பணம் குறித்த பத்து விதிகள்!
1) செலவு போகச் சேமிக்கலாம் என்பது கூடாது. சேமிப்பு போகத்தான் செலவழிக்க வேண்டும்.
2) அவரச கால நிதியை உருவாக்குங்கள். கடன் வாங்க விரும்பாதவர்களும்
கடன் வாங்கும் இடம் அதுதான்.
3) சிறிய
தொகை என்று அலட்சியம் செய்யாதீர்கள். சிறு துளி பெரு வெள்ளம்.
சிறியதாகச் சேமித்தாலும் சேமித்துக் கொண்டே இருங்கள்.
4) தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். தேவையான பொருட்களை
வாங்க பணம் இல்லாமல் போய் விடும்.
5) பட்டியல் போட்டு செலவு செய்யுங்கள். சட்டியில் இருக்கும்
வரைதான் அகப்பையில் வரும்.
6) எதையாவது
வாங்க வேண்டும் என்று தோன்றினால் அந்த யோசனையை ஒரு நாளாவது தள்ளிப் போடுங்கள். அதை
நிச்சயமாக வாங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து உங்களுக்கே ஒரு தெளிவு வந்து விடும்.
7) பணம் தொடர்பான ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருங்கள். அவற்றைப்
பற்றி வீட்டில் இருப்போர்களிடம் சொல்லி வையுங்கள்.
8) பணம்
கேட்டு உணர்வுபூர்வமாக மிரட்டுபவர்களை, அச்சுறுத்துபவர்களை நிர்தாட்சண்யமாக நிராகரியுங்கள்.
அவர்களுக்கு உங்களுக்கு மறுப்பைக் காட்ட கொஞ்சம் கூட யோசிக்காதீர்கள்.
9) பேராசைப்பட்டு
பெரு நஷ்டத்தில் சிக்காதீர்கள். அளவான லாபம் வளமான வாழ்வு
என்பதை மனதில் கொள்ளுங்கள்.
10)
நீங்கள் கற்றுக் கொண்ட பண பாடங்களை உங்கள் தலைமுறைக்கு நிதானமாகவும் பொறுமையாகவும்
கடத்துங்கள்.
*****
No comments:
Post a Comment