பழக்க வழக்கத்தில் ஒரு கண் வையுங்கள்!
நீ எதைப்
பழகுகிறாயோ அதுவே உன் வழக்கமாகிறது.
அது
பழக்கமாகிறது என்பதை அறியாமல் கூட நீ அதைச் செய்யலாம்.
ஆனால்
அது உன் வழக்கமாகி விடும்.
எதைச்
செய்தாலும் அதைச் செய்வதற்குக் கடன் வாங்குபவர்கள் அதைத்தான் பழகுகிறார்கள்.
அதுவே
அவர்களது வழக்கமாகி விடுகிறது.
ஒன்றைச்
செய்வதற்காகச் சேமிக்கத் தொடங்குபவர்கள் அதைத்தான் பழகுகிறார்கள்.
அதுவே
அவர்களது வழக்கமாகி விடுகிறது.
இப்போது
எது உங்கள் வழக்கமாக இருக்கிறது?
அதை
நீங்கள் எப்படி பழகினீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
முறை
என்பது முக்கியம்.
அது
மிகச் சரியாக இருப்பது எப்போதும் முக்கியம். அதில் பிசிறடித்தால் சிக்கல்தான்.
சரியான
முறையே பழக்கமாக இருந்தால், அப்படிச் செய்வதே வழக்கமாக இருந்தால் அதன் விளைவுகள் மிகப்
பிரமாதமாக இருக்கும்.
கொஞ்சம்
அப்படி இப்படி என்றாலும் விளைவுகள் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.
மிகப்
பெரிய வெற்றி என்பது முக்கியமில்லை.
சாதாரண
வெற்றி என்றாலும் அது எப்போதும் உங்களுக்குச் சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
அது
உங்களுக்கு வசப்படும் வெற்றியாக இருக்க வேண்டும்.
அது
உங்களது முறையான, சரியான பழக்க வழக்கத்தில்தான் இருக்கிறது.
ஆகவேதான்
உங்கள் பழக்க வழக்கத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள்!
அது
உங்களை எப்போதும் ஒரு படி உயர்வாகவே வைத்திருக்கும்!
*****
No comments:
Post a Comment