Thursday 21 April 2022

மெல்ல கற்போருக்கான ல – ழ – ளகரப் பயிற்சிகள்

மெல்ல கற்போருக்கான ல – ழ – ளகரப் பயிற்சிகள்

            தமிழ் உச்சரிப்பிலும், எழுதுவதிலும் ல – ழ – ள வேறுபாட்டில் அமையும் சொற்களில் மாணவர்களுக்குப் பிழைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

            சொல்லும் போது ல – ழ – ள ஆகியவற்றை வேறுபடுத்தி அறிவதற்கேற்ற வகையில் லகரத்தை லகரம் என்றும் அல்லது சிறிய லகரம் என்றும், ழகரத்தைச் சிறப்பு ழகரம் என்றும், ளகரத்தைப் பொது ளகரம் என்றும் அல்லது பெரிய ளகரம் என்றும் குறிப்பிடுவர். இவ்வழக்கு என்பது குறிப்பிடு முறைக்கான சொல் வழக்கு என்பதும் இதற்கான இலக்கண விதிகள் ஏதும் கிடையாது என்பதும் இவ்விடம் அறியத்தக்கது.

எழுத்து

குறிப்பிடும் வழக்கு முறை

லகரம் / சிறிய லகரம்

சிறப்பு ழகரம்

பொது ளகரம் / பெரிய ளகரம்

            ல – ழ – ள இவ்வெழுத்தகளை உச்சரிப்பில் எவ்வாறு வேறுபடுத்துவது என்ற குழப்பம் மாணவர்களுக்கு எழுவதுண்டு. இக்குழப்பத்தைப் போக்க இவ்வெழுத்தகளை உச்சரிக்கும் முறையை விளக்கும் வரைபடத்தைப் பயன்படுத்தலாம். அவ்வரைபடத்தை நீங்கள் கீழே காணலாம்.

            ல – ழ – ளகரத்தில் அமையும் சொற்களை அட்டவணையிட்டு வாசிக்கச் செய்வதன் மூலமாகவும் எழுதச் செய்வதன் மூலமாகவும் மெல்ல கற்போரை முன்னேற்றம் அடையச் செய்யலாம். அதற்கான சொற்கள் அடங்கிய அட்டவணை ஒன்றைக் கீழே காண்போம்.

அவல்

புகழ்

அவள்

உலகு

அழகு

மிளகு

நிலவு

உழவு

அளவு

பலா

விழா

விளாங்காய்

வலி

வழி

வளி

வலிமை

விழிப்பு

குளுமை

வலு

புழு

பளு

மலை

பிழை

கிளை

காலை

வாழை

வேளை

            மேலும் கூடுதல் பயிற்சிக்காக ல – ழ – ளகர வேறுபாடுகளில் அமையும் சில சொற்களையும் காண்போம்.

கல்

கூழ்

வாள்

பல்

வாழ்

நாள்

வேல்

ஊழ்

தேள்

சொல்

கேழ்வரகு

கோள்

உலகம்

கழகம்

களங்கம்

கலை

உழை

களை

கலம்

வேழம்

குளம்

உலவி

கிழவி

குளவி

கோலம்

ஆழம்

கோளம்

கவலை

நுலிழை

தவளை

நலம்

பழம்

வளம்

வெல்லம்

அமிழ்தம்

வெள்ளம்

ஒலி

விழி

ஒளி

போலி

கோழி

வாளி

வேலி

தோழி

காளி

 

            ல – ழ – ளகர வேறுபாடுகளில் அமையும் சொற்களைக் கொண்ட வாக்கியங்களையும் பயன்படுத்தலாம். அப்படிச் சில வாக்கியங்கள்.

1. வளவன் வாத்தியங்கள் முழங்க தேரில் ஏறி வலம் வந்தான்.

2. பழம் நழுவி பாலில் விழுந்தது.

3. செல்வி அணிந்திருந்த வளையல்கள் அழகாக இருந்தன.

4. மக்கள் நலம் காக்க உழைப்பவகள் தலைவர்கள் ஆவர்.

5. உழைப்பவரின் வியர்வை உலர்வதற்குள் சம்பளத்தைக் கொடு.

6. ஆலமர விழுதில் ஊஞ்சலாடினாள்.

7. பகல் பொழுது முழுவதும் உழவு வயலில் களை பறித்தாள்.

8. மெல்ல சென்று வெல்லத்தை விழுங்கியதும் துள்ளிக் குதித்தான்.

9. உலகம் உள்ளளவும் புகழோடு வாழ்க.

10. வெல்லும் வரை உள்ளம் தளராது உழைத்திடு.

            இத்துடன் உங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் எழுதுங்கள். மெல்ல கற்போருக்கும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உங்கள் ஆலோசனைகள் உதவட்டும்.

*****

No comments:

Post a Comment