பணம் பண்ணுவதற்கான இரண்டு விதிகள்!
வாழ்க்கையில்
பணத்தைச் சம்பாதிப்பதற்கு வாரன் பப்பெட் இரண்டு விதிகளைக் கூறுகிறார்.
முதல்
விதி என்னவென்றால், பணத்தை இழக்காதே.
இரண்டாவது
விதி என்னவென்று கேட்கிறீர்களா?
முதல் விதியை மறக்காதே என்பதுதான் இரண்டாவது
விதி.
முதல்
விதியாவது பரவாயில்லை. இரண்டாவது விதி ஒரு மாதிரியாக இருக்கிறது என்கிறீர்களா?
மனிதர்கள்
எந்த அளவுக்கு மறதி மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை இரண்டாவது விதி கூறுகிறது.
இப்போது ஒவ்வொரு விதியாகப் பார்த்து விடுவோமே.
அது
என்ன பணத்தை இழக்காதே?
நாம்
பணத்தைப் பல வழிகளில் இழக்கிறோம்.
ஆடம்பரச்
செலவுகள், அநாவசியச் செலவுகள், தவறான பழக்கங்கள் என்று மனிதர்கள் இழக்கும் பணத்திற்கு
அளவில்லை.
தினந்தோறும்
புகைப் பிடிக்கும் ஒரு மனிதர் புகைப் பிடிப்பதற்காகச் செலவிடும் தொகையை ஆயுள் முழுமைக்கும்
கணக்கிட்டுப் பாருங்களேன். அதே போல மது அருந்தும் ஒருவர் அதற்காக ஆயுள் முழுவதும் செலவிடும்
தொகையைக் கணக்கிட்டுப் பாருங்களேன். உண்மை உங்களுக்கே புரியும். அவர் எந்த அளவுக்குப்
பணத்தை இழக்கிறார் என்பது தெரியும்.
கௌரவத்திற்காகவும்,
ஆடம்பரத்திற்காகவும் நாம் செலவு செய்து இழக்கும் பணமும் கொஞ்சமா நஞ்சமா என்ன?
ஷாப்பிங்
என்ற பெயரில் நாம் செய்யும் அநாவசியச் செலவுகளைச் சொல்லவும் வேண்டுமோ?
இது
மட்டுமா? பணத்தைச் சூதாடி இழப்பவர்கள், ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருந்து மருத்துவச்
செலவினங்களுக்காக இழப்பவர்கள், பொறுப்பில்லாமல் பணத்தைக் கையாண்டு இழப்பவர்கள், நிதி
நிர்வாகம் தெரியாமல் இழப்பவர்கள், தொழில் தொடங்கி, வியாபாரம் தொடங்கி அவற்றை முறையாக
நடத்தத் தெரியாமல் இழப்பவர்கள் என்று பணத்தை இழப்பவர்கள்தான் எத்தனை வகை!
இப்படி
இழக்கும் பணத்தைச் சேமித்து வைத்தால், சேமித்து வைத்ததை நல்ல விதமாகப் பாதுகாப்பாக
முதலீடு செய்தால், பணத்தைப் பெருக்க அதை விட வேறென்ன சிறந்த வழியிருக்கிறது? இதைத்தான்
சொல்கிறார் வாரன் பப்பெட்.
இப்போது
இரண்டாவது விதிக்குச் செல்வோமா?
இந்த
முதல் விதியை நாம் மறந்து விடுகிறோமா என்ன?
நிச்சயமாகக்
கேட்பதற்கு நன்றாக இருக்கும் இந்த முதல் விதியை நாம் மறந்து விடுகிறோம்தான்.
யாராவது
நம்மை விட சிறப்பாக ஆடை உடுத்தி வந்தால் போதும், அவரை விட சிறந்த ஆடையை வாங்க வேண்டும்
என்று முதல் விதியைக் காற்றில் பறக்க விட்டு விடுகிறோம்.
உங்களை
விட சொகுசான காரில் ஒருவர் வந்து இறங்கினாலோ, உங்களை விட பெரிய வீட்டை ஒருவர் கட்டி
விட்டாலோ நீங்கள் சும்மா இருப்பீர்களா? முதல் விதியை மறந்து விட்டு என்ன செய்வீர்கள்?
அவரை விட அதிகமாகத் தண்டமாகச் செலவு பண்ணி அதை வாங்கத்தானே முயற்சி செய்வீர்கள்.
உங்களை
விட உயர்வாக யார் இருந்தாலும் நீங்கள் முதல் விதியைக் காற்றில் பறக்க விட்டு விட்டு,
அவரை விட உயர்வாக மாற பணத்தை வாரி இறைத்துக் கண்மூடித்தனமாகச் செலவு செய்ய தயாராகி
விடுகிறீர்கள்தானே? இந்தத் தவறைத்தான் வாரன் பப்பெட் சொல்கிறார், எப்போதும் முதல் விதியை
மறக்காதே என்று. முதல் விதி என்ன? பணத்தை இழக்காதே என்பதுதானே. அதாவது உங்களை விட உயர்வாக
இருக்கும் ஒருவரைப் பார்த்து அவரை விட உயர்வாக மாற வேண்டும் என்று செலவு செய்து பணத்தை
இழக்காதீர்கள்.
இப்போது
புரிகிறதா? முதல் விதியை மறப்பதற்கான சூழ்நிலைகள் எப்படியெல்லாம் உருவாகிறது என்று.
இதனால்தான் வாரன் பப்பெட் பணம் சேர்ப்பதற்கு இந்த இரண்டு விதிகளும் முக்கியம் என்கிறார்.
நீங்களும்
இந்த இரண்டு விதிகளையும் எப்போதும் மனதில் கொண்டு, உங்கள் வாழ்வில் கையாண்டு வளமோடும்
நலமோடும் பணப்பலத்தோடும் வாழுங்கள்.
*****
No comments:
Post a Comment