2025 ஆம் ஆண்டின் எண்ணியல் சிறப்புகள்!
இன்று
2025 ஆம் வருடம் பிறக்கிறது.
2025
என்ற இந்த ஆண்டின் எண்ணில் பல சிறப்புகள் உள்ளன.
இது
ஒரு வர்க்க எண். அதாவது 45 × 45 = 452 = 2025.
அத்துடன்
52 × 92 இன் மதிப்பும் 2025.
அது
மட்டுமில்லாது 402 + 202 + 52 என்கிற மூன்று வர்க்க
எண்களின் கூடுதலும் 2025.
மேலும்
13 + 23 + 33 + 43 + 53 +
63 + 73 + 83 + 93 என ஒன்றிலிருந்து ஒன்பது
வரையுள்ள எண்களின் கனங்களின் கூடுதலாக அமையும் சிறப்பும் 2025க்கு உள்ளது.
ஆண்டுகளில்
இதற்கு முன் வர்க்க எண்ணாக அமைந்த ஆண்டு 1936. அதாவது 1936 என்பது 44இன் வர்க்கமாக
அமைவதாகும். அதைத் தொடர்ந்து தற்போது வர்க்க எண்ணாக அமையும் ஆண்டு 2025 என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 9. எனவே இந்த ஆண்டின் எண்ணானது மூன்றாலும், ஒன்பதாலும் மீதியின்றி வகுபடும். மேலும் இந்த ஆண்டு 5 மற்றும் 25 ஆகிய எண்களாலும் மீதியின்றி வகுபடும்.
இத்துணை
கணித எண்ணியல் சிறப்புமிக்க ஆண்டாக 2025 ஆண்டு அமைவதை இந்த ஆண்டின் துவக்கத்தில் எண்ணிப்
பார்ப்பது சிறப்புதானே!
No comments:
Post a Comment