போட்டித் தேர்வு வழிகாட்டி – 2
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் பயனுள்ள தேர்வுக் குறிப்புகளைக் கீழே காண்க.
*****
போட்டித் தேர்வு வழிகாட்டி – 2
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் பயனுள்ள தேர்வுக் குறிப்புகளைக் கீழே காண்க.
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 34
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
மரணப் பட்டறைகள்!
பெற்றோர்கள்
உயிரைக் கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்க வைத்தால், பிள்ளைகள் அந்தப் படிப்பிற்காகத்
தங்கள் உயிரை விட்டுவிட்டுப் போகிறார்கள்.
இதுதான்
நம் கல்விப் புரட்சியா?
இந்தக்
கேள்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், உயர்கல்வி குறித்த புள்ளிவிவரங்கள் அப்படித்தான் சொல்கின்றன.
புது
தில்லியிலிருந்து வந்திருக்கும் புதிய புள்ளிவிவரம் என்ன சொல்கிறது தெரியுமா? கடந்த
ஓராண்டில் வெறும் 9 சதவீத உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டும்தான் தற்கொலை எண்ணம் வந்ததாம்!
அடேங்கப்பா, என்ன ஓர் ஆறுதலான செய்தி! இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் நூறு சதவீதத்தை
எட்டியிருக்கலாமோ என்னவோ!
நம்
உச்சநீதிமன்றம் ஒரு தேசிய பணிக்குழுவை அமைத்து ஆய்வு செய்ததில்தான் இந்த அதிசய உண்மைகள்
வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 2 லட்சத்து 43 ஆயிரம் உயர்கல்வி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில்,
15 சதவீதம் பேர் எப்போதும் சோகத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்களாம். பள்ளிகளும் கல்லூரிகளும்
என்னவோ கல்விக்கூடங்கள் என்று நினைத்தோம்; பார்த்தால் அது என்னவோ மன அழுத்தத் தொழிற்சாலைகள்
போலிருக்கிறது!
வகுப்பறையில்
உட்கார்ந்திருக்கும்போதே, 34 சதவீதம் மாணவர்கள் தங்களை ஏதோ வேற்றுக்கிரகவாசி போலவும்,
சக மனிதர்களுடன் ஒன்ற முடியாமல் ஏதோ பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்பட்டதைப் போலவும் உணர்கிறார்களாம்.
நல்லவேளையாக, மாணவர்களின் கல்விக்காக விண்ணை முட்டும் கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்கள்
மாணவர்களின் இந்த வேதனைக்குத் தனிக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை போல!
பல கல்வி
நிறுவனங்களில் மாணவர்கள் மனம் உடைந்து அழுதால் ஆறுதல் சொல்லக் கூட ஆள் கிடையாதாம்.
அப்படி அழும் அவர்களின் சதவீதம் 32. மாணவர்களின் உயிர் போனால் கூட பரவாயில்லை, பணம்
போய் விடக் கூடாது என்பதில் கல்வி நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றன. அப்படியா என்றால்
அப்படித்தான். கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனை மையங்களை வைத்தால் செலவு அதிகமாகிவிடாதா
பின்னே?
அரைக்
கிணறு தாண்டிய கதை போல, 50 சதவீத மாணவர்கள் தங்கள் கல்லூரிகள் தங்களைக் காப்பாற்றும்
என்ற நம்பிக்கையே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில்
மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் சொல்லி மாளாது. அவர்களின் கல்வி நேரம் ஒரு சாதாரண
மனிதன் தாங்கக்கூடிய எல்லையைக் தாண்டி, எந்திரங்களை விடக் கேவலமாக வேலை வாங்குவதுதாக
இருக்கிறது. அந்த வகையில், மருத்துவ மாணவர்களின் பணி நேரம், ஒருவர் இயல்பாகத் தாங்கக்
கூடிய அளவை மீறி நீள்கிறது. கடுமையான வருகைப் பதிவு விதிமுறைகள் மாணவர்களின் மூச்சை
அடைக்கின்றன.
பொறியியல்
கதையும் இதே ரகம்தான். ஒருவர் வாங்கிய மதிப்பெண்களை விட இன்னொருவரும் கூடுதலாக வாங்க
வேண்டும் என்ற அழுத்தம் அங்கு சாசுவதம். இந்த எலிப் பந்தயத்தில் ஓடி ஓடி, மாணவர்களின்
மூளை பழுதாகிப் போவது கல்வி நிறுவனங்களுக்குப் பெருமையாக இருக்கலாம்; பெற்றோருக்கு
அது பேரிடி! ஆம், பொறியியல் கல்லூரிகளில் உள்ள தீவிரமான போட்டி மற்றும் கடுமையான தகுதி
மதிப்பீடுகள், மாணவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி விடுகின்றன.
தேசிய
குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, உயர்கல்வி மாணவர்களின் தற்கொலை விகிதம் 26
சதவீதத்திலிருந்து இப்போது 30 சதவீதமாக எகிறிக் குதித்திருக்கிறது.
மதிப்பெண்
இயந்திரங்களை விடுத்து, மனிதர்களை உருவாக்கும் கல்வி எப்போது இந்த நாட்டில் மலரப் போகிறது?
