Thursday, 7 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.08.2025)

1) தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் எண்மப் பதிவு புதுப்பித்தல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

2) விவசாயிகளின் நலனில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள இயலாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) இந்தியா மீது 50 சதவீத வரி உயர்வை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

4) இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சீனா மற்றும் ஜப்பானுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

5) கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை ஐந்து ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

6) உத்தரகாண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 50 பேர் மாயமாகி உள்ளனர்.

7) வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) தெரிவித்துள்ளது.

8) சேவைத் துறையில் கடந்த 11 மாதங்கள் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.

Education & GK News

1) Arrangements are being made to update the Aadhaar number of 15 lakh students in Tamil Nadu in the schools where they study.

2) Prime Minister Narendra Modi has said that there can be no compromise on the welfare of farmers.

3) US President Donald Trump announced a 50 percent tax hike on India.

4) Prime Minister Narendra Modi is scheduled an official visit to China and Japan at the end of this month.

5) A government order has been issued increasing the pension of temple workers to five thousand.

6) 70 people have been rescued in the Uttarakhand floods, 50 people are missing.

7) The Reserve Bank of India (RBI) has said that there is no change in the interest rate (repo rate) for banks.

8) India has recorded the highest growth in the services sector in the last 11 months.

No comments:

Post a Comment