மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்!
அறுபது
வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வதை விட,
தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில்
ஒருவர் அதிகபட்சம்
30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில்
ஆண்டுக்கு 8.2
சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
அந்த
வகையில் முப்பது லட்சம் முதலீடு செய்தால் மாதா மாதம் 20,500/- ரூபாய் வட்டித் தொகையாகக்
கிடைக்கும். ஆனால் இந்த அஞ்சலகத் திட்டத்தில் இந்த வட்டித் தொகையானது மூன்று மாதங்களுக்கு
ஒரு முறைதான் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கியில்
செய்யும் முதலீட்டுக்கு அதிகபட்சம் ஐந்து லட்சம் வரைதான் காப்பீட்டுப் பலன் இருக்கிறது.
ஆனால் அஞ்சலகத் திட்டமான இதற்கு 100 சதவீத முதலீட்டுத் தொகைக்கும் முதலீட்டுப் பாதுகாப்பு இருக்கிறது.
அத்துடன்
இவ்வஞ்சலகத் திட்ட முதலீட்டுத் தொகைக்கு 80சி பிரிவில் நிதியாண்டில் 1.5 லட்சம்
வரைக்கும் வருமான வரிச் சலுகையும் உள்ளது.
மூத்த
குடிமக்கள் இந்த அஞ்சலகத் திட்டத்தைப் பரிசீலனைச் செய்யலாமே!
*****
No comments:
Post a Comment