Showing posts with label higher studies. Show all posts
Showing posts with label higher studies. Show all posts

Sunday, 5 May 2024

பொறியியல் / தொழில்நுட்பம் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு…

பொறியியல் / தொழில்நுட்பம் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு…

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 

நீங்கள் அல்லது பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்து படிக்க விரும்பினால், நீங்கள் படிக்க விரும்பும் கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பானது AICTE அங்கீகாரம் பெற்றுள்ளதாக எனச் சோதித்துக் கொள்வது நல்லது.

நீங்கள் படிக்க தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனம் அரசு சார்ந்ததாக இருப்பினும் அப்படிப்புக்கான AICTE அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதை அதன் இணையதளம் மூலம் அறிந்த பின் அந்தப் படிப்பில் சேர்வது எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது.

நீங்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறும் போது வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களது படிப்பை AICTE அங்கீகாரத்தைப் பொருத்துதான் மதிப்பிடுகின்றன.

நீங்கள் வேலையில் சேர்ந்த பிறகு நீங்கள் படித்த படிப்பிற்கு AICTE இன் அங்கீகாரம் இல்லையென்பது அறிய வந்தால், நீங்கள் இடையிலேயே பணிநீக்கம் செய்யப்படலாம்.

ஆகவே நீங்கள் படிக்க விரும்பும் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்கு AICTE இன் அங்கீகாரம் உள்ளதாக என்பதை அதன் இணையதளத்தில் படிப்பதற்கு முன்பே சோதித்துக் கொள்வது நல்லதுதானே. அதன் இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://facilities.aicte-india.org/

*****

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று  தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tngasa.in/

*****

Thursday, 20 July 2023

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான NPTEL

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான NPTEL

மருத்துவம் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர்கள் தங்கள் திறனைக் கூடுதலான சான்றிதழ் படிப்புகளால் மேம்படுத்திக் கொள்ள NPTEL (National Programme on Technology Enhanced Learning) இணையதளத்தின் மூலம் இணைய வழியில் (Online) படிக்கலாம். அத்துடன் GATE, TOEFL, IELTS போன்ற தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி பெறலாம்.

இணைய வழியிலான இவ்வித ஒரு சான்றிதழ் படிப்பில் தேர்வெழுதித் தேர்வு பெற ரூ.1000/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இச்சான்றிதழ் படிப்புகளை இந்தியாவின் பிரபலமான ஐ.ஐ.டி.(IIT)கள் வழங்குகின்றன என்பதிலிருந்து இப்படிப்பின் தரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஐ.ஐ.டி.யில் பாடம் நடத்தும் பேராசிரியர்களின் சிறப்பான கற்பித்தல் அடங்கிய காணொளிகள் மூலமாக நீங்கள் பயிலலாம்.

மருத்துவத்தில் பொறியியலில் ஆர்வமுள்ள பனிரெண்டாம் வகுப்பு முடித்தோர் தொடங்கி மருத்துவம் பொறியியல் படிப்போர் வரை, படித்து முடித்தோர் உட்பட அனைவரும் இவ்விணையதளம் மூலமாகக் கற்றுப் பயன் பெறலாம். தங்கள் திறன்களையும் தகுதிகளையும் அதிகரித்துக் கொள்ளலாம். உலகளாவிய வாய்ப்புகளைப் பெற்று உயர் நிலைக்கும் உயர் பதவிகளுக்கும் சர்வதேச ஆய்வுகளுக்கும் செல்லாம். இத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதுடன் தகவல் தேவையுள்ள மற்றோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். இத்தளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nptel.ac.in/

*****