Friday, 17 December 2021

இல்லம் தேடிக் கல்வி – பிரச்சாரப் பாடல்

இல்லம் தேடிக் கல்வி – பிரச்சாரப் பாடல்

தானேனானே தன்னானன்னா

தானே தானானானே

தன்னானன்னா

 

வாறோம் வாறோம் வாறோமுங்க

நாங்க இல்லம் தேடி வாறோமுங்க

 அட வாறோம் நாங்க வாறோம் இப்ப வாறோம்

(வாறோம்)

 

வேலைக்கு தான் போகும் பிள்ளை

வீட்டுக்குள்ள இருக்கும் புள்ள

கடைத்தெருவில் சுத்தும் பிள்ளை

கம்மாக் கரையில் நிற்கும் புள்ள எல்லாரையும் கூட்டிட்டு

நம்ம இல்லம் தேடி மையத்துக்கு

(வாறோம் )

 

ஆடு மாடு மேய்ச்சுக்கிட்டு

ஆலை வேலை செஞ்சுகிட்டு

பள்ளிக்கூடம்  விட்டுப்புட்டு

பாவமாக நிக்கிறாங்க

ஊருகூடி வந்திடுங்க நீங்க ஒண்ணா சேர்ந்து நின்னுடுங்க

(வாறோம்)

 

அ, ஆ, இ, A, B, C ஆடிப்பாடி தெரிஞ்சிக்கலாம்

அண்ணா, அக்கா சொல்லித்தர அருமையாக புரிஞ்சுக்கலாம்

கணக்கு அறிவியல் கஷ்டம் இல்ல

நாம இஷ்டமாக கத்துக்கலாம்

(வாறோம்)

 

கற்பனைக்கு அளவும் இல்ல

கதைகள் பேச தடையும் இல்லை

விடுகதைகள் போட்டிடலாம்

கேள்விகளும் கேட்டிடலாம்

பள்ளிக்கூடம் பிள்ளை செல்ல

நாம பக்கத் துணையாக நிப்போமுங்க

(வாறோம்)

 

தானேனானே தன்னானன்னா

தானே தானானானே

தன்னானன்னா

*****

No comments:

Post a Comment