Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Monday, 25 July 2022

தமிழ் மெல்ல கற்போருக்கான மெய்யெழுத்துகள் அறிமுகம்

தமிழ் மெல்ல கற்போருக்கான மெய்யெழுத்துகள் அறிமுகம்

தமிழ் மெல்ல கற்போருக்கு மெய்யெழுத்துகளை அறிமுகம் செய்யும் போது அவர்கள் நன்கு அறிந்த சொற்களில் அமையும் மெய்யெழுத்துகளைச் சுட்டிக் காட்டி அறிமுகம் செய்வது நல்ல பலன் தரும். அதற்கேற்ப மாணவர்கள் நன்கறிந்த வகையில் மெய்யெழுத்து அமையும் சொற்களின் பயிற்சி அட்டவணை

மெய்யெழுத்துகள் அறிமுகம்

மெய்யெழுத்து

சொற்கள்

க்

அக்கா

மூக்கு

நாக்கு

ங்

சிங்கம்

தங்கம்

பொங்கல்

ச்

மச்சம்

தச்சர்

பச்சை

ஞ்

இஞ்சி

மஞ்சள்

பஞ்சு

ட்

பட்டம்

பாட்டி

தட்டு

ண்

கண்

அண்ணன்

தண்ணீர்

த்

அத்தை

தாத்தா

மெத்தை

ந்

பந்து

தந்தை

ஆந்தை

ப்

அப்பா

தொப்பி

பாப்பா

ம்

அம்மா

தம்பி

பழம்

ய்

கொய்யா

நாய்

வாய்

ர்

தயிர்

தேர்

ஊர்

ல்

பல்

கால்

அணில்

வ்

செவ்வாய்

செவ்வாழை

செவ்வானம்

ழ்

தமிழ்

கேழ்வரகு

தாழ்ப்பாள்

ள்

முள்

தோள்

வாள்

ற்

நெற்றி

காற்று

கீற்று

ன்

ஒன்று

பன்றி

கன்று

*****

தமிழ் மெல்ல கற்போருக்கான உயிரெழுத்துகள் அறிமுகம்

தமிழ் மெல்ல கற்போருக்கான உயிரெழுத்துகள் அறிமுகம்

தமிழ் மெல்ல கற்போருக்கு உயிரெழுத்துகளை அறிமுகம் செய்யும் போது அவர்கள் நன்கு அறிந்த சொற்களில் அமையும் உயிரெழுத்துகளைச் சுட்டிக் காட்டி அறிமுகம் செய்வது நல்ல பலன் தரும். அதற்கேற்ப மாணவர்கள் நன்கறிந்த வகையில் உயிரெழுத்து அமையும் சொற்களின் பயிற்சி அட்டவணை

உயிரெழுத்துகள் அறிமுகம்

உயிரெழுத்து

சொற்கள்

அம்மா

அப்பா

அக்கா

ஆடு

ஆப்பம்

ஆறு

இலை

இட்டலி

இஞ்சி

ஈட்டி

ஈசல்

ஈச்சமரம்

உப்பு

உண்டியல்

உழவர்

ஊதல்

ஊஞ்சல்

ஊறுகாய்

எறும்பு

எலி

எட்டு

ஏணி

ஏழு

ஏலக்காய்

ஐவர்

ஐந்து

ஐயா

ஒன்று

ஒன்பது

ஒட்டகம்

ஓணான்

ஓலை

ஓநாய்

ஔவை

ஔடதம்

ஔவியம்

*****

Tuesday, 25 January 2022

India and Tamil

India and Tamil

Tamil is one of the 22 Indian languages ​​listed in Schedule 8 of the Constitution of India.

It is noteworthy that Tamil was the first language to be declared a classical language in India.

On 12.10.2004 Government of India announced Tamil as a Classical language. Government Order No: No. IV - 14014/2004 - NI - II

It is noteworthy that Sanskrit was declared a classical language in 2005 after Tamil was declared a classical language.

Tamil scholars will primarily consider the steps taken by Parithimar Kalaignar to declare Tamil as a classical language and the document ‘Statement of the status of Tamil as a classical language’ by George L. Hart.

*****

இந்தியாவும் தமிழும்

இந்தியாவும் தமிழும்

            இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.

            இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழ் செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் 12.10. 2004. அதற்கான அரசாணை எண் : No. IV – 14014 / 2004 – NI – II

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பே 2005 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு பரிதிமாற்கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகளையும் ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் எழுதிய ‘Statement of the status of Tamil as classical language’ என்ற ஆவணத்தையும் தமிழறிஞர்கள் முதன்மையாகக் கருதுவர்.

*****