Wednesday, 4 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.12.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரம் அரையாண்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

3) திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோடியேற்றத்துடன் துவங்கியது.

4) கடந்த 50 ஆண்டுகளில் வல்லுநர்களால் கணிக்க முடியாத புயலாக பெஞ்சல் புயல் அமைந்துள்ளது.

5) தமிழகத்தைச் சூறையாடிய பெஞ்சல் புயல் கேரளாவிலும் கைவரிசையைக் காட்டி வருகிறது.

6) டிசம்பர் 9, 10 இல் தமிழக சட்டசபை கூடுகிது.

7) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது.

8) தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

9) மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவி ஏற்க உள்ளார்.

10) ஏக்நாத் சிண்டே, அஜித் பவார் இருவரும் மகாராஷ்டிர துணை முதல்வர்களாகப் பதவி ஏற்க உள்ளனர்.

11) மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.

12) நேற்று விண்ணில் பாய்வதாக இருந்த பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்று விண்ணில் பாய்கிறது.

13) கண்ணில் ரத்தம் வரவழைக்கும் வைரஸ் தாக்கி ஆப்பிரிக்காவில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the half-yearly examinations are scheduled to be held in the first week of January in the rain-affected districts.

2) Those who wish to apply for the public examinations of class 10, class 11 and class 12 can apply from tomorrow.

3) The Karthigai Deepam festival in Tiruvannamalai began with a bang.

4) Cyclone Fengal is the most unpredictable storm in the last 50 years.

5) Cyclone Fengal, which devastated Tamil Nadu, is also showing its raining in Kerala.

6) The Tamil Nadu Assembly will meet on December 9 and 10.

7) The water inflow to Okenakkal has increased to 30,000 cubic feet.

8) The water resources department has said that the groundwater level has risen in Tamil Nadu.

9) Devendra Fadnavis is set to take oath as the Chief Minister of Maharashtra today.

10) Eknath Shinde and Ajit Pawar are set to take oath as Maharashtra Deputy Chief Ministers.

11) The Prime Minister is set to attend the swearing-in ceremony of the Maharashtra Chief Minister.

12) The PSLV-C59 rocket, which was scheduled to take off yesterday, will take off today due to technical glitches.

13) 15 people have died in Africa due to a virus that causes bloodshot eyes.

No comments:

Post a Comment