Showing posts with label cyber crime helpline number. Show all posts
Showing posts with label cyber crime helpline number. Show all posts

Wednesday, 15 March 2023

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு…

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு…

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா அழைப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இணையவழி நிகழும் ஏமாற்றுப் பரிவர்த்தனைகளை மீட்டுக் கொணர்வதற்கும் இத்தொடர்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வெண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிப்பதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். இணைய வழியில் ஏமாற்றிப் பணம் பறிக்கப்பட்டிருப்பது உண்மையானால் இழந்த பணத்தை மீட்டுப் பெறுவதற்கு இவ்வெண் வழி அளிக்கப்படும் புகார்கள் இழப்பீட்டாளருக்குப் பெருமளவு உதவுகின்றன.

இத்தகவல் அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். இணைய வழிப் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து விட்ட இக்காலத்தில் இவ்வெண்ணை அனைவரும் மனதில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். இத்தகவலை நீங்களும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Cyber Crime Helpline Contact Number : 1930

*****