Thursday, 19 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.12.2024 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.12.2024 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2) ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூலுக்காக ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்பட உள்ளது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற உள்ள ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

4) மக்களைத் தேடி மருத்துவத்தின் இரண்டு கோடியாவது பயனாளரை முதல்வர் சந்தித்தார்.

5) ஏப்ரல் மாதத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி மையம் (ஏரோ ஹப்) செயல்படத் துவங்கும்.

6) தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவக் கழிவுகளுக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

7) புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று மாதத்திற்குள் ஓட்டுநர் உரிம்ம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8) 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நாளை குவைத் செல்கிறார்.

9) இணைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் 6.69 லட்ச அலைபேசி வில்லைகளை (சிம் கார்டுகள்) முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10) புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

11) அடுத்த ஆண்டு முதல் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

12) இந்திய மட்டைப்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

English News

1) The Sahitya Akademi Award for the year 2024 has been given to A.R. Venkatachalapathy.

2) A.R. Venkatachalapathy will be awarded for his book ‘Tirunelveli Ezhuchiyum V.O.C.Yum 1908’.

3) The Chief Minister has congratulated A.R. Venkatachalapathy for receiving the Sahitya Akademi Award.

4) The Chief Minister met two crore beneficiaries of medicine in search of the people.

5) The Sriperumbudur Aero Hub will start functioning from April.

6) The Green Tribunal has condemned the medical waste from Kerala being dumped in Tamil Nadu.

7) It has been announced that those who drive without wearing a helmet in Puducherry will be fined Rs. 1,000 and their driving licenses will be cancelled within three months.

8) For the first time in 43 years, the Prime Minister will visit Kuwait tomorrow.

9) The central government has announced that it has blocked 6.69 lakh SIM cards in an attempt to prevent cybercrime.

10) Russia has announced that it has found a vaccine for cancer.

11) Russia has announced that the cancer vaccine will be provided free of charge from next year.

12) Indian cricketer Ravichandran Ashwin has announced his retirement.

No comments:

Post a Comment