Showing posts with label இன்றைய செய்திகள். Show all posts
Showing posts with label இன்றைய செய்திகள். Show all posts

Saturday, 27 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.09.2025)

1) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர். தமிழக அரசியல் பிரச்சாரக் கூட்டமொன்றில் இந்த அளவுக்கு நெரிசலில் உயிர் பலி ஏற்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.

2) கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்குப் பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3) கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.

4) கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிப் பலியானோருக்குக் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

5) நாடு முழுவதும் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) நான்காம் தலைமுறை அலைவரிசை சுதேசி (4ஜி) சேவையைத் துவங்கியது.

6) பயிர் உற்பத்தியில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

7) இந்தியாவில் அதிக அளவு பார்வையிட்ட சுற்றுலா தலங்களில் தாஜ்மஹால் முதலிடம் பிடித்துள்ளது.

8) மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 85000 ரூபாயைக் கடந்தது.

9) எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார். அவருக்கு வயது 61.










Education & GK News

1) 39 people died in a stampede at a campaign rally of TVK leader Vijay in Karur. This is the first time that such a large number of lives have been lost in a stampede at a political campaign rally in Tamil Nadu.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced a compensation of Rs 10 lakhs to the families of those who died in the Vijay campaign rally stampede in Karur.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered a judicial inquiry into the deaths at the Karur Vijay campaign rally.

4) The President, Prime Minister, Governor of Tamil Nadu and Chief Minister of Tamil Nadu have expressed their condolences to the victims of the stampede at the Vijay campaign rally in Karur.

5) Bharat Sanchar Nigam Limited (BSNL) has launched Swadeshi 4G service across the country.

6) Tamil Nadu has topped the list of Indian states in green gram production.

7) Taj Mahal has topped the list of most visited tourist destinations in India.

8) Gold price crosses Rs 85,000 per sovereign again.

9) Writer Ramesh Preethan passes away. He was 61.

Sunday, 22 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.12.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை 24.12.2024 முதல் 01.01.2025 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

2) அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் ஜனவரி 2 முதல் வழக்கம் போலச் செயல்படும்.

3) புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 2 முதல் நடைபெறும்.

4) வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பேரணியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

5) வார்டு வரையறைகள் மற்றும் இடஒதுக்கீடுகள் நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

6) தமிழகத்தில் 120 கோடியில் 220 திருக்குளங்கள் சீரமைக்கப்படுகின்றன.

7) கடும் பனிப்பொழிவால் மல்லிகை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகையின் விலை கிலோவுக்கு இரண்டாயிரத்தைக் கடந்தது.

8) செறிவூட்டப்பட்ட அரிசிக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட உள்ளது.

9) இந்தியாவின் திறன் மிகு பணியாளர்களுக்கு உலகெங்கும் வாய்ப்பு உள்ளதாகப் பிரதமர் குவைத்தில் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

10) அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகத் தியானத்தை மாற்றுமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

11) கொரோனா பாதிப்பில்லாத நிலையைத் தமிழகம் எட்டியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

12) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480/- அதிகரித்துள்ளது.

English News

1) Half-yearly vacation for schools has been announced from 24.12.2024 to 01.01.2025.

2) Half-yearly exams are over and schools will function as usual from January 2.

3) Half-yearly exams will be held from January 2 in the storm-affected Cuddalore, Villupuram and Tiruvannamalai districts.

4) School Education Minister Anbil Mahesh Poyyamoshi participated in a rally held in Nandanam, Chennai to create reading awareness.

5) The Tamil Nadu government has said that the announcement regarding the local body elections will be made only after the ward limitation and reservation procedures are completed.

6) 220 Temple ponds are being renovated out of 120 crores in Tamil Nadu.

7) Jasmine harvest has been affected due to heavy snowfall. The price of jasmine has crossed two thousand per kg.

8) Goods and Services Tax (GST) on fortified rice to be reduced.

9) Prime Minister proudly stated in Kuwait that there are opportunities for India's highly skilled workers all over the world.

10) Prime Minister has called upon the people of the country to make meditation a part of their daily lives.

11) The Health Department has announced that Tamil Nadu has reached the corona-free status.

12) Gold price has increased by Rs. 480/- per sovereign.

Friday, 20 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 21.12.2024 (சனி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 21.12.2024 (சனி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) புயல் மழை காரணமாக டிசம்பர் 12 இல் ஒத்தி வைக்கப்பட்ட பள்ளித் தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது.

