அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 15
எமலோக டிக்கெட்!
ஜெர்மனியின்
அந்த நள்ளிரவுத் தூறலில், பீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து மார்த்தா வீட்டின் கதவை டமடமவெனத்
தட்டினான்.
மார்த்தா
கதவைத் திறந்தாள். "என்னடா பீட்டர், இந்த நேரத்துல? சாத்தான் எதாவது வர்றானா?"
"சாத்தான்
வந்தாக்கூட பரவாயில்லை மார்த்தா, வெளிய பிலிப் அண்ணன் அந்த 'மாலியஸ் மாலிபிகாரம்' புத்தகத்தோடும்
ஒரு கும்பலோடும் வந்துட்டு இருக்கான். உன் சாப்டர் க்ளோஸ்!"
"ஏன்?
நான் என்ன பண்ணினேன்? நியாயமாத்தானே வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன்?"
"நீ
நேத்து பிலிப் அண்ணன் வீட்டுப் பக்கமா போனப்ப, அவனோட செம்பொட்டை பூனை குறுக்க ஓடிச்சாம்.
அதுக்கப்புறம் அவனுக்கு லைட்டா விக்கல் எடுத்திருக்கு. அந்தப் புத்தகத்துல இருக்குற
42ஆவது பக்க லாஜிக் படி, நீ பூனையா மாறி அவன் காபியில எச்சில்ல துப்புனதா முடிவு பண்ணிட்டான்.
க்ரேமர் பாதிரியார் எழுதின கைடு புக்ல அப்படிப் போட்டிருக்காம்!"
வெளியே
தீப்பந்தங்களோடு அந்தக் கும்பல் கத்தியது.
"மார்த்தா
வெளியே வா! நீ சூனியக்காரியா இல்லையான்னு டெஸ்ட் பண்ணனும்!"
"இப்படி
ஊர்க்காரனுங்க கத்துறானுங்களே. என்ன டெஸ்ட் பீட்டர்?" மார்த்தா நடுங்கினாள்.
"ரொம்ப
சிம்பிள். உன்னைக் கையைக் காலைக் கட்டி ஆத்துல போடுவாங்க. நீ முங்கிச் செத்தா, அடப்பாவமே,
நல்ல பொண்ணாச்சேன்னு ஊரே சேர்ந்து அழுகும். ஒருவேளை நீ கஷ்டப்பட்டு நீந்தி மேல வந்தா,
பிசாசுதான் உன்னைத் தூக்கிவிட்டுச்சுன்னு சொல்லி உசுரோட உன்னைக் கட்டையில போட்டு லைவா
கொளுத்துவாங்க. சுருக்கமா சொன்னா, செத்தா நீ நல்லவள்; தப்பிச்சா சூனியக்காரி. ரெண்டுலயுமே
உனக்கு சாவு கன்பார்ம்."
"என்னடா
இது கார்ப்பரேட் கம்பெனி இன்டர்வியூவ விட மோசமான லாஜிக்கா இருக்கு?"
"லாஜிக்கும்
கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. இந்த 1487 இதான் ரூல். இப்ப எவனாவது ஒருத்தன்
அவள் விட்ச்ன்னு கத்தினா போதும், ஊரே தீப்பந்தத்தை பத்த வைக்கும். கிளம்பு, புழக்கடை
வழியா தப்பிச்சு ஓடலாம்" என்றான் பீட்டர்.
இருவரும்
இருட்டில் குதித்து ஓட, பின்னாடி கும்பல் பிலிப்பின் பூனையையும், அந்த லோ பட்ஜெட் பேய்
கைடு புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு, "சூனியக்காரி ஒழிக! பூனை வாழ்க!" என்று
பயங்கர சீரியஸாகக் கத்திக்கொண்டு ஓடியது.
அறிவியலே
இல்லாத ஊரில், அதுவும் மிகப்பெரிய தத்துவமேதைகன் அவதரித்த ஜெர்மனியில், ஒரு பைத்தியக்காரப்
புத்தகத்தை கையில் வைக்கோல் போலப் பிடித்துக்கொண்டு மனிதர்கள் ஆடிய ஆட்டம் அது!
எதற்கு
இந்தக் கதை?
1487க்குப்
பிறகு ஜெர்மனி இப்படித்தான் மாறிப் போனது. ஐம்பதாயிரம் பெண்களை இப்படி நரபலி கொண்டது.
எல்லாவற்றுக்கும்
காரணம் அந்த ஒரு புத்தகம்.
அதைப்
பற்றிக் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க என்கிறீர்களா? நாளை வரை கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்.
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment