Thursday, 21 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.08.2025)

1) நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 26 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 3.05 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறுவர்.

2) தமிழகத்தில் 14 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3) போதையில்லாத தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

4) செப்டம்பர் 9 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

5) குவஹாத்தியில் 555 கோடியில் புதிய இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

6) 5000 கி.மீ வரை சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி - 5 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

7) விமானப் படைக்குப் புதிதாக 97 தேஜஸ் விமானங்கள் வாங்குவதற்காக 67000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

8) உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

9) கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம், இரண்டு வெண்கலம் கிடைத்துள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin will launch a breakfast scheme for government-aided schools in urban areas on the 26th. This will benefit 3.05 lakh school children.

2) A government order has been issued to upgrade 14 middle schools to high schools in Tamil Nadu.

3) The School Education Minister has said that a coordinated effort is necessary to create a drug-free Tamil Nadu.

4) The Vice Presidential election will be held on September 9.

5) A bill to set up a new Indian Institute of Management (IIM) in Guwahati at a cost of Rs 555 crore was passed in Parliament.

6) The Agni-5 missile, which can hit targets with a range of up to 5000 km and accurately, was successfully tested.

7) The central government has allocated Rs 67,000 crore for the purchase of 97 new Tejas aircraft for the Air Force.

8) The White House has explained that the additional taxes were imposed on India to stop the war in Ukraine.

9) India has won two gold and two bronze medals at the Asian Shooting Championships in Kazakhstan.

No comments:

Post a Comment