2) சென்னை ஐஐடி ஆய்வகங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) டிசம்பர் 31 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4) அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

5) 18 மாவட்டங்களில் 34 உயர்நிலைப் பாலங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

6) தமிழகத்தை நோக்கி வந்த புயல் சின்னம் ஆந்திராவை நோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.

7) மதுரையில் நேற்றிலிருந்து 24 மணி நேர விமானச் சேவை துவங்கியது.

8) தமிழகத்தில் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் மகளிர் 600 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

9) ஆறு ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

10) இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

11) மகளிர் டி20 மட்டைப் பந்து போட்டியை இந்தியா கைப்பற்றியது.

English News

1) School exams postponed to December 12 due to stormy rains will be held today.

2) Public has been allowed to visit IIT Madras laboratories.

3) Admissions to newly started government vocational training institutes (ITIs) have been allowed till December 31.

4) Tamil Nadu government has given permission to fill 8997 vacant posts of cooking assistants in government schools on lump sum basis.

5) Chief Minister has ordered the construction of 34 high-level bridges in 18 districts.

6) The cyclone that came towards Tamil Nadu has moved towards Andhra Pradesh. There is a possibility of rain in Tamil Nadu for the next six days.

7) 24-hour flight service started in Madurai from yesterday.

8) 600 crore  times women have travelled under the free bus travel scheme in Tamil Nadu.

9) Bus fares have been increased in Puducherry after six years.

10) India's gold imports have increased to an unprecedented level.

11) India won the Women's T20 Cricket Tournament.

Thursday, 19 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.12.2024 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.12.2024 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2) ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூலுக்காக ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்பட உள்ளது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற உள்ள ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

4) மக்களைத் தேடி மருத்துவத்தின் இரண்டு கோடியாவது பயனாளரை முதல்வர் சந்தித்தார்.

5) ஏப்ரல் மாதத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி மையம் (ஏரோ ஹப்) செயல்படத் துவங்கும்.

6) தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவக் கழிவுகளுக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

7) புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று மாதத்திற்குள் ஓட்டுநர் உரிம்ம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8) 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நாளை குவைத் செல்கிறார்.

9) இணைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் 6.69 லட்ச அலைபேசி வில்லைகளை (சிம் கார்டுகள்) முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10) புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

11) அடுத்த ஆண்டு முதல் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

12) இந்திய மட்டைப்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

English News

1) The Sahitya Akademi Award for the year 2024 has been given to A.R. Venkatachalapathy.

2) A.R. Venkatachalapathy will be awarded for his book ‘Tirunelveli Ezhuchiyum V.O.C.Yum 1908’.

3) The Chief Minister has congratulated A.R. Venkatachalapathy for receiving the Sahitya Akademi Award.

4) The Chief Minister met two crore beneficiaries of medicine in search of the people.

5) The Sriperumbudur Aero Hub will start functioning from April.

6) The Green Tribunal has condemned the medical waste from Kerala being dumped in Tamil Nadu.

7) It has been announced that those who drive without wearing a helmet in Puducherry will be fined Rs. 1,000 and their driving licenses will be cancelled within three months.

8) For the first time in 43 years, the Prime Minister will visit Kuwait tomorrow.

9) The central government has announced that it has blocked 6.69 lakh SIM cards in an attempt to prevent cybercrime.

10) Russia has announced that it has found a vaccine for cancer.

11) Russia has announced that the cancer vaccine will be provided free of charge from next year.

12) Indian cricketer Ravichandran Ashwin has announced his retirement.

Wednesday, 18 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.12.2024 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.12.2024 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) தமிழ்நாட்டில் சிறப்பு செஸ் அகாதெமி உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

2) தமிழகத்தைச் சேர்ந்த உலக சதுரங்க சாதனையாளர் குகேசுக்கு முதல்வர் 5 கோடி பரிசளித்துக் கௌரவித்தார்.

3) பேரிடர்கள் மேல் பழி போடாமல் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

4) இணைய வழியில் நீட் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

5) மருத்துவத் துறையில் அதிகப் பெண்கள் பயின்று வருவது இந்தியா வளர்ந்து வருவதைக் காட்டுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

6) நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

7) சென்னை ஐசிஎப்புக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வந்தே பாரத் தொடர்வண்டிகளைத் தயாரித்ததைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

English News

1) The Chief Minister has announced that a special chess Academy will be set up in Tamil Nadu.

2) The Chief Minister has honored the world chess champion from Tamil Nadu, Kukesh, with a prize of 5 crores.

