இல்லம் தேடிக் கல்வி – ஜிங் சிங் பாடல்
இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள் மாணவர்களிடம் பாடுவதற்கான ஜிங் சிங் பாடலைப் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி – ஜிங் சிங் பாடல்
இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள் மாணவர்களிடம் பாடுவதற்கான ஜிங் சிங் பாடலைப் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி – வணக்கம் பாடல்
இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள் மாணவர்களிடம் பாடுவதற்கான வணக்கம் பாடலைப் பதிவிறக்கம் செய்ய கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
மயிலைப் போல ஆடி வந்தேனே! பாடல்
மயிலைப் போல ஆடி வந்தேன்
தக்க தகதிமி தோம்
குயிலைப் போலக் கூவி வந்தேன்
குக்கூ குக்கூ கூ
குதிரைப் போல ஓடி வந்தேன்
டக் டக் டக் டக் டக்
கிளியைப் போலப் பாடி வந்தேன்
கிக்கீ கிக்கீ கீ
ஆடி வந்தேனே!
ஓடி வந்தேனே!
கூவி வந்தேனே!
பாடி வந்தேனே!
விறகொடிச்ச காலம் எல்லாம்
போயே போச்சுங்க
சிறகு முளைச்ச சின்னப் பறவை
இப்போ நானுங்க
கம்பால் அடிச்ச காலம் எல்லாம்
மாறிப் போச்சுங்க
கனியாய் இனிக்கும் கல்வித்திட்டம்
கொண்டு வந்தாங்க
(ஆடி
வந்தேனே!)
சுத்தமா செஞ்சு வச்ச சத்துணவு
பத்திரமா மூடி வச்ச குடி
தண்ணீரு
பல்ல விளக்கி முகத்தைக் கழுவி
ரொம்பதான் ஜோரு
அம்மா போல வாத்தியாரு பார்த்து
வந்தாரு
(ஆடி
வந்தேனே!)
பத்துவகைத் திறன்களை பதியம்
போட்டாங்க
பொத்தி வச்ச மல்லிகை பூவா
பாடம் படிச்சோம்ங்க
மொத்தத்தில முத்து லெட்சுமி
கல்பனா சாவ்லா
அன்னை தெரசா போல நாங்க ஆகப்
போறோம்ங்க
(ஆடி
வந்தேனே!)
இல்லம் தேடிக் கல்வி - நடனப் பாடல்
சுட்டு விரலும் சுண்டு விரலும்
சேர்ந்து கொண்டது
இரு விரலுடன் மற்ற விரல்களும்
இணைந்து கொண்டது
விரல்களோடு கைகளும்தான் தாளம்
போட்டது
கைகளோடு தோள்களும்தான் சேர்ந்து கொண்டது
தோள்களோடு தலையும்தான் இணைந்து
கொண்டது
(வேகமாகப் பாடுதல்)
தலையோடு இடுப்பும்தான் இணைந்து
கொண்டது
இடுப்போடு கால்களும்தான்
ஆடி நின்றது
(வேகமாகப் பாடுதல்)
தலையும் தோளும் இடுப்பும் காலும் சேர்ந்து கொண்டது
தையா த்தக்கா
தையா த்தக்கா
த்தையா த்க்கா தை
தையா த்தக்கா
தையா த்தக்கா
த்தையா த்க்கா தை
(வேகமாகப் பாடுதல்)
(பின்பு மெதுவாகப் பாடுதல்)
காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம் பாடல்
இல்லம் தேடிக் கல்விக்குப் பயன்படும் இனிமையூட்டும்
பாடல்களில் ஒன்றான ‘காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம்’ பாடல்.
இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி செயலி (APP) பெற…
இல்லம் தேடிக் கல்விக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியை பள்ளியின் UDISE எண்ணை பயனீட்டுச் சொல்லாகவும் (User ID) UDISE எண்ணோடு
@itk என்பதைச் சேர்த்து கடவுச் சொல்லாகவும் (Password) கொண்டு இயக்கலாம். இல்லம் தேடிக்
கல்விக்கான செயலியைப் (APP) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பதிவுக்கான இணையதளம்
இல்லம் தேடிக் கல்விக்கான தன்னார்வலர்களைப்
பதிவு செய்வதற்கான இணையதளத் தொடர்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி – பிரச்சாரப் பாடல்
தானேனானே தன்னானன்னா
தானே தானானானே
தன்னானன்னா
வாறோம் வாறோம் வாறோமுங்க
நாங்க இல்லம் தேடி வாறோமுங்க
அட வாறோம் நாங்க வாறோம் இப்ப வாறோம்
(வாறோம்)
வேலைக்கு தான் போகும் பிள்ளை
வீட்டுக்குள்ள இருக்கும் புள்ள
கடைத்தெருவில் சுத்தும் பிள்ளை
கம்மாக் கரையில் நிற்கும் புள்ள எல்லாரையும் கூட்டிட்டு
நம்ம இல்லம் தேடி மையத்துக்கு
(வாறோம் )
ஆடு மாடு மேய்ச்சுக்கிட்டு
ஆலை வேலை செஞ்சுகிட்டு
பள்ளிக்கூடம் விட்டுப்புட்டு
பாவமாக நிக்கிறாங்க
ஊருகூடி வந்திடுங்க நீங்க ஒண்ணா சேர்ந்து நின்னுடுங்க
(வாறோம்)
அ, ஆ, இ, A, B, C ஆடிப்பாடி தெரிஞ்சிக்கலாம்
அண்ணா, அக்கா சொல்லித்தர அருமையாக புரிஞ்சுக்கலாம்
கணக்கு அறிவியல் கஷ்டம் இல்ல
நாம இஷ்டமாக கத்துக்கலாம்
(வாறோம்)
கற்பனைக்கு அளவும் இல்ல
கதைகள் பேச தடையும் இல்லை
விடுகதைகள் போட்டிடலாம்
கேள்விகளும் கேட்டிடலாம்
பள்ளிக்கூடம் பிள்ளை செல்ல
நாம பக்கத் துணையாக நிப்போமுங்க
(வாறோம்)
தானேனானே தன்னானன்னா
தானே தானானானே
தன்னானன்னா
*****