Wednesday, 8 July 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளாவன,

1. கட்டிட எண் என்ன?

2.  வீட்டு கதவு எண் என்ன?

3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

4.வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது?

6.  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?

7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு?

8. குடும்ப எண் என்ன?

9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

10.  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன?

11. வீட்டுத் தலைவரின் பாலினம் என்ன?

12. குடும்பத் தலைவர் எந்த சாதி?

13. வீட்டின் உரிமை நிலை என்ன?

14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை?

15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை?

16. குடிநீரின் முக்கிய ஆதாரம் எது?

17. குடிநீர் வசதி எப்படிக் கிடைக்கிறது?

18. மின்சார வசதி உள்ளதா?

19. கழிவறை உள்ளதா?

20. கழிவறை எந்த வகை?

21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா?

22. குளியல் வசதி இருக்கிறதா?

23. சமையலறை மற்றும் LPG / PNG இணைப்பு வசதி உள்ளதா?

24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது?

25. ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கிறதா?

26. தொலைக்காட்சி இருக்கிறதா?

27. இணையதளம் வசதி இருக்கிறதா?

28. மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கிறதா?

29. தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கிறதா?

30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கிறதா?

31. கார் / ஜீப் / வேன் இருக்கிறதா?

32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது?

33.  உங்கள் மொபைல் எண் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும்) என்ன?

*****

No comments:

Post a Comment