Tuesday, 10 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 11.12.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

2) வங்கக் கடலில் புயல் சின்னம் வலுவடைந்தது.

3) தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

4) டிசம்பர் 27 இல் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

5) சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை 17 நாட்களுக்குக நடைபெறுகிறது.

6) சென்னை புத்தகக் கண்காட்சியில் 900 அரங்குகள் இடம் பெறுகின்றன.

7) பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி) பீமா சகி யோஜனா திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

8) கர்நாடாக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.

9) 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தில் அரிசி ஏற்றுமதி தொடங்குகிறது.

10) இந்திய கப்பற்படையில் ஏவுகணைகளுடன் கூடிய ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் இணைக்கப்பட்டது.

11) இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரைத் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.

English News

1) There is a possibility of very heavy rain in Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Thanjavur and Cuddalore districts today.

2) The cyclone has strengthened in the Bay of Bengal.

3) The Chief Minister has announced that the birth anniversary of Tamil great U.V. Swaminathar (February 19) will be celebrated as Tamil Literature Revival Day.

4) The Chennai Book Fair will begin on December 27. Deputy Chief Minister Udhayanidhi Stalin will inaugurate it.

5) The Chennai Book Fair will be held for 17 days from December 27 to January 12.

6) 900 stalls will be placed at the Chennai Book Fair.

7) The Prime Minister launched the Bima Sakhi Yojana scheme of a life insurance corporation to help women start self-employment.

8) Former Karnataka Chief Minister S.M. Krishna passed away due to old age.

9) Rice exports start at Chennai port after 15 years.

10) Missile-equipped warship INS Tushil inducted into Indian Navy.

11) South Africa wins cricket Test series against Sri Lanka.

No comments:

Post a Comment