அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 17
காற்றில் கரையும் குளம்பொலி!
குளிர்காலத்து
இருட்டுக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. அது ஒலிகளைப் பெருக்கி, மனிதர்களின் ஆதிப்
பயங்களை நினவாக்கும்.
ஆல்ப்ஸ்
மலை அடிவாரத்துக் கிராமத்தின் அந்தச் சின்னஞ்சிறு மரவீட்டில், புகைபோக்கியின் வழியே
கசிந்த புகையை விடவும் அடர்த்தியாகப் பயம் சூழ்ந்திருந்தது.
தாமஸ்
ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மரங்கள் இலைகளற்று, காற்றில் எலும்புக்கூடுகளாய் நின்றன.
அன்று மாலைதான் அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், இன்னும் அதற்கு ஞானஸ்நானம்
செய்விக்கப்படவில்லை. பாதிரியார் அடுத்த வாரம்தான் மலை ஏறி வர வேண்டும்.
திடீரென்று,
காட்டிலிருந்து அந்தச் சத்தம் கேட்டது.
விர்ர்ர்...
விர்ர்ர்...
அது
வெறும் காற்றின் சீறல் அல்ல. அதில் ஆயிரக்கணக்கான குதிரைகளின் குளம்படிச் சத்தமும்,
வேட்டை நாய்களின் வெறித்தனமான குரைப்பும் கலந்திருந்தன.
வைல்ட்
ஹன்ட் கிளம்பிவிட்டது!
மேகக்
கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு, காற்றில் மிதந்து வந்தது அந்தப் பேய்க் கூட்டம்.
முன்னால்,
ஒற்றைக் கண்ணும் எரியும் தாடியும் கொண்ட வோடன் கருப்பு நிறப் பெருங்குதிரையில் பாய்ந்து
வந்தான். அவனது கையில் இருந்த ஈட்டி மின்னலைப் போல ஒளிர, பின்னால் கண்கள் இல்லாத அமானுஷ்ய
உருவங்கள் பின்தொடர்ந்தன.
"தாமஸ்,
ஜன்னலை மூடு!" அவனது மனைவி தொட்டிலை அணைத்தபடி கதறினாள்.
அவர்கள்
வீட்டின் கூரைக்கு மேலே அந்த வேட்டைக்கூட்டம் கடந்து சென்றபோது, வீட்டின் மர உத்திரங்கள்
பலமாக நடுங்கின.
வோடனின்
வேட்டை நாய்கள் வீட்டின் வாசலை மோப்பம் பிடித்தன. ஞானஸ்நானம் பெறாத அந்தக் பிஞ்சு ஆன்மாவின்
வாசனை அவற்றுக்கு எட்டியிருந்தது.
வாசற்கதவின்
கீழ் இருந்த இடுக்கின் வழியே ஒரு கருப்புப் புகை உள்ளே நுழைய முயன்றது.
தாமஸ்
நடுங்கும் கரங்களால், மேசையின் மேல் இருந்த புனித நீரை எடுத்து வாசலில் தெளித்தான்.
சத்தம் சட்டென்று விலகி, ஆகாயத்தை நோக்கி நகர்ந்தது.
அப்பாடா
என்று தாமஸ் மூச்சுவிடுவதற்குள், தொட்டிலில் இருந்த குழந்தையின் அழுகுரல் திடீரென நின்றது.
மனைவி
மயங்கி விழுந்து கிடந்தாள்.
பயத்துடன்
ஓடிச்சென்று பார்த்த தாமஸின் ரத்தம் உறைந்தது. தொட்டில் காலியாக இருந்தது! ஜன்னல் கதவு
காற்றில் தானாகத் திறந்து மூடியது.
வெறிபிடித்தவனாகத்
தாமஸ் கதவைத் திறந்து கொண்டு பனிப்பொழிவில் ஓடினான். தூரத்தில், மேகங்களுக்கு நடுவே
வோடனின் குதிரைப்படை மறைந்து கொண்டிருந்தது.
அந்தப்
பேய்க் கூட்டத்தின் நடுவே, ஓர் அமானுஷ்ய உருவத்தின் கைகளில் அவனது குழந்தை காற்றில்
மிதந்தபடி அழுதுகொண்டே சென்றது. வோடன் தன் ஒற்றைக் கண்ணால் தாமஸைத் திரும்பிப் பார்த்து
கொடூரமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு இடிமுழக்கமாய் ஒலித்தது.
மறுநாள்
காலை, பனி படர்ந்த காட்டின் தரையில் குதிரைக் குளம்புகளின் தடங்கள் இருந்தன. ஆனால்,
அவை தாமஸின் வீட்டின் வாசலில் தொடங்கி, அப்படியே ஆகாயத்தை நோக்கி மறைந்திருந்தன.
இடைக்கால
ஐரோப்பாவின் ஆகாயம், இன்னும் ஒரு புனிதமற்ற ஆன்மாவைத் தன்னுள் ஜீரணித்திருந்தது.
தாமஸ்,
காட்டின் நடுவே உறைந்த பனியாய் சிலையாக நின்றிருந்தான்.
என்னதான்
ஆனது தாமஸின் குழந்தைக்கு?
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment