அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 21
மரணத்துக்குப் பின் ஓர் ஓடிபி
பைலேண்ட்
அபேயில் நடந்த கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்?
அட்ரஸ்
: சென்னையின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு.
நள்ளிரவு
இரண்டு மணி.
கணேஷ்
தன் லேப்டாப்பில் உலகத்தை உலுக்கும் ஏதோ ஒரு மொக்கையான கோடிங் செய்துகொண்டிருந்தான்.
திடீரென
ஏசி குளிர்காற்று நின்றது. ஓசியில் வந்த கரண்ட் கட் இல்லை. அறையின் மூலையில், ரேடியம்
வாட்ச் டயல் போல லேசான நீல ஒளியுடன் ஒரு நபர் சப்பணம் கட்டி அமர்ந்திருந்தார்.
கணேஷ்
பயப்படவில்லை. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவனுக்குப் பேயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு
ரத்த ஓட்டம் இருப்பதில்லை.
"யார்?
மாசக் கடைசியில் திருட வந்தீங்களா? அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ்தான் இருக்கு. பேங்க்லேயே
தேடிட்டு இருக்காங்க."
"நான்
திருடன் இல்லை, பேய்" என்றது அந்த உருவம், விப்ரோவில் அப்ரைசல் வாங்கிய நபர் போலச்
சோகமாக.
"அப்படியென்றால்
என் சட்டையைக் கிழிக்கப் போகிறாயா? பதினைந்தாம் நூற்றாண்டு கதை போல?"
"இல்லை
தம்பி. நான் போன வாரம் கார்டியாக் அரெஸ்ட்டில் செத்த பக்கத்து பிளாட் சுந்தரம். சாகும்போது
நாலு கிரெடிட் கார்டில் மினிமம் டியூ கட்டாமல் செத்துவிட்டேன். இப்போது மேலோகத்தில்
என் சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருக்கிறது. எமலோக வாசலில் லோன் ரிஜெக்ட் ஆனவன் போல நிக்க
வச்சிருக்காங்க. மோட்சத்துக்கு விசா கிடைக்கவில்லை."
"நான்
என்ன செய்ய வேண்டும்? பாவம் புண்ணியம் என்று பேசினால் எனக்குப் பிடிக்காது."
"பாவமும்
இல்லை, புண்ணியமும் இல்லை. என் டெஸ்க்டாப்பில் ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும். கொஞ்சம் கூகுள்
பேயில் அந்த இரண்டு லட்சத்தைக் கட்டிவிடு தம்பி. சிபில் ஸ்கோர் ஏறிவிடும். அந்த வெள்ளி
ஸ்பூன் கதையெல்லாம் உனக்குத் தெரியும்தானே? அன்று ஸ்பூன், இன்று கார்டு."
கணேஷ்
லேப்டாப்பை மூடினான். முகம் எந்தச் சலனமும் இன்றி அமிதாப் பச்சன் போல இருந்தது.
"முடியாது.
அடுத்த மாசம் லே ஆப் வரப்போகிறது. நானே கார்டு கட்ட முடியாமல் பேயாகப் போகிறேன். இரண்டு
பேரும் பேயாக எமலோக வாசலில் சந்திப்போம். அங்கே பேசிக்கொள்ளலாம்."
பேய்
பெருமூச்சுவிட்டது.
கலிகாலத்தில்
யாரிடமும் இரக்கமில்லை என்று நினைத்திருக்கலாம். அது அப்படியே காற்றோடு காற்றாக, தன்
ஓடிபியோடு மறைந்தது.
கணேஷ்
மீண்டும் கோடிங் செய்ய ஆரம்பித்தான்.
இப்படித்தான்
எழுத வேண்டும் அந்தக் கதையை. ஏன் இப்படி கதை விடுகிறார்கள் என்று விளக்குவதை விட, இப்படி
ஒரு கதையை உருவாக்கிக் காண்பித்து விட்டால், அதற்கு அப்புறம், அதற்கு மேலும் விளக்கம்
சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை பாருங்கள். அதற்காகத்தான் கதைக்கு மேல் இந்தக்
கதை. இனி நீங்களும் பேய்க் கதையை உருவாக்கலாம்தானே?
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment