வரமே வந்தாலும் உங்கள் சுயமும் கொஞ்சம் தேவை!
உள்ளொளி
பெருக்கும் ஓர் உயர்ந்த கதை!
ஒருவர்
கடவுளிடம் லாட்டரியில் ஒரு லட்ச ரூபாய் விழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
திடீரென
அவர் முன் தோன்றிய கடவுள் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்து விட்டார்.
வேண்டிக்
கொண்டவருக்கு ஏக சந்தோசம்.
ஒரு
லட்ச ரூபாய் லாட்டரி விழப் போகும் அந்த நாளை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு
வாரம் ஆனது. ஒரு மாதம் ஆனது. ஓர் ஆண்டும் ஆனது. அவருக்கு லாட்டரியில் ஒரு லட்சம் விழவே
இல்லை.
அப்படியே
இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என ஆண்டுகள் கடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டன.
பொறுத்துப்
பொறுத்து வெறுத்துப் போன அவர் கடவுளிடம் என்ன இப்படி செய்து விட்டீர்களே என கண்ணீரோடு
முறையிட்டார்.
அவர்
முன் தோன்றிய கடவுள், உனக்கு ஒரு லட்ச ரூபாய் லாட்டரியில் விழுவதற்கு நானும் எவ்வளவோ
முயற்சிக்கிறேன். ஆனால் அதற்கு நீ ஒரு லாட்டரிச் சீட்டை வாங்க வேண்டும். அதை எப்போது
வாங்கப் போகிறாய்? என்று கேட்டார்.
அப்போதுதான்
அந்த மனிதருக்குத் தன்னுடைய தவறு புரிந்தது.
என்னதான்
கடவுளின் வரமே கிடைத்தாலும் அந்த வரம் பலிப்பதற்குத் தன்னுடைய முயற்சியும் கொஞ்சம்
தேவை என்பதை அந்த மனிதர் புரிந்து கொண்டார்.
என்ன
அன்பர்களே! அது உண்மைதானே? இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இது போன்ற பயனுள்ள
கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment