இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 21.12.2024 (சனி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) புயல் மழை காரணமாக
டிசம்பர் 12 இல் ஒத்தி வைக்கப்பட்ட பள்ளித் தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது.
2) சென்னை ஐஐடி ஆய்வகங்களைப்
பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) டிசம்பர் 31 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
4) அரசு பள்ளிகளில்
காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்ப தமிழக
அரசு அனுமதி அளித்துள்ளது.
5) 18 மாவட்டங்களில்
34 உயர்நிலைப் பாலங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6) தமிழகத்தை நோக்கி
வந்த புயல் சின்னம் ஆந்திராவை நோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு
மழை வாய்ப்பு உள்ளது.
7) மதுரையில் நேற்றிலிருந்து
24 மணி நேர விமானச் சேவை துவங்கியது.
8) தமிழகத்தில் இலவசப்
பேருந்து பயணத் திட்டத்தில் மகளிர் 600 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
9) ஆறு ஆண்டுகளுக்குப்
பின் புதுச்சேரியில் பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
10) இந்தியாவின் தங்க
இறக்குமதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
11) மகளிர் டி20 மட்டைப்
பந்து போட்டியை இந்தியா கைப்பற்றியது.
English News
1) School exams postponed to December
12 due to stormy rains will be held today.
2) Public has been allowed to visit
IIT Madras laboratories.
3) Admissions to newly started
government vocational training institutes (ITIs) have been allowed till
December 31.
4) Tamil Nadu government has given
permission to fill 8997 vacant posts of cooking assistants in government
schools on lump sum basis.
5) Chief Minister has ordered the
construction of 34 high-level bridges in 18 districts.
6) The cyclone that came towards
Tamil Nadu has moved towards Andhra Pradesh. There is a possibility of rain in
Tamil Nadu for the next six days.
7) 24-hour flight service started in
Madurai from yesterday.
8) 600 crore times women have travelled under the free bus
travel scheme in Tamil Nadu.
9) Bus fares have been increased in
Puducherry after six years.
10) India's gold imports have
increased to an unprecedented level.
11) India won the Women's T20 Cricket
Tournament.
No comments:
Post a Comment