வேலையில் ஜொலிஜொலிக்க…
வேலையை
வெற்றிகரமாகச் செய்ய பல நுட்பங்கள் உள்ளன. அதன் மூலம் வேலையில் ஜொலிப்பதோடு, மென்மேலும்
அடுத்தடுத்த பதவிகளையும் பெற முடியும். அவற்றைப் பற்றிக் காண்போம்.
எந்த
வேலையாக இருந்தாலும் பத்து நிமிடம் முன்னதாக அந்த வேலைக்கான இடத்தில் இருங்கள்.
எப்போதும்
புன்னகையுடன் பேசுங்கள். எது நடந்தாலும் பதற்றம், படபடப்பு
வேண்டாம்.
வேலை
குறித்து மற்றவர்களுடன் உரையாடத் தயங்காதீர்கள். கூச்ச சுபாவத்திலிருந்து வெளியே வருங்கள்.
மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க யோசிக்காதீர்கள்.
மற்றவர்களை
விட நீங்கள் திறமைசாலி என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்தாதீர்கள். அதை உங்கள் வேலையின்
மூலம் வெளிப்படுத்துங்கள்.
பாராட்டுகளுக்கு
ஆசைப்பட்டு சக்திக்கு மீறி வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் சக்திக்குட்பட்டு வேலைகளைச் செய்தாலே பாராட்டுகள் உங்களைத்
தேடி வரும்.
உற்சாகமாக
இருங்கள். சோர்வாக இருக்காதீர்கள். நேர்மறையாகப் பேசுங்கள். எதிர்மறையாகப் பேசாதீர்கள்.
நம்பிக்கையுடன் இருங்கள். விரக்தி வேண்டவே வேண்டாம்.
இயல்பாக
இருங்கள். மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்று போலி
வேடங்கள் வேண்டாம்.
உங்களை
நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால் அதை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள் என்ற நிலையில்
உங்களை வைத்திருங்கள்.
வம்பு
பேசுபவர்கள், குறை கூறுபவர்கள், எல்லாவற்றையும் எதிர்ப்பவர்களுடன் தாமரை இலை போல தண்ணீர்
போல இருங்கள்.
நீங்கள்
அணியும் உடைகள் நாசுக்காகவும் உங்கள் பண்பை வெளிப்படுத்தும் வகையில் எளிமையாகவும் அதே
நேரத்தில் பொருத்தமாகவும் இருக்கட்டும்.
வேலையிடத்தில்
நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். வேலை பற்றி மனம் திறந்து பேசுபவர்களாக அவர்கள்
அமையட்டும்.
இப்படி
மட்டும் இருந்து விட்டால் பணியிடம் உங்களுக்குச் சொர்க்கபூமிதான். தினம் தினம் பணி
செய்வது உங்களுக்கு உற்சாகமூட்டும் அனுபவம்தான்.
*****
No comments:
Post a Comment