குழந்தைகள் விரும்பும் மனிதராக…
குழந்தைகளிடம் பேசுவது
ஒரு கலையாகும்.
குழந்தைகள் நம்மிடம்
பேசுவது அதை விட பெரிய கலையாகும்.
எல்லாரிடமும் குழந்தைகள்
இயல்பாக பேசி விட மாட்டார்கள்.
குழந்தைகளைப் பேச
வைக்க அவர்களுக்குப் பிடித்தமானவர்களாகவும், அவர்களது உளவியல் தெரிந்தவர்களாகவும் இருப்பது
முக்கியம்.
குழந்தைகள் பேச பேச
அவர்களை ஆர்வமாகக் கவனிக்க வேண்டும். நம் பார்வையாலேயே அவர்கள் பேசுவதை ஊக்கப்படுத்த
வேண்டும்.
அவர்கள் புதிய தகவல்கள்
அல்லது செய்திகளைக் கூறும் போது சபாஷ் போட வேண்டும்.
உணர்ச்சிகரமான செய்திகளைக்
கூறும் போது உச் கொட்ட வேண்டும்.
கதைகளைச் சொல்லும்
போது ம்
போட வேண்டும். அப்புறம் என்னாச்சு, ஐயோ, அடடா என்பன போன்ற சொற்களைச் சூழ்நிலைக்கு
ஏற்ப உபயோகப்படுத்த வேண்டும்.
இடையிடையே அம்மாடியோவ்,
அச்சச்சோ
என்பன போன்ற ஆச்சரியமூட்டும் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
அடடா நான் இப்படி
யோசிக்கவில்லையே என்று சொல்லி அவர்களை உற்சாகமூட்ட வேண்டும்.
குழந்தைகளிடம் எதையும்
நேரடியாகக் கூறி அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
அவர்களுக்குப் பிடித்தமான
செயல்பாடுகளில் ஈடுபட வைத்து அவற்றின் ஊடே அவர்கள் எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று
நினைக்கிறோமோ அவைற்றைப் புரிந்து கொள்ள வைக்க முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சிகள்
கனிவானவையாகவும் இனிமையானவையாகவும் அமைய வேண்டும். உதாரணமாகக் கதை கூறுதல், விளையாடுதல்,
பாட்டு பாடுதல், ஓவியர் வரைதல், வண்ணம் தீட்டுதல், நடனம் ஆடுதல், வெளியிடங்களுக்கு
அழைத்துச் செல்லுதல், பரிசுகள் வழங்குதல் போன்றவையாக அச்செயல்பாடுகள் அமையலாம்.
ஏனென்றால், நாம் நினைப்பதையே
குழந்தைகளும் நினைப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொன்றை
நினைத்துக் கொண்டு இருப்பார்கள். இதைப் புரிந்து கொண்டு அவர்களை அணுகினால் குழந்தைகள்
விரும்பும் மனிதராகவும், குழந்தைகள் ஆர்வமாக வந்து பேசும் அற்புத நபராகவும் நீங்கள்
இருப்பீர்கள்.
*****
No comments:
Post a Comment