மயிலைப் போல ஆடி வந்தேனே! பாடல்
மயிலைப் போல ஆடி வந்தேன்
தக்க தகதிமி தோம்
குயிலைப் போலக் கூவி வந்தேன்
குக்கூ குக்கூ கூ
குதிரைப் போல ஓடி வந்தேன்
டக் டக் டக் டக் டக்
கிளியைப் போலப் பாடி வந்தேன்
கிக்கீ கிக்கீ கீ
ஆடி வந்தேனே!
ஓடி வந்தேனே!
கூவி வந்தேனே!
பாடி வந்தேனே!
விறகொடிச்ச காலம் எல்லாம்
போயே போச்சுங்க
சிறகு முளைச்ச சின்னப் பறவை
இப்போ நானுங்க
கம்பால் அடிச்ச காலம் எல்லாம்
மாறிப் போச்சுங்க
கனியாய் இனிக்கும் கல்வித்திட்டம்
கொண்டு வந்தாங்க
(ஆடி
வந்தேனே!)
சுத்தமா செஞ்சு வச்ச சத்துணவு
பத்திரமா மூடி வச்ச குடி
தண்ணீரு
பல்ல விளக்கி முகத்தைக் கழுவி
ரொம்பதான் ஜோரு
அம்மா போல வாத்தியாரு பார்த்து
வந்தாரு
(ஆடி
வந்தேனே!)
பத்துவகைத் திறன்களை பதியம்
போட்டாங்க
பொத்தி வச்ச மல்லிகை பூவா
பாடம் படிச்சோம்ங்க
மொத்தத்தில முத்து லெட்சுமி
கல்பனா சாவ்லா
அன்னை தெரசா போல நாங்க ஆகப்
போறோம்ங்க
(ஆடி
வந்தேனே!)
No comments:
Post a Comment