Sunday, 22 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.12.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை 24.12.2024 முதல் 01.01.2025 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

2) அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் ஜனவரி 2 முதல் வழக்கம் போலச் செயல்படும்.

3) புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 2 முதல் நடைபெறும்.

4) வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பேரணியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

5) வார்டு வரையறைகள் மற்றும் இடஒதுக்கீடுகள் நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

6) தமிழகத்தில் 120 கோடியில் 220 திருக்குளங்கள் சீரமைக்கப்படுகின்றன.

7) கடும் பனிப்பொழிவால் மல்லிகை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகையின் விலை கிலோவுக்கு இரண்டாயிரத்தைக் கடந்தது.

8) செறிவூட்டப்பட்ட அரிசிக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட உள்ளது.

9) இந்தியாவின் திறன் மிகு பணியாளர்களுக்கு உலகெங்கும் வாய்ப்பு உள்ளதாகப் பிரதமர் குவைத்தில் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

10) அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகத் தியானத்தை மாற்றுமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

11) கொரோனா பாதிப்பில்லாத நிலையைத் தமிழகம் எட்டியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

12) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480/- அதிகரித்துள்ளது.

English News

1) Half-yearly vacation for schools has been announced from 24.12.2024 to 01.01.2025.

2) Half-yearly exams are over and schools will function as usual from January 2.

3) Half-yearly exams will be held from January 2 in the storm-affected Cuddalore, Villupuram and Tiruvannamalai districts.

4) School Education Minister Anbil Mahesh Poyyamoshi participated in a rally held in Nandanam, Chennai to create reading awareness.

5) The Tamil Nadu government has said that the announcement regarding the local body elections will be made only after the ward limitation and reservation procedures are completed.

6) 220 Temple ponds are being renovated out of 120 crores in Tamil Nadu.

7) Jasmine harvest has been affected due to heavy snowfall. The price of jasmine has crossed two thousand per kg.

8) Goods and Services Tax (GST) on fortified rice to be reduced.

9) Prime Minister proudly stated in Kuwait that there are opportunities for India's highly skilled workers all over the world.

10) Prime Minister has called upon the people of the country to make meditation a part of their daily lives.

11) The Health Department has announced that Tamil Nadu has reached the corona-free status.

12) Gold price has increased by Rs. 480/- per sovereign.

No comments:

Post a Comment