Showing posts with label income tax. Show all posts
Showing posts with label income tax. Show all posts

Monday, 9 December 2024

வருமான வரிப் பிடித்தம் அதிகமாக இருப்பின், குறைத்துப் பிடித்தம் செய்ய கொடுக்க வேண்டிய விண்ணப்பம்

வருமான வரிப் பிடித்தம் அதிகமாக இருப்பின், குறைத்துப் பிடித்தம் செய்ய கொடுக்க வேண்டிய விண்ணப்பம்

ஊதியத்தில் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் அதிகமாக இருப்பின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைத்துப் பிடித்தம் செய்ய வட்டாரக் கல்வி அலுவலருக்குக் கொடுக்க வேண்டிய விண்ணப்ப மாதிரியைக் கீழே காணவும்.


Friday, 2 February 2024

வருமான வரி – 2024 : சில தகவல்கள்!

வருமான வரி – 2024 : சில தகவல்கள்!

வருமான வரி செலுத்துபவர்கள் புதிய முறை, பழைய முறை ஆகிய இரண்டு முறைகளில் தங்களுக்கு சகாயமாக அமையும் முறையின்படி கட்டலாம். பெரும்பாலும் பத்து லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு புதிய முறையே சகாயமாக இருக்கும்.

வருமான வரியை இரண்டு முறைகளிலும் கணக்கிட்டுப் பார்த்து எந்த முறை சகாயமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த முறையின் படி வருமான வரியைச் செலுத்தலாம்.

பழைய வருமான வரி முறையின் வரி அமைப்பை முதலில் பார்த்து விடுவோம்.

Upto 2,50,000 - Nil Tax

2,50,001 to 5,00,000 - 5%

5,00,001 to 10,00,000 - 20%

Exceeding 10,00,000 - 30%

புதிய வருமான வரி முறையின் வரி அமைப்பை அடுத்துக் காண்போம்.

Upto 3,00,000 - Nil Tax

3,00,001 to 6,00,000 - 5%

6,00,001 to 9,00,000 - 10%

9,00,001 to 12,00,000 - 15%

12,00,001 to 15,00,000 - 20%

Exceeding 15,00,000 - 30%

 ஒருமுறை புதிய வருமான வரி (New Regime) முறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய முறைக்கு (Old Regime)  வர முடியாது என்பது தவறான தகவல் ஆகும். வருமான வரி செலுத்தும் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு வசதியான முறைக்கு மாறிக் கொள்ளலாம். ஆனால் வியாபாரம் மற்றும் பிற வழிகளில் பிற வருமானம் உள்ளவர்கள் மட்டும் தான் மீண்டும் பழைய முறைக்கு மாற முடியாது.

வருமான வரியைக் கணக்கிடும் போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 மார்ச் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை  பெற்ற சம்பளம்,

DA Arrears,

போனஸ்,

இதர Arrears

ஆகியவற்றின் கூட்டுத்தொகை தான் Gross Salary Income.

பழையை வருமான வரி முறையில்

HRA,

Standard Deduction 50,000,

Professional Tax,

HBA Interest,

Conveyance Allowance (Physically Handicapped only),

Hill Allowance,

Savings (Maximum GPF Employee -1,50,000, CPS Employee - 2,00,000),

NHIS - Medical Insurance - Educational Loan Interest - CMPRF

ஆகியவற்றைக் கழித்த பிறகு வருவது தான் Net Taxable Income.  இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

 புதிய வருமான வரி முறையில்

Standard Deduction 50,000,

Conveyance Allowance (Physically Handicapped only)

இவை இரண்டை மட்டும் தான் கழிக்க வேண்டும். அது கழித்த பின் வருவது Net Taxable Income.

இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

Net Taxable Income-க்கு தான் வருமான வரி கணக்கிடவேண்டும்.

 வருமான வரியை Nearest ten க்கு Round off செய்ய கூடாது.

 வருமான வரித் தொகைக்கு Health & Education Cess 4% கணக்கிட வேண்டும்.

பழைய வருமான வரி முறையில் வரி செலுத்தும் போது  CPS இல் உள்ளவர்கள் தாம் செலுத்தும் CPS சந்தாவை மட்டும் தான் கணக்கு காட்ட வேண்டும். அரசு செலுத்தும் 10% தொகையை கணக்கில் சேர்க்கக் கூடாது.  CPSஇல் உள்ளவர்கள் தங்களுடைய CPS சந்தா தொகையில் u/s 80 CCD(1B) இல் 50,000 ரூபாயும், u/s 80 CCD(1)இல் மீதி தொகையையும் கழிக்கலாம். HBA Interest, HBA Principal உள்ளவர்கள் HRA-வை கழிக்கக் கூடாது.

இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு வருமான வரி செலுத்துபவர்கள் தங்களது வருமான வரியைக் கணக்கிட்டு புதிய முறை அல்லது பழைய முறையில் தங்களுக்கு உகந்த முறையில் வரி செலுத்தலாம்.

*****

Thursday, 13 April 2023

வருமான வரிக்கழிவுகள் / வரிச்சலுகைகள் - 2024

வருமான வரிக்கழிவுகள் / வரிச்சலுகைகள் - 2024

வருமான வரித் திட்டமிடலை நிதியாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே திட்டமிட்டுக் கொள்வது பயனுள்ளதாகும். இதனால் மாதந்தோறும் கட்ட வேண்டிய வருமான வரித் தொகையைக் கணக்கிட்டு அதன்படி மாதந்தோறும் தவணைகளைச் செவ்வனே செலுத்தி வர இயலும். இப்படிச் செலுத்துவது பிப்ரவரி மாதத்தில் வருமான வரி செலுத்தும் போது சுலபத்தையும் எளிமையையும் உணர வைக்கும்

வருமான வரித் திட்டமிடலில் வரிக்கழிவுகள் எனப்படும் வரிச்சலுகைகள் முக்கியமானவை. பழைய வருமான வரி முறை மற்றும் புதிய வருமான வரி முறைக்கான வரிக்கழிவுகள் அல்லது வரிச்சலுகைகள் பற்றிக் கீழே உள்ள அட்டவணை மூலமாக ஒப்பிட்டு அறிந்து கொள்வோம். இது குறித்த அறிதல் வருமான வரிக்கான திட்டமிடலில் இரண்டு முறைகளிலும் கணக்கிட்டு உங்களுக்கு உகந்த முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உங்களுக்குப் பெரிதும் உதவும்.

பழைய வருமான வரி முறைக்கான வரிச்சலுகைகள்

புதிய வருமான வரி முறைக்கான வரிச்சலுகைகள்

நிரந்தரக் கழிவு ரூ.50,000/-

நிரந்தரக் கழிவு ரூ.50,000/-

வீட்டு வாடகைப்படிச் சலுகை

பிரிவு 51 IIA குடும்ப ஓய்வூதிய வருமானக் கழிவு ரூ.15,000/- வரை

80C சலுகைகள் ரூ.1,50,000/- வரை

Ø போது சேமநல நிதி (பி.பி.எப்.)

Ø ஊழியர் சேமநல நிதி (இ.பி.எப்.)

Ø தன்விருப்பு சேமநல நிதி (வி.பி.எப்.)

Ø மூன்றாண்டு கால வரிச்சேமிப்புக்கான பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு (இ.எல்.எஸ்.எஸ்)

Ø 5 ஆண்டு நிரந்த வைப்பு (எப்.டி.)

Ø செல்வமகள்

Ø தேசியச் சேமிப்பு பத்திரம்

Ø கல்விக் கட்டணம்

80CCD (2) தேசிய ஓய்வூதிய முறைமையில் நிறுவனத்தின் பங்களிப்பு

80CCD (1B) ரூ.50,000 தேசிய ஓய்வூதிய முறைமை (என்.பி.எஸ்.) பணியாளரின் பங்களிப்பு

அலுவலகச் சுற்றுலா, போக்குவரத்து, பணிமாற்றம், தினசரி படி போன்ற சலுகை

80D மருத்துவக் காப்பீட்டுத் தொகை

வரிதாரருக்கு ரூ.25,000/-

பெற்றோருக்கு ரூ.25,000/- (60 வயதுக்குள்), ரூ.50,000/- (60 வயதுக்கு மேல்)

மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்துச் சலுகைப்படி

24B வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சம் வரையில்

10 (10C) பிரிவின்படி விருப்ப ஓய்வு பணம்

80DDB மருத்துவச் செலவு

10 (10) பிரிவின்படி பணிக்கொடை

80E கல்விக்கடனுக்கான வட்டிச் செலுகை

10 (10AA) பிரிவின்படி விடுப்பு சலுகைப்படிகள்

80EEA வீட்டுக்கடன் கூடுதல் வட்டி ரூ.1.5 லட்சம் வரை

கடனில் வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை

80EEB மின்சார வாகனக் கடன் வட்டி ரூ.1.5 லட்சம் வரை

80G அறக்கட்டளை நன்கொடை

உணவுச்சலுகை ரூ.25,000/- வரை

தொழில் வரி

விடுமுறை கால பயணப்படி (எல்.டி.ஏ.) மற்றும் இதர அலுவலகச் சலுகைகள்

*****

Monday, 10 April 2023

வருமான வரி செலுத்துவோருக்கான செயலி - AIS for Tax Payers Apps

வருமான வரி செலுத்துவோருக்கான செயலி - AIS for Tax Payers Apps

வருமான வரி செலுத்துபவர்களுக்காக வருமான வரித்துறை AIS for Taxpayers என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

AIS என்பது Annual Information Statement என்பதன் முதல் எழுத்துகளைக் குறிப்பதாகும்.

இச்செயலி மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் தகவல் சுருக்கம் மற்றும் தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்க்க முடியும்.

இச்செயலி வருமான வரித்துறையால் இலவசமாக வழங்கப்படும் பயனுள்ள செயலி ஆகும்.

இச்செயலி கூகுளின் ‘ப்ளே ஸ்டோர்’ மற்றும் ஆப்பிளின் ’ஆப் ஸ்டோர்’ ஆகியவற்றில் கிடைக்கிறது. நீங்கள் AIS for Taxpayers என ‘ப்ளே ஸ்டோர்’ அல்லது ‘ஆப் ஸ்டோர்’ இல் தேடினால் இச்செயலியைத் தேர்ந்தெடுத்துப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அல்லது கீழே உள்ள பின்வரும் இணைப்புகளைச் சொடுக்கியும் பதிவிறக்கம் செய்யலாம்.

ப்ளேஸ்டோருக்கு...

https://play.google.com/store/apps/details?id=io.lntinfotech.AIStaxpayer&hl=en&gl=US

ஆப் ஸ்டோருக்கு...

https://apps.apple.com/in/app/ais-for-taxpayers/id1571076423

வரி செலுத்துவோர் தங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைக் காணவும் இந்தச் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.

குறிப்பாக வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், வருமான வரி திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல தகவல்களை இச்செயலி மூலமாகப் பெற முடியும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்த இச்செயலியைப் ப்ளேஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோலிருந்து பதிவிறக்கம் செய்து பான் எண்ணை வழங்க வேண்டும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு வரும் ஒரு முறை பயன்பாட்டு எண் (ஓ.டி.பி.) மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து இ-பைலிங் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு நீங்கள் பயன்படுத்தும் வகையில் செயலிக்குள் நுழைய நான்கிலக்க கடவுச்சொல்லாக (Password) ஓர் எண்ணை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்தச் செயலி உங்கள் பயன்பாட்டுக்குள் வந்து விடும். இச்செயலி வருமான வரி செலுத்தும் உங்களுக்குப் பல வகைகளில் உதவும் மற்றும் உதவக் கூடும்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தால், பலரும் பயன் பெற உதவும் இத்தகவலைப் பலருக்கும் பகிர்ந்து பயன் பெறச் செய்யவும்.

*****

Thursday, 13 February 2020

வருமான வரியை TAN மூலம் செலுத்துவதற்கான படிவம்

வருமான வரியை TAN மூலம் செலுத்துவதற்கான படிவம்
வருமான வரி தொகையைச் செலுத்துவதற்கான TAN எண் மூலமாக வங்கியில் செலுத்துவதற்கான படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.



Monday, 13 January 2020

வருமான வரிப் படிவம் நிரப்புவதற்குத் தேவையான E payslip ஐ பெற

வருமான வரிப் படிவம் நிரப்புவதற்குத் தேவையான E payslip ஐ பெற
தற்போது இ-பே ஸ்லிப் December 2019 வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி படிவம் தயார் செய்ய மார்ச் 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான ஊதிய விவரங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதில் emp code (CPS எண்) ஐ EDN என்ற suffix உடன் நிரப்பி அதை User ID ஆகவும், பிறந்த நாளை dd/mm/yyyy என்ற வடிவில் Password ஆகவும் கொடுத்து இ-பே ஸ்லிப்பைப் பெறவும். அதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.