அதுவரை நமது உயரகல்வி நிறுவனங்கள் கல்வித் கோயில்கள் அல்ல; மதிப்பெண்களுக்காக மனிதர்களைப்
பலியிடும் மரணப் பட்டறைகள்தான்!
மதிப்பெண்களுக்காக
மடியும் மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்ற, கல்வி நிலையங்களை மன அழுத்தமில்லாத மனித
நேயமிக்க இடங்களாக மாற்றுவதே காலத்தின் கட்டாயம்!
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 33
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
பள்ளிகளில் சுகாதார வசதி – நிழலாடும் நிதர்சனம்!
காற்றில்
கரையும் பெருமூச்சுகளைப் போல நம் கண்முன்னே நீண்டு கிடக்கிறது ஒரு மாபெரும் நிழல்.
அவைதான் பள்ளிக்கூடங்கள். ஆனால், அங்கே எழுந்து நிற்கும் நிழல் வெறும் பெருமூச்சு மட்டுமல்ல;
அடிப்படை மனித உரிமைகளுக்காக ஏங்கித் தவிக்கும் பிஞ்சுகளின் உயிர்மூச்சு!
உலக
சுகாதார அமைப்பும், யுனிசெப் நிறுவனமும் வெளியிட்டுள்ள அந்தப் புள்ளிவிவரங்களை நிமிர்த்திப்
பார்த்தால், நெஞ்சம் வறண்டு போகிறது. உலகமெங்கும் 2025இன் புள்ளிவிவரப்படி, சுமார்
24 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லையாம்.
இதில்
என்னவொரு கொடுமை தெரியுமா?
உலகளவில்
இந்த அவலத்தைச் சுமக்கும் ஒவ்வொரு ஐந்து குழந்தைகளில் ஒருவர் நம் இந்தியாவைச் சேர்ந்தவர்தான்!
ஆம், நம் நாட்டில் மட்டும் சுமார் 5 கோடி குழந்தைகள் இந்த இருளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்
சாட்சிப்படி பார்க்கும் போது,
இந்தியாவின்
மடியில் வளரும் 1 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் தாகம் தீர்க்கக் குடிநீர்
கூட இல்லை!
கைகளைச்
சுத்தமாகக் கழுவக்கூட வழியில்லாமல், தொற்றுநோய்களின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள்.
2015
முதல் 2025 வரை பார்த்தால், இந்த அவல நிலை வெறும் 4 சதவீதம் மட்டும்தான் குறைந்திருக்கிறது.
இது ஆறுதலா, இல்லை ஆற்றாமையா?
ஆனாலும்,
ஒரே ஓர் ஆறுதல். குடிநீர் வசதியைப் பொறுத்தவரை இந்தியா சற்று வேகம் காட்டியிருக்கிறது.
2030க்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அடிப்படை குடிநீர் வழங்கும் இலக்கை நோக்கிப் பாய்ந்து
கொண்டிருக்கும் 62 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆண்டுக்கு 4 சதவீதத்துக்கும் அதிகமாக
இங்கே முன்னேற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது மட்டும் போதுமா?
பள்ளிகளின்
சுகாதாரமற்ற வெளிகளில், எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியர்களாகிய நாம்தான் முதலிடம்
வகிக்கிறோம். நமக்கு அடுத்தபடியாக வரிசைக் கட்டுகின்றன மற்ற நாடுகள். சுகாதாரமின்மையால்
பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை குறித்த அந்த வரிசைப் பட்டியல் இதுதான்.
இந்தியாவில்
5 கோடி குழந்தைகள்,
நைஜீரியாவில்
3 கோடியே 40 லட்சம் பேர்,
எத்தியோப்பியாவில்
2 கோடியே 60 லட்சம் பேர்,
காங்கோ
ஜனநாயக குடியரசில் 1 கோடியே 10 லட்சம் பேர்,
இந்தோனேசியாவில்
80 லட்சம் பேர்.
2030
ஆம் ஆண்டுக்குள் உலகத்திலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் குடிநீர், சுகாதாரம், தனிநபர்
வசதிகள் என்று எல்லாவற்றையும் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உலக
நாடுகளின் பிரகடனம்.
ஆனால்,
அதை நோக்கிய தற்போதைய நடை எப்படி இருக்கிறது தெரியுமா? மிக மெல்ல நகரும் நத்தை நடையாக
இருக்கிறது!
இதே
வேகத்தில் போனால், 2030 ஆம் ஆண்டில்கூட உலக அளவில் 10 சதவீத பள்ளிகளில் குடிநீரும்,
7 சதவீத பள்ளிகளில் சுகாதாரமும், 12 சதவீத பள்ளிகளில் தனிநபர் சுகாதார வசதிகளும் இருக்காது.
அதாவது, இப்போதைக்கு இருக்கும் வேகத்தை விட 4 முதல் 5 மடங்கு வேகமாக ஓடினால் ஒழிய,
அந்த இலக்கைத் தொட முடியாது.
குழந்தைகளின்
சிரிப்பு ஒலிக்க வேண்டிய வகுப்பறைகளில், அடிப்படை வசதிகளுக்காக அவர்களின் கண்ணீர் சிந்தும்
நிலை மாற வேண்டும். மேலே நாம் பார்த்தது வெறும் புள்ளிவிவர அறிக்கை அல்ல; நம் எதிர்காலத்
தலைமுறையின் முகத்தில் அறையும் உண்மையும் கூட!
*****