3) The School Education Minister has advised that we should not blame disasters but live in harmony with nature.

4) Union Education Minister Dharmendra Pradhan has said that he is considering conducting the NEET exam online.

5) President Draupadi Murmu has said that the increasing number of women studying in the medical field shows that India is growing.

6) The Mettur dam is at the point of filling for the third time this year.

7) Chennai ICF is being given the National Energy Conservation Award. This award is given in appreciation for the production of Vande Bharat trains.

Tuesday, 17 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 18.12.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடப் பிரிவு தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் வருகையும் மாணவர்களின் நினைவாற்றலும் அதிகரித்துள்ளதாக முதல்வரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

3) தமிழகத்தில் 25000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

4) காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்கி வருவதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5) நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவைச் சட்டத்துறை அமைச்சர் அர்ச்சுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.

7) பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாகக் குவைத் செல்கிறார்.

8) டெல்லியில் காற்று மாசு மீண்டும் உச்ச நிலைக்குச் சென்றுள்ளது.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has announced that a course on artificial intelligence will be started in government schools.

2) The School Education Minister has thanked the Chief Minister for the increase in student attendance and memory due to breakfast scheme in schools.

3) The Health Department has reported that 25,000 people have been affected by dengue in Tamil Nadu.

4) Heavy rains are likely in the northern coastal districts as a low-pressure area approaches the coast.

5) It has been informed in Parliament that 21 fake universities are functioning across the country.

6) Law Minister Arjun Ram Meghwal introduced the One Nation, One Election Bill.

7) Prime Minister Narendra Modi is visiting Kuwait on a state visit on December 21 and 22.

8) Air pollution in Delhi has again reached its peak.

Sunday, 15 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 16.12.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும்.

2) கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் சனிக் கிழமை அன்று உயிரிழந்தார்.

4) ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

5) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

6) திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

7) கன மழையின் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

8) சர்க்கரை நோய் கட்டுபாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9) சமூக வலைதளங்களைப் பார்த்துப் பிரசவம் பார்ப்பதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

10) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

11) அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக இன்று பிரதமரைச் சந்திக்கிறார்.

12) 2030க்குள் இந்தியாவில் ஆறாம் தலைமுறை அலைக்கற்றை (6ஜி) சேவை செயல்பாட்டுக்கு வரும்.

13) நவம்பரில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் குறைந்துள்ளது.

14) உலக சதுரங்க சாதனையாளர் குகேஷ்க்கு முதல்வர் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

English News

1) A low pressure area will form in the southeast Bay of Bengal in the next 24 hours.

2) The Chief Minister has said that the Tamil Nadu government is prepared to face heavy rains.

3) One of the senior leaders of the Tamil Nadu Congress Party, EVKS Elangovan, passed away on Saturday.

4) EVKS Elangovan's body was cremated with state honors.

5) 4500 cubic feet of surplus water was released from the Chembarambakkam lake.

6) A Maha Deepam was lit on a 2668-foot hill in Tiruvannamalai on the occasion of the Thirukarthigai festival.

7) The price of flowers has increased due to heavy rains.

8) Health Minister M. Subramanian has said that Tamil Nadu is a pioneer state in diabetes control.

9) The Health Department has advised people to avoid viewing social media while giving birth.

10) The presentation of the One Nation, One Election Bill in Parliament has been postponed.

11) Sri Lankan President Anura Kumara Dissanayake, who is on an official visit to India, will meet the Prime Minister today.

12) Sixth generation (6G) spectrum services will be operational in India by 2030.

13) The country's retail inflation has decreased in November.

14) The Chief Minister has announced a prize money of Rs 5 crore for world chess champion Kukesh.

Thursday, 12 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 13.12.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) நாளை மறுநாள் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது.

2) தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மிக கனத்த மழை பெய்வதற்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

3) மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

4) சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பியது.

5) பூண்டி ஏரியிலிருந்து அபாய நிலையைத் தவிர்க்க நீர் திறந்து விடப்படுகிறது.

6) டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழக மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

7) பாரதியாரின் படைப்புகள் தமிழின் பொக்கிசங்கள் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8) கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வைக்கம் விருது வழங்கப்படுகிறது.

9) மூன்று நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1300 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

10) இந்திய மத்திய வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.

11) தமிழகத்தின் குகேஷ் உலக சதுரங்க சாதனையாளர் பட்டம் வென்றார்.

English News

1) A new depression is forming near the Andamans the day after tomorrow.

2) A warning of very heavy rain has been issued for 16 districts of Tamil Nadu.

3) Several flights were canceled at the Chennai airport due to bad weather.

4) Chembarambakkam lake in Chennai was completely filled.

5) Water is being released from the Poondi lake to avoid a dangerous situation.

6) Tamil Nadu Lok Sabha members have urged in Parliament not to build a tungsten mine.

7) The Prime Minister has said that Bharatiyar's writing works are the treasures of Tamil.

8) Karnataka writer Devanura Mahadeva is being awarded the Vaikom Award.

9) The price of gold rose by more than Rs 1,300 per sovereign in three days.

10) Sanjay Malhotra took charge as the 26th Governor of the Reserve Bank of India.

11) Tamil Nadu's Kukesh won the world chess championship title.

Thursday, 28 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.11.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் சின்னம் மிக மெதுவாக நகர்கிறது.

2) பெங்கல் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) நாளை பலத்த காற்றுடன் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.

4) புயல் சின்னம் காரணமாக வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

5) ஒடிசாவில் அகில இந்திய டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

6) உதகமண்டலத்தில் குடியரசுத் தலைவர் முப்படைகளின் பயிற்சி அதிகாரிகளுடன் உரையாடினார்.

7) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

8) தமிழகத் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

9) மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகள் சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

10) அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சென்னையில் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

11) மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் போது பயணக் கட்டணம் 30 சதவீதம் குறையும்.

12) தேவேந்திரநாத் பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வராகிறார்.

13) ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

English News

1) The Fengal cyclone symbol that has formed in the Bay of Bengal is moving very slowly.

2) The Fengal cyclone is expected to cross the coast between Mamallapuram and Karaikal tomorrow.

3) There is a possibility of heavy rain with strong winds tomorrow.

4) The Bay of Bengal is seen in a state of turbulent due to the cyclone symbol.

5) The All India DGPs Conference is being held in Odisha for three days starting today.

6) The President interacted with the training officers of the military services in Udhagamandalam.

7) The normal life of the people has been severely affected by the continuous heavy rains in Thanjavur, Tiruvarur and Nagapattinam districts.

8) The third cyclone warning cage has been hoisted at the ports of Tamil Nadu.

9) Trains running at a speed of 280 kmph are being manufactured at Chennai ICF.

10) 500 electric buses are to be operated in Chennai from May next year.

11) When electric buses are introduced, fares will be reduced by 30 percent.

12) Devendranath Fadnavis becomes the Chief Minister of Maharashtra.

13) Hemant Soren takes oath as the Chief Minister of Jharkhand.

Tuesday, 26 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 27.11.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தின் பெயர்ப் பலகையில் இருந்த அரிஜன் காலனி எனும் பெயரை மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

2) பள்ளிப் பெயர்ப் பலகையில் பெயர் மாற்றம் செய்த அனைவருக்கும் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3) மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம், கட்டாய ஓய்வு, கல்விச் சான்றிதழ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

4) டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

5) மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படை விரைந்தது.

6) வங்கக் கடலின் காற்றழுத்தம் பெங்கல் புயலாக மாறியது.

7) நவம்பர் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

8) தமிழகத்தில் குழந்தைகளிடையே இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது.

9) ஜனவரி 14 பொங்கல் அன்று நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் (சி.ஏ) தேர்வு ஜனவரி 16க்கு மாற்றப்பட்டுள்ளது.

10) இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாசுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11) விரைவுல் துலங்கல் குறியீட்டுடன் கூடிய வருமான வரி அட்டை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamoshi changed the name of the school's nameplate in Namakkal district from Arijan Colony to Mallasamuthiram East.

2) The Chief Minister has praised all those who changed the name on the school nameplate.

3) The Director of Private Schools has sent a circular stating that action can be taken against teachers who misbehave with girl students, including dismissal, compulsory retirement, and cancellation of educational certificates.

4) There was heavy rains in the delta districts.

5) Disaster relief teams rushed to the delta districts for rescue and relief work.

6) The pressure of the Bay of Bengal turned into a Fengal cyclone.

7) Very heavy rains are likely in Tamil Nadu till November 29.

8) Influenza and dengue fever are spreading rapidly among children in Tamil Nadu.

9) The Chartered Accountant (CA) exam, which was scheduled to be held on Pongal on January 14, has been postponed to January 16.

10) Reserve Bank of India Governor Shaktikanta Das has been admitted to Apollo Hospital after suffering from sudden chest pain.

11) The Central Government has approved the issuance of PAN Card with QR Code.