் நிவாரணம் அளிப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

11) தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

12) ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசித் திட்டம் ஏழு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

13) ஓகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 9500 கன அடியாகக் குறைந்துள்ளது.

Education & GK News

1) Prime Minister Narendra Modi will hoist the flag at the Red Fort in Delhi and deliver the Independence Day speech on the occasion of the 79th Independence Day today.

2) Chief Minister M.K. Stalin will hoist the national flag at Fort St. George in Chennai and deliver the Independence Day speech.

3) The School Education Department has decided to appoint outstanding alumni as ambassadors of government schools.

4) President Draupadi Murmu is scheduled to attend the convocation ceremony of Tiruvarur Central University on September 3.

5) 1.20 lakh police personnel have been deployed for security purposes on the occasion of the Independence Day celebrations.

6) The government's paddy procurement is set to begin in Tamil Nadu from September 1.

7) The stray dog case has been transferred to a three-judge bench.

8) Digital boards are to be installed at bus stands in Chennai by the end of this month.

9) Tomato prices hit Rs 100 per kg due to reduced supply.

10) Study confirms that natural remedies provide relief for colon cancer.

11) Tamil Nadu is likely to receive moderate rains for the next six days.

12) Japanese encephalitis vaccination programme expanded to seven districts.

13) Water inflow to Okenakkal has reduced to 9500 cubic feet.

No comments:

Post a Comment