Showing posts with label தமிழர் காலக் கணக்கு. Show all posts
Showing posts with label தமிழர் காலக் கணக்கு. Show all posts

Monday, 5 June 2023

காலங்களை அறிவோமா?

காலங்களை அறிவோமா?

வேனில் காலம், கார் காலம், கூதிர் காலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம் அல்லவா? அக்காலங்கள் எந்தெந்த மாதங்கள் என்பதை அறிவோமா?

காலம்

தமிழ் மாதங்களில்

ஆங்கில மாதங்களில்

இளவேனில்

(கோடைக்காலம்)

சித்திரை, வைகாசி

ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து ஜூன் முற்பகுதி வரை

முதுவேனில்

(கோடைக்காலம்)

ஆனி, ஆடி

ஜூன் பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் முற்பகுதி வரை

கார் காலம்

(மழைக் காலம்)

ஆவணி, புரட்டாசி

ஆகஸ்ட் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை

கூதிர் காலம்

(குளிர் காலம்)

ஐப்பசி, கார்த்திகை

அக்டோபர் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் முற்பகுதி வரை

முன்பனிக் காலம்

(பனிக் காலம்)

மார்கழி, தை

டிசம்பர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி முற்பகுதி வரை

பின்பனிக் காலம்

(பனிக் காலம்)

மாசி, பங்குனி

பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் முற்பகுதி வரை

தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை குறித்த நேர அளவுகளையும் அறிந்து கொள்வோமா?

காலை

முற்பகல் 6 மணியிலிருந்து முற்பகல் 10 மணி வரை

நண்பகல்

முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை

எற்பாடு

பிற்பகல் 2 மணியிலிருந்து பிற்பகல் 6 மணி வரை

மாலை

பிற்பகல் 6 மணியிலிருந்து பிற்பகல் 10 மணி வரை

யாமம்

பிற்பகல் 10 மணியிலிருந்து முற்பகல் 2 மணி வரை

வைகறை

முற்பகல் 2 மணியிலிருந்து முற்பகல் 6 மணி வரை

*****