Showing posts with label தமிழக அரசின் மாணவர் வழிகாட்டி. Show all posts
Showing posts with label தமிழக அரசின் மாணவர் வழிகாட்டி. Show all posts

Tuesday, 14 February 2023

‘நான் முதல்வன்’ இணையதளத்தைப் பாருங்கள்!

‘நான் முதல்வன்’ இணையதளத்தைப் பாருங்கள்!

முதல்வராக விளங்க விரும்பும் மாணவர்களுக்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.

Ø உயர்கல்விக்கான வழிகாட்டல்கள்,

Ø வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள்,

Ø நுழைவுத்தேர்வு குறித்த செய்திகள்,

Ø கல்விக்கடன் குறித்த தகவல்கள்

என மாணவர்கள் முதல்வராக ஆவதற்கான அத்தனைத் தகவல்களும் செய்திகளும் கொட்டிக் கிடக்கும் களஞ்சியமாக ‘நான் முதல்வன்’ இணையதளம் அடங்கியிருக்கிறது.

உயர்நிலைக்கல்வி, மேனிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இணையதளமாக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டுமல்லாது கல்வி குறித்தும் வேலைவாய்ப்புகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் குறித்தும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் அறிந்து கொள்ள ஏராளமான தகவல்கள் இத்தளத்தில் நிறைந்திருப்பதால் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய இணையதளமாக இத்தளம் உள்ளது.

இவ்விணையதளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://naanmudhalvan.tnschools.gov.in/

*****