Showing posts with label Historical Decision. Show all posts
Showing posts with label Historical Decision. Show all posts

Wednesday, 16 October 2024

சந்திரசூட் எடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

சந்திரசூட் எடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தற்போதைய உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் பெரிய முடிவை எடுத்துள்ளார்.

நீங்கள் நீதி மன்றத்தில் உள்ள நீதி தேவதையைப் பார்த்திருப்பீர்கள். கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டு, ஒரு கையில் தராசும் மறு கையில் வாளும் ஏந்திய நிலையில் நீதி தேவதை வீற்றிருப்பதைக் கண்டு இருப்பீர்கள். இந்த நீதி தேவதையின் அமைப்பில்தான் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தைச் செய்துள்ளார் சந்திரசூட்.

சந்திரசூட் செய்துள்ள மாற்றத்தின்படி,

நீதி தேவதையின் கண்மூடி அகற்றப்பட்டுள்ளது.

நீதி தேவதையின் கையில் இருந்த வாள் அரசியலமைப்பு புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.

இம்முடிவு குறித்து, “காலனித்துவ மரபுக்கு அப்பால் செல்ல வேண்டிய நேரம் இது!” என்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இம்முடிவானது சந்திரசூட் எடுத்துள்ள வரலாற்று முடிவாகும் என்றால் அது மிகையில்லைதானே!

*****