கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.08.2025)
1) தீபாவளிக்குள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணிசமாகக்
குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
2) 11 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பிரதமர்
நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
3) சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் முன்னேற்றம் காட்டுமாறு
தமிழக அரசை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4) நாகாலாந்து ஆளுநரான இல. கணேசன் உடல் நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 80.
5) காதர் மொகிதீனக்குத் தகைசால் தமிழர் விருதையும், இஸ்ரோ தலைவர்
வ. நாராயணனுக்கு அப்துல் கலாம் விருதையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின
விழாவில் வழங்கினார்.
6) காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால்
60 பேர் உயிரிழந்துள்ளனர். 69 பேர் மாயமாகி உள்ளனர்.
7) 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8) டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாதிமிர் புதின் சந்திப்பைத்
தொடர்ந்து இந்தியாவுக்கான அதிக வரி விதிப்பை சில வாரங்கள் தள்ளி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
9) தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 பேர்
உயிரிழந்துள்ளனர்.
Education & GK News
1) Prime Minister Narendra Modi has mentioned in his
Independence Day speech that the Goods and Services Tax (GST) will be
significantly reduced by Diwali.
2) Prime Minister Narendra Modi has inaugurated highway
projects worth Rs 11,000 crore.
3) The High Court has directed the Tamil Nadu government
to make progress in removing the Seemaik Karuvel trees.
4) Nagaland Governor L. Ganesan passed away due to health
problems. He was 80.
5) Tamil Nadu Chief Minister M.K. Stalin presented the
Tagaisal Tamil Award to Kader Mohideen and the Abdul Kalam Award to ISRO
Chairman V. Narayanan at the Independence Day function.
6) 60 people have died in the massive floods caused by
cloudbursts in Kashmir. 69 people are missing.
7) The Meteorological Department has said that there is
a possibility of moderate rain in Tamil Nadu till the 21st.
8) Trump has announced that he will postpone the
imposition of high tariffs on India for a few weeks following the meeting
between Donald Trump and Vladimir Putin.
9) 20 people have died of rabies in Tamil Nadu in seven
and a half months.
No comments:
Post a